இந்துசமயமன்றம் சார்பில் இருளர் பகுதியில் இனிய பொங்கல் விழா

ஸ்ரீகுருப்யோ நம!
11.01.2021 திங்கட்கிழமை ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் உள்ள ஒரத்தூர் ஊராட்சி இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்துசமயமன்றம் சார்பில் மூன்றாவது ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அந்த பகுதி வினாயகர் மற்றும் ஸ்ரீகன்னியம்மன் கோவிலில் புது வஸ்த்ரம் சாற்றி உலகநலன் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது.ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபாவின் ஆதரவில் செல்வி ராஜேஸ்வரி (US), அருமை சகோதரர் திரு.ராஜ்மோகன் அவர்களின் பங்களிப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமிகு.N.D.சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒரத்தூர் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில், இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் தலைமையில் ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிமன்றம் சிவஸ்ரீ.மணிவண்ணன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், சமயமன்ற அன்பர்கள் ஸ்ரீ.சந்திரநாத்மிஸ்ரா,ஸ்ரீ.சாயிராம், ஸ்ரீ.ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்றனர்.இருளர் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களுடன் புது போர்வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெற உதவிய சமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி.கௌரி வெங்கட்ராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை நேற்று பக்தியுடன் கொண்டாடப்பட்ட அடுத்தநாள் இந்த நல்ல நிகழ்ச்சி அதன் தொடர்ச்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஹரஹர சங்கர! ஜயஜய சங்கர!

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை நாள்!

ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை நாள் இன்று!
இந்துக்கள் அனைவரும் பக்தியோடு வணங்கவேண்டிய மகான் அவர்.
ஒரு நூற்றாண்டு காலம் உலகை நல்வழிப்படுத்த தவம் செய்த ஞானி.
வேதம், உபநிஷதங்கள், புராணம் என அனைத்திலும் நிகரற்ற புலமை பெற்றவர்.
மக்களின் அன்றாட வாழ்விற்கு எளிய இனிய வாழ்க்கை முறையை உபதேசித்தவர்.
பரமேஸ்வரஸ்வரூபமாக விளங்கியவர்.
மோனமும், ஞானமும், தவமும், கருணையும் ஒருங்கே அமைந்த பரம்பொருள்.
இந்துசமயமன்றம் அவர் அருளாசியுடன் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு.
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடிக்கமலங்களில் பக்திபூர்வமாக நமஸ்கரித்து இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது.
இவண்,
அமைப்பாளர்கள் மற்றும் இந்துசமயமன்ற அன்பர்கள்.


ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றம் சார்பில் இன்று சமயமன்ற அன்பர்கள் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை புண்யதினமான இன்று தங்களால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு செய்திடுவோம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம், மார்கழி மாதமானதால் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி, ஸ்ரீபெரியவா இயற்றிய ஸ்ரீதுர்கா பஞ்சரத்னம், ஸ்ரீதோடகாஷ்டகம் போன்ற ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்வோம். ஸ்ரீமஹாபெரியவர் உபதேசித்த நல்ல விஷயங்களை மேற்கொள்ள கடைபிடிக்க சங்கல்பம் செய்வோம்!


ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் ஆராதனை ஸ்பெஷல் : வளசரவாக்கம் ஸ்ரீகாசிராம பாகவதரின் ஸ்ரீமஹாபெரியவர்மீதான கீர்த்தனை.

இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் ஆராதனை ஸ்பெஷல்;
பாபநாசம் ஸ்ரீமதி.லலிதா வெங்கடேசன் அவர்களின் சொற்பொழிவு.

🙏
அனுஷத்தின்
அனுக்ரஹம்..!
💐🙏💐
*
ஜெய ஜெய
சங்கர…!
ஹரஹர
சங்கர…!
🙏
காமாட்சியின்
கடாட்ஷம்…!
சிவனார்உருத்
திராட்ஷம்…!
💐
உலகப்புகழ்
பெற்றவர்…!
நாட்டுநடப்பைக்
கற்றவர்…!
💐
முக்காலமும்
அறிந்தவர்…!
மக்கள்மனதைப்
புரிந்தவர்…!
💐
காஞ்சி மகாப்
பெரியவர்…!
எல்லோருக்கும்
உரியவர்…!
💐
“உம்மாச்சி
தாத்தா”
ஆனவர்…!
மழலையர்க்குத்
தேனவர்…!
💐
தெய்வமாக
நின்றவர்…!
ஐம்புலனை
வென்றவர்…!
💐
வள்ளலாக
வாழ்ந்தவர்…!
சிவநினைவில்
ஆழ்ந்தவர்…!
💐
கடைக்கண்
பார்வை
போதுமே…!
சந்தோஷம் எப்
போதுமே …!
💐
ஆயகலைகள்
அறுபத்து
நான்கும்…!
பெற்றாள்
சரஸ்வதி…!
💐
அதுபோலவே
பெற்றவர்…!
சந்திர
சேகரேந்திர
சரஸ்வதி..!
💐
இந்தியா
முழுக்க
நடந்தவர்…!
ஆன்மிகப்
பணிகளைத்
தொடர்ந்தவர்..!
💐
நடமாடும்
தெய்வமாய்
நாட்டில் உலா
வந்தவர்…!
💐
அன்பே சிவம்
என்றவர்..!
அருளை
வாரித்
தந்தவர்…!
💐
ஜாதிமத
பேதங்க..!
அவரிடத்தில்
ஏதுங்க..?
💐
குழந்தை மனம்
கொண்டவர்…!
தேனாரமுதம்
உண்டவர்…!
💐
கடவுளையே
கண்டவர்…!
கண்டுணர்ந்து
விண்டவர்…!
💐
“தெய்வத்தின்
குரல்”
அவருதான்…!
அவரு போல
எவருதான்..?
💐
காஞ்சி மகாப்
பெரியவா…!
இரக்க மனசுக்
குரியவா…!
💐
காஞ்சி
என்றால்
காமாட்சி…!
நினைவில்
எவர்க்கும்
எழுவது…!
💐
அடுத்து
நினைவில்
எழுவது…!
இவரைத்தானே
தொழுவது…!
💐
காம கோடி
பீடமே…!
கரையேற்றும்
ஓடமே…!
💐
வேதகீத
நாதமே…!
ஆன்ம ஞான
போதமே…!
💐
காஞ்சி மகாப்
பெரியவா…!
வாழ்க ! வாழ்க !
வாழ்கவே…!
💐
நாடும் வீடும்
வாழ்கவே…!
நமசிவாய
சூழ்கவே…!
💐
காஞ்சி மகாப்
பெரியவா …!
பாத மலர்
பணிவமே…!
💐
பாத மலர்
தமை எடுத்து
நம்தலையில்
அணிவமே…!
💐
வருக ! வருக !
வருகவே..!
காஞ்சி மகான்
வருகவே…!
💐
வையகத்தே
வறுமையற்று
வாழ வரம்
தருகவே…!
💐🙏💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
10.01.2021.
தினம்ஒருகவிதை
எண்.792.
🦚
ஶ்ரீகாஞ்சி
மகாப்பெரியவா
மலர்ப்பதம்
போற்றி போற்றி!
💐🙏💐

இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் ஆராதனை ஸ்பெஷல் :
புலவர் விசூர் மாணிக்கனாரின் கவிதை

தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை

தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்தமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.

புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.

இந்த கடலாடி கிராமத்தில் இந்துசமயமன்றம் கிளை செயல்படுகிறது. வருடாவருடம் அன்னதானம் மார்கழி ஒன்றாம் தேதி சமயமன்றம் சார்பில் செய்யப்படுகிறது.

நேற்று மார்கழி ஒன்றாம்நாள் கடலாடி இந்துசமயமன்றம் அமைப்பாளர் திரு ஜெயவேலு அவர்கள் வழக்கம்போல் பர்வதமலை ஈசனின் பிரசாதப்பை சமயமன்றம் சார்பில் வழங்கினார். புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.

Dhanur Maasam – மார்கழி 1

டிசம்பர் 15ஆம் தேதி, 1944 (மார்கழி 1ஆம் தேதி):

திருவண்ணாமலைக்கு வடமேற்கே சுமார் 17 மைல் தூரத்திலுள்ள கடலாடி என்னும் ஊரில் “பர்வத மலை” என்று ஒரு மலை உள்ளது. அதற்கடுத்து, மிகவும் உயர்ந்து கம்பீரமாக விளங்கும் கற்பாறை ஒன்று காட்சி அளிக்கிறது. அந்த
பாறையின் உச்சியில் ஒரு சிவாலயம் உள்ளது. அதில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் என்பது பெயர். ஸ்ரீ சைலத்தின் ஸ்வாமி பெயர் அங்கு அமைந்திருப்பதுடன், அங்கு ஒரு பாதாள கங்கையும் காணப்படுகிறது. மலையின் மீதுள்ள வில்வ மரங்களில்,9 தளங்கள் உள்ள மஹாவில்வ மரமும் காணப்படுகிறது. அரிதாகக் காணப்படும் மகாவில்வம் பரமசிவனின் பூஜைக்கு மிகவும் ஏற்றது.

பர்வத மலையைப் பிரதக்ஷிணம் செய்ய ஸ்வாமிகள், 1944 டிசம்பர், 15ஆம் தேதி [மார்கழி 1, கிருஷ்ண பக்ஷ அமாவாசை], மாலை 3 மணிக்கு கால்நடையாகச் சில சிஷ்யர்களுடனும், அவ்வூர் கிராம அதிகாரிகளுடனும் புறப்பட்டார்கள். மனித சஞ்சாரமே இல்லாத கரடு முரடான, முள் செடிகள், முள் மரங்கள் நிறைந்த அந்தப் பாதையை வெகு சிரமத்துடன் கடந்து, மாலை 6 மணிக்குச் செய்யாறும், மிருகண்டு நதியும் சேரும் இடத்தை அடைந்தார்கள். மாலை அனுஷ்டானங்களை அங்கே முடித்துக் கொண்டார்கள். அன்று அமாவாசை ஆதலால் தீவட்டிகள் முதலான வெளிச்சங்களுடன் கிரிப்பிரதக்ஷிணம் மேலே தொடங்கப் பெற்றது. குன்றுகளின் மீது ஏறியும், இறங்கியும் சுமார் 25 மைல் நடந்து, இரவு 10 மணிக்குக் கடலாடி விஷ்ணு ஆலயத்தில் அமைக்கப் பெற்றிருந்த முகாமை ஸ்வாமிகள் அடைந்தார்கள். அன்றிரவு வெள்ளிக்கிழமை பூஜையை ஸ்வாமிகள் அவ்வாலயத்திலேயே நடத்தினார்கள்.

  • ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்

Pradosha Shankara Pratyaksha Shankara!

ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்

பழம்பெரும் சைவ ஆதீனங்களில் ஒன்றும், தொண்டைமண்டல சைவ ஞானபீடமுமாகிய தொண்டைமண்டல ஆதீனத்தின் 232வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள் முக்தி அடைந்தார்கள். தமிழிலும் சைவத்திலும் மிகுந்த புலமையும் ஞானமும் பெற்ற ஞானாசிரியராக விளங்கிய ஸ்ரீஸ்வாமிகளின் தொண்டு போற்றி வணங்குதற்குரியது. ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிமலர்களில் இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கிறோம். இவண், மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள். இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.

நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம்

நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம் இன்று 29.11.2020 ஏற்றப்பட்டது. இந்துசமயமன்றம் சார்பில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.இனிப்பு வழங்கப்பட்டது.