இருள் நீக்கி தந்த நல்மணியே

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் இரண்டாம் ஆண்டு ஆராதனை.

“இருள் நீக்கி தந்த நல்மணியே – மன
மருள் நீக்க வந்த மாமணியே
தவக்கனலாக மிளிரும் தூமணியே
சிவக்கனலாக ஒளிரும் அருள்மணியே
சகம் போற்றி புகழும் குருமணியே -நல்
அகம் வாழ்த்தி பணியும் ஜயமணியே
பதம் போற்றி நின்றோம் தவமுனியே
பவம் போக்கி அருள்வாய் சிவமணியே’

ஸ்ரீபுதுப்பெரியவரின் பொற்பதங்களில் நமஸ்காரங்களுடன்,
-புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன்

இரண்டாம் வருஷம் குரு ஆராதனை

ஸ்ரீசங்கரபகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரரும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர்களின் ப்ரதம சிஷ்யரும், பாரத தேசமெங்கும் வலம்வந்து சனாதன ஹிந்து தர்மத்தை எளிய மக்களுக்கும் போதித்தவரும், இந்து சமயமன்றத்தை பட்டிதொட்டியெல்லாம் வளர்த்தவரும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நலனிற்காக பெரிதும் பாடுபட்டவருமான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் தற்போது ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடத்தில் ப்ருந்தாவனப்ரவேசம் செய்து இரண்டாம் வருஷம் குரு ஆராதனை இன்று பக்தியுடன் நடைபெறுகிறது.இந்த புண்ணிய நன்னாளில் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா தனது ஹ்ருதயபூர்வமான அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
இவண்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா அன்பர்கள்.

ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் 52வது ஜயந்தி விழாவில் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் அருளிய கோளறுபதிகம்

ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் 52வது ஜயந்தி விழாவில் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் அருளிய கோளறுபதிகம் சிறு பிரதிகள் இந்துசமயமன்றம் சார்பில் வெளியிடப்பட்டு ஸ்வாமிகள் அருளாசியுடன் அனைவருக்கும் ஸ்ரீமடம் ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக சமாஜத்திலும் நேற்று இரவு ஸ்ரீமஹாசிவராத்திரியில் திருக்கோவில்களிலும் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது. நமது சமயமன்ற மாநில அமைப்பாளராக இருந்து எங்களை வழிநடத்திய செஞ்சொல்மணி புலவர் பு .மா. ஜயசெந்தில்நாதன் ஐயா அவர்கள் இதுபோன்ற சிறுபிரதிகளை அதிகம் வெளியிட்டு மக்கள் அதை படிக்க ஆர்வமேற்படுத்துவார். அவர்கள் அடியொற்றி திரும்பவும் இதுபோன்ற பிரதிகளை இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீபெரியவர் அனுக்ரஹத்துடன் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீபெரியவர்கள் ஐயந்தியையொட்டி நமது மன்றத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற கோளறுபதிகம் சிறு பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

சிவாய நம!
இந்துசமயமன்றம் சார்பில் நேற்று இரவு மஹாசிவராத்திரி புனித நாளையொட்டி இரவு முழுவதும் திருவாசக முற்றோதுதல் பல ஆலயங்களில் நடைபெற்றது. டிபன்ஸ்காலனி கோவிலில் ருத்ராக்ஷ லிங்கம் எழுந்தருளச்செய்து பூஜைகள் நடந்தது. அதேபோல் பல கிராமக்கோவில்களுக்கு திருவிளக்கேற்ற நல்லெண்ணெய் திரியுடன் வழங்கப்பட்டது. நமது சமயமன்ற அன்பர்களால் சுடச்சுட பாதாம்பால் மற்றும் குட் டே பிஸ்கட் சுமார் எட்டு சிவபெருமான் திருக்கோவில்களில் வழங்கப்பட்டது. ஸ்ரீபெரியவர்கள் ஐயந்தியையொட்டி நமது மன்றத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற கோளறுபதிகம் சிறு பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் பிறந்தநாள் இன்று

தமிழ் தாத்தா மகாமகோபாத்யாய, தாக்ஷிணாத்ய கலாநிதி, முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தமிழ் இலக்கிய புராண மற்றும் பலவகை நூல்களை அழிவின் விளம்பிலிருந்து காப்பாற்றிய பெருமை இவரைச்சாரும். தமிழ் பழம்பெருமையோடிருப்பதற்கு காரணகர்த்தர் இவரேயாவார். அன்னாரது பிறந்தநாளில் அவரின் பொன்னார்திருவடிகளில் இந்துசமயமன்றம் வணங்கி மகிழ்கிறது.

கட்டுரை வெளியாகியுள்ளது

“ஓம் சரவணபவ” தமிழ் மாத இதழ் பிப்ரவரி இதழில் நமது இந்துசமயமன்றம் சார்பில் நடந்த இருளர் பகுதி பொங்கல் விழா மற்றும் மகாபெரியவர் ரதம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.

கூடுவாஞ்சேரி ஸ்ரீமாமரசுயம்பு சித்திவினாயகர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்த தருமபுர ஆதீனம்

16.02.2020 ஞாயிறு இரவு கூடுவாஞ்சேரி ஸ்ரீமாமரசுயம்பு சித்திவினாயகர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்த தருமபுர ஆதீனம் 27வது பட்டம் குருமஹாசந்நிதானம் ஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு இந்துசமயமன்றம் சார்பில் வரவேற்று நமது சமயமன்ற மலரான “சிவாலய துதிமலர்” புத்தகம் மற்றும் சமயமன்ற பிரசுரங்கள் வழங்கி நமது மன்றம் ஆற்றும் ஆன்மீக சேவைகளை மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் விளக்கினார். ஸ்ரீமஹாசந்நிதானம் மிக்க மகிழ்வுடன் அருளாசி வழங்கினார். அவ்வமயம் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீதர், சமயமன்ற கூடுவாஞ்சேரி அமைப்பாளர் திருமதி. தாரா தேவராஜ், திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் திருமதி. சரசு ஏழுமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Distributed certificates and prizes at Umayalpuram aided school

இந்துசமயமன்றம் பாபநாசம் கிளை சார்பாக அதன் அமைப்பாளர் திருமதி. லலிதா வெங்கடேசன் அவர்கள் (சுந்தரகாண்டம் தினமும் பதிவிடுபவர் மற்றும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர்)திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் உமையாள்புரம் அரசு உதவிபெறும் பள்ளியில் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள்.

திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் திருவிடைமருதூர் சங்கரா வித்யாலயா, சிவராமபுரம் சங்கரா வித்யாலயா, பெரணமல்லூர் பள்ளி ஆகியவற்றிலும் நடத்தப்பெற்று சான்றிதழ் மற்றும் புத்தகப்பரிசுகள் வழங்கப்பட்டது.