இந்துசமயமன்றம் சார்பில் திருக்கோவில் தீபமேற்ற எண்ணெய் வழங்கும் திட்டத்தின்கீழ் ஸ்ரீமஹாபெரியவர் மஹோத்ஸவத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள், மஹோத்ஸவத்திற்கு வந்திருந்த அன்பர்கள் மனமுவந்து அளித்த எண்ணெய் தென்எலப்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் சிவனாகரம் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி திருக்கோவிலில், ஒத்திவாக்கம் ஒத்தீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் நெற்குணம் ஈஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் ஸ்ரீமல்லீஸ்வரர் திருக்கோவில், திருவள்ளுர் மாவட்டம் மாடம்பாக்கம் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோவில், கீழ்பசார் ஸ்ரீசிவனார் திருக்கோவில் ஆகியவற்றிற்கு அத்திருக்கோவில் பொறுப்பாளர்களிடம் நேரிடையாக வழங்கப்பட்டது. மற்ற கோவில்களுக்கு நேரில் சென்று திட்ட பொறுப்பாளர் வழங்குவார்.
ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் இரண்டாம் நாள்
நங்கநல்லூர் ஸ்ரீராமமந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் காலை பரமேஸ்வர ஸ்வரூபமான நம் பரமாச்சாரிய ஸ்வாமிகளுக்கு மஹாருத்ர ஜப பாராயணம் மற்றும் அபிஷேகம் வேதோக்தமாக நடைபெற்றது. நூற்று இருபத்தியோருபேர் ஜபிக்க வேண்டிய ஸ்ரீருத்ர ஜபம் இருமடங்கு அன்பர்களால் பக்தியுடன் அந்த வேதநாயகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆசார்யர்களை நினைத்து நாம் செய்யும் நல்ல செயல்கள் இருமடங்கு பலனை நமக்கு தரும் என்பது நிதரிசனமானது.ஸ்ரீபெரியவா சரணம். அதன்பிறகு ஸ்ரீமஹாபெரியவருக்கு ஸ்ரீருத்ர த்ரிசதி அர்ச்சனை, ஸ்ரீஷோடசோபசார பூஜை நடைபெற்றது. ஸ்ரீபெரியவா சரணம்!
டாக்டர் கணேஷ் இன்னிசை முதல்நாள், ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீபாலப்பெரியவாளின் அற்புதமான திட்டம்” சம்ப்ரதாயா” திருப்பதி குழந்தைகளின் இன்னிசை ஸ்ரீமதி.லக்ஷ்மி மாந்தாதா அவர்கள் மேற்பார்வையில் இரண்டாம் நாள்.
ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சி
நங்கநல்லூர் ஸ்ரீராமமந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் முதல்நாள் (20.07.18) வெள்ளிக்கிழமை ( ஆஷாட நவராத்திரியில் அஷ்டமி சேர்ந்து வந்த ஆடி வெள்ளிக்கிழமை விசேஷம் அம்பாளுக்கு ) ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், அர்ச்சனை, ஸ்ரீமஹாபெரியவாளை அம்பாளாக வரித்து ஷோடசோபசார பூஜை, ஸுவாஸினி பூஜை (16 பேறு என்று அபிராமி பட்டர் சொல்வதை நினைவுகூறும் வகையில் பதினாறு வயதான ஸூமங்கலிகளை அமர்த்தி சாஸ்த்ரோக்தமாக 16 தம்பதிகள் பூஜித்தல், ஸ்ரீபார்வதீ பரமேச்வர அம்சமாக, ஸ்ரீலக்ஷ்மீ நாராயண அம்சமாகவும் வரித்து தம்பதி பூஜை, வடுக பூஜை ( அஷ்டமி வடுக பைரவருக்கு விசேஷ நாள்) என அனைத்து நிகழ்ச்சிகளும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கருணையால், ஸ்ரீஆசார்யாள் ஸ்ரீ பாலபெரியவர் அனுக்ரஹித்தபடி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்துசமயமன்றம் அறிமுகக்கையேட்டினை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் படித்து ஆசீர்வதித்தார்கள்
ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்
கடந்த 24.06.18 ஞாயிறு அன்று காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம். கல்லூரி முதல்வரும் சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான முனைவர் ஸ்ரீகே.ஆர்.வெங்கடேசன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்று இருபது ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர். இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீ.எஸ்.திருமகன் அவர்கள், காந்தி கிராம் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஸ்ரீ.சேதுராமன் அவர்கள், திரைப்பட நடிகர் ஸ்ரீ அருள்மணி அவர்கள், தாமல் ஸ்ரீ.சரவணன் அவர்கள், சொல்லின்செல்வர் ஸ்ரீபி. என்.பரசுராமன் அவர்கள் மற்றும் அமித் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ.ஜி.திருவாசகம் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவுவிழா ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் மாலை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் அருளுரை மற்றும் ஆசீர்வாதங்களுடன் நிறைவுபெற்றது. கலந்துகொண்ட ஆசிரியப்பெருமக்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ், நினைவுக்கோப்பை வழங்கப்பட்டது. அடியேன் மற்றும் ஸ்ரீகுமார் அவர்கள் இந்துசமய மன்றம் சார்பில் பங்கேற்றோம்.
லக்ஷகாயத்ரி ஜப ஹோம வைபவம்
ஸ்ரீகுருப்யோ நம! நேற்றைய முந்தைய தினம் இந்துசமயமன்றம், ஸ்ரீபெரியவா இல்லம் பக்தர்கள், அனுமன்சேனா, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் இணைந்து நடத்திய லக்ஷகாயத்ரி ஜப ஹோம வைபவம் மிக ச்சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீபெரியவா இல்லம் ஸ்ரீபிரகாஷ் அவர்களும் அவர்களின் குழுவினரும் மற்றும் மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஸ்ரீசாய்ராம் மற்றும் குழுவினர், அனுமன்சேனா ஸ்ரீஸ்ரீனிவாச ஆழ்வார்ஜி மற்றும் குழுவினர் யக்ஞத்தில் பங்கேற்று புனித கைங்கர்யத்தில் ஈடுபடுத்திக்கொண்டனர். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தமிழ்த்தலைவன் சபா ஸ்வாமி எழுந்தருளி ஸ்ரீபெரியவா புகழையும், அவருக்கும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்குமான உரையாடல்களை எடுத்துரைத்தார். எண்பத்திஆறு பேர் ஜபயக்ஞத்தில் பங்கேற்றனர். சஹஸ்ர காயத்ரி ஹோமத்தில் எண்மர் பங்கேற்றனர். அனைவருக்கும் ஸ்ரீபெரியவா பாதுகை அபிஷேக தீர்த்தம், பால் மற்றும் சிற்றுண்டி பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீபெரியவா இல்லம் முழுக்க ஸ்ரீகாயத்ரிதேவி மந்த்ர அதிர்வுகள் இரண்டு மணிநேரம் நிறைந்து இருந்தது. மகளிர் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். ஸ்ரீபெரியவா இல்லம் பிரகாஷ் மிக அருமையான மனிதர். நாம் நமது மன்றத்தின் சார்பில் கேட்டவுடன் இடமும் அளித்து வேண்டிய வசதிகளும் செய்து தந்து உதவினார். நேற்று ஸ்ரீபெரியவாளிடம் ஜபயக்ஞ விஷயத்தை அடியேனும் ஸ்ரீமதிகௌரி வெங்கட்ராமன் அவர்களும் திருச்செவி சார்த்தி புகைப்படங்களை காண்பித்தோம். ஸ்ரீபெரியவா மிகவும் சந்தோஷத்துடன் அனுக்ரஹித்தருளினார்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் கைங்கர்யத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹ கடாக்ஷம் பரிபூரணமாக இருக்க ஸ்ரீசரணர்களின் கமலமலரடிகளில் ப்ரார்த்திக்கிறோம்.
லக்ஷகாயத்ரி ஜபம்
இன்று இந்துசமயமன்றம் சார்பில் நடந்த லக்ஷகாயத்ரி ஜபயக்ஞத்தில் ஸ்ரீயோகசந்தோஷபீடம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொள்ள புதுப்பெருங்களத்தூர் அருள்மிகு ஸ்ரீகாருண்யாம்பிகை சமேத காரணீஸ்வரஸ்வாமி திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சாக்தஸ்ரீ தீ.வி.சந்திரசேகர சர்மாஜி அவர்கள் விஸ்தாரமாக சங்கல்பம் பண்ணிவைத்து காயத்ரி உபாசனை பற்றிய விளக்கம் அளித்தார்கள். பெருங்களத்தூர் இந்துசமயமன்றம் ஸ்ரீஷ்யாம் மற்றும் வண்டலூர் இந்துசமயமன்றம் அமைப்பாளர் ஸ்ரீமதி அக்ஷயா ஸ்ரீராம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து மதிய உணவும் அளிக்கப்பட்டது. ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் ஸ்ரீஅனுமன் குரல் மாதஇதழின் இந்த மாத பிரதியை அனைவருக்கும் அளித்து ஆசீர்வதித்தார்கள். இந்துசமயமன்றம் ஸ்ரீமடம் அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் தலைமையில் அனுமன்சேனா ஸ்ரீஆழ்வார்ஜி முன்னிலையில் நிகழ்ச்சி ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது . அடுத்த மாத நிகழ்ச்சி கிழக்கு தாம்பரம் சேலையூரில் வருகிற ஜூன் மாதம் 17ந்தேதி ஸ்ரீகாயத்ரி அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் ஸ்ரீஆழ்வார்ஜி ஏற்பாட்டில் நடைபெற உள்ளது.
ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் 125வது ஜயந்தி – ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர்
இன்று இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் சார்பில் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் 125வது ஜயந்தி மஹோற்சவத்தையொட்டி அகண்ட ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் மண்டலியினர் ஸ்ரீராம்ஜி, ஸ்ரீகணேசன்ஜி, ஸ்ரீராமானுஜம், ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி அவர்கள் தலைமையில் வந்திருந்து நடத்தினர். காலை மறைமலைநகர் ப்ரம்மஸ்ரீ.ராமமூர்த்தி சர்மா அவர்களின் வேத கோஷத்துடன் ஸ்ரீருத்ர பாராயணம், ஸூக்தாதிகள் பாராயணம் சிறப்பாக நடந்தேறியது. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் த்ரிசதீ அர்ச்சனை ஸ்ரீபவானி அம்மன் சந்நிதியில் ஸ்ரீமஹாமேருவிற்கு நடைபெற்றது.அனுமன்சேனா அமைப்பாளர் ஸ்ரீஆழ்வார்ஜி, ஊரப்பாக்கம் இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.பார்வதி மோகன், படப்பை இந்துசமயமன்றம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி, மறைமலைநகர் இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.பார்வதிரமணி , மஹாலக்ஷ்மிநகர் இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.வாசுகிபன்னீர்செல்வம், ஸ்ரீபரணிதரன், டிபன்ஸ்காலனி இந்துசமயமன்றம் ஸ்ரீநாராயணன் ஆகியோர் வந்திருந்தனர். விழா நிறைவாக ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் ஆசியுரையாற்றினார். முன்னதாக விழா ஒருங்கிணைப்பாளரும் இந்துசமய மன்றம் அமைப்பாளருமான புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுவையான மதிய உணவு ஸ்ரீயோகசந்தோஷபீடம் சார்பில் ஸ்ரீஆறுமுகம் அவர்கள் கைவண்ணத்தில் அனைவருக்கும் பிரசாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஸ்ரீகாஞ்சி ஆசார்யர்களின் அருளாலும் அனுமனின் அனுக்ரஹத்துடனும் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீயோகசந்தோஷபீடம் மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் 125வது ஜயந்தி
ஸ்ரீயோகசந்தோஷபீடம் மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் 125வது ஜயந்தி மஹோற்சவத்தையொட்டி அகண்ட ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நந்திவரம் கூடுவாஞ்சேரி மஹாலக்ஷ்மிநகர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் வளாகத்தில் வருகிற 26ந்தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 7.30 மணிக்கு மறைமலைநகர் ப்ரம்மஸ்ரீ.கண்ணன் பாகவதர் அவர்கள் ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம், 8.00 மணிக்கு ப்ரம்மஸ்ரீ. ராமமூர்த்திசர்மா அவர்கள் வேத கோஷம், 8.50 மணிக்கு அகில இந்திய விஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் ஸ்ரீகணேசன்ஜி தலைமையில் அகண்ட ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் துவங்கி ஸ்ரீகாஞ்சி ஆசார்யாள் அனுக்ரஹத்துடன் டாக்டர் ஸ்ரீஜெய் மாருதிதாச ஸ்வாமிகள் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் வருக! ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவருளையும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் குருவருளையும் பெற்றுய்ய ப்ரார்த்திக்கிறோம். இவண், ஸ்ரீயோகசந்தோஷபீடம், ஸ்ரீநந்தி் சித்தர் பீடம், இந்துசமயமன்றம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் மண்டலிகள்.
லக்ஷகாயத்ரி ஜப யக்ஞம்
லக்ஷகாயத்ரி ஜப யக்ஞம் இந்த மாதத்தில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் இந்த மாதம் புதுப்பெருங்களத்தூர் அருள்மிகு ஸ்ரீகருணாம்பிகை சமேத ஸ்ரீகாரணீஸ்வரஸ்வாமி தேவஸ்தானத்தில் வரும் 27.5.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் துவக்கப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் காலை அனுஷ்டானங்களை முடித்து பஞ்சபாத்ர உத்தரணியுடன் சம்ப்ரதாயப்படி உடையணிந்து வர வேண்டுகிறோம். இவண், இந்துசமயமன்றம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் கிளை மன்றங்கள், ஸ்ரீயோகசந்தோஷபீடம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு.