இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீஆதிசங்கரருக்கு ருத்ராபிஷேகம்

 

ஸ்ரீகுருப்யோ நம! நேற்றைய முந்தைய தினம் ஆதம்பாக்கம் வேல்நகர் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில் ( இந்துசமயமன்றம் ஆதம்பாக்கம் கிளை) ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோற்சவத்தையொட்டி இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீஆதிசங்கரருக்கு ருத்ராபிஷேகம் மற்றும் வேத உபசாரங்கள் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீரகுநாத லக்ஷ்மணன் டிரஸ்ட் ஸ்ரீவைத்யனாதன் அவர்கள் தலைமையில் வேதோக்தமாக பூஜை நடைபெற்றது. அபிஷேகத்தை ஸ்ரீவித்யா உபாசகர் “அபினய ஸரஸ்வதி ” சாக்தஸ்ரீ. ஸ்ரீநரசிம்மப்ரசாத் குருஜி அவர்கள் நடத்தினார்கள். ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெய்மாருதிதாச ஸ்வாமிகள், ஸ்ரீ ஜே.கே.சிவன், திரு.சாணுபுத்திரன், திண்டிவனம் ஸ்ரீநாகராஜய்யர், ஸ்ரீரமணி ஹால் ஸ்ரீமகேஷ், ராம் ராம் சுந்தரராமன், சிவாய நம ஸ்ரீலக்ஷ்மிநாராயணன் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற இந்துசமயமன்றத்தின் ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோற்சவத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சத்சங்கம் நடந்தது. ஸ்ரீஅனுமன் குரல் மாதஇதழின் ஐந்தாவது ஆண்டு வெளியீட்டு விழா ஸ்ரீஜே.கே.சிவன் அவர்கள் வெளியிட்டார். அனுமன்சேனா அமைப்பாளர் ஸ்ரீஆழ்வார்ஜி மற்றும் ஸ்ரீகுமார் அவர்கள், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம் அவர்கள் கலந்துகொண்டனர். மாஸ்டர் குருவிட்டலின் ஸ்ரீசங்கர சரித்திரம் சொற்பொழிவு, ஊரப்பாக்கம் ஸ்ரீசர்வமங்களா பஜன் மண்டலி ஸ்ரீமதி. சாந்தாபாலசுப்ரமணியன் குழுவினர் இன்னிசை , பஜன் நடைபெற்றது. அடியேன் விழாவிற்கு அனைவரையும் வரவேற்றும், இந்துசமயமன்றத்தின் அமைப்பாளர் ஸ்ரீமதி.கௌரிவெங்கட்ராமன் அவர்கள் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது. வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நன்றாக நடைபெற தோன்றாத்துணையாய் உடனிருந்து அருள்பாலித்த ஸ்ரீஆசார்யாள் திருவடிமலர்களில் அனந்தகோடி நமஸ்காரங்கள் சமர்ப்பிக்கிறேன்.

 

அச்சிறுபாக்கத்தில் நடந்த சமயபோதனை முகாம்

சிவாய நம! அச்சிறுபாக்கத்தில் நடந்த சமயபோதனை முகாமிற்கு இன்று சென்று கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினேன். ஸ்ரீயோகசந்தோஷபீடம் டாக்டர் ஸ்ரீஜெய் மாருதிதாச ஸ்வாமிகள் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி ஆசியுரை வழங்கினார். அச்சிறுபாக்கம் இந்துசமயமன்றம் சைவத்திரு.முருகப்பன் அவர்கள் பலவருடங்களாக இப்பகுதியில் கோடை விடுமுறையில் இம்முகாமை சிறப்பாக நடத்திவருகிறார். காஞ்சி ஸ்ரீமடத்தின் பிரசாதம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் சைவ சமய மன்றம் மற்றும் தஞ்சாவூர் அப்பர் தமிழ் மன்றம் சைவத்திரு. ஆம்பல்.முருக.வைத்தியலிங்கம் தலைமையில் ஆசிரியர் பெருமக்கள் இந்த முகாமில் சேவைமனப்பான்மையுடன் பயிற்சியளிக்கிறார்கள்.

 

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிவாய நம! நாளை பிறக்கும் விளம்பி வருஷம் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி ததும்பும் புத்தாண்டாக, வளம், நலம், மனமகிழ்ச்சி என வாழ்வில் அனைத்து நல்லவையும் பெற்று, குருவருளுடன் திருவருளும், குலதேவதைகளின் பேரருளும் பெற்று சிறப்பாக வாழ எமது ஆன்மார்த்த பூஜா மூர்த்தி ஸ்ரீலலிதா மகாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநந்தி லிங்கேஸ்வரஸ்வாமி பொன்மலரடிகளையும், ஸ்ரீநந்திசித்தர் ஸ்வாமிகள் மற்றும் காஞ்சிப்பெரியவரின் கமலமலரடிகளையும் ப்ரார்த்திக்கிறேன். எமது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன் @ இராகவன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம். அமைப்பாளர், இந்துசமயமன்றம்.

லக்ஷகாயத்ரி ஜபம்

லக்ஷகாயத்ரி ஜபம் இந்த மாதத்தில் இருந்து ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் துவக்கப்படுகிறது. இந்த மாதம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஸ்ரீமஹாலக்ஷ்மி நகர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலை 7.30 மணியளவில் துவக்கப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் காலை அனுஷ்டானங்களை முடித்து பஞ்சபாத்ர உத்தரணியுடன் சம்ப்ரதாயப்படி உடையணிந்து வர வேண்டுகிறோம்.

 

ஸ்வாமிகளை தரிசனம்

இன்று ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளை தரிசனம் செய்து இந்துசமயமன்றம் சார்பில் நடந்துவரும் நிகழ்ச்சிகளை பற்றி சொல்லி ஸ்வாமிகள் அனுக்ரஹப்ரசாதம் பெற்றேன். மேலும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் தமது பீடத்தின் சார்பில் மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீஅனுமன் குரல் பத்திரிகையை ஸ்ரீஸ்வாமிகளுக்கு சமர்ப்பித்து ஆசி பெற்றார்கள். ஸ்ரீபெரியவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஸ்ரீஅனுமன் குரல் மாதஇதழின் ஆன்மிக சேவைக்கு ஆசீர்வதித்தார்கள். அவ்வமயம் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராம்ஜி அவர்களும் உடனிருந்து ஸ்ரீசரணர்களின் ஆசியை பெற்றார். கூட்டமைப்பின் சேவைகள் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடத்துடன் இணைந்து செய்ய ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் சந்தோஷத்துடன் ஆசி வழங்கினார்கள்.

லக்ஷ காயத்ரி ஜப யக்ஞம்

சிவாய நம! உலக நன்மையை முன்னிட்டும் ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாகவும் நமது இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம், ஸ்ரீநந்தி சித்தர் பீடம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, தென்னக ஆன்மீக ஆராய்ச்சி மையம் சார்பில் லக்ஷ காயத்ரி ஜப யக்ஞம் வருகிற ஏப்ரல் 22 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணிவரை நந்திவரம் கூடுவாஞ்சேரி மஹாலக்ஷ்மிநகர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர்களின் அருளாசியுடன் ஸ்ரீமாருதிதாச ஸ்வாமிகள் அருள்முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற மாதங்களில் இந்துசமயமன்றம் கிளை மன்றங்களில் மாதத்திற்கு ஒரு கிளை சார்பில் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடன் நடைபெற உள்ளது.அடுத்த மாதம் பெருங்களத்தூர் இந்துசமயமன்றம் கிளை சார்பில் நடைபெறும். திரளாக கலந்துகொண்டு வேதமாதா ஸ்ரீகாயத்ரிதேவியின் அருளைப்பெறுவீர். இந்த நிகழ்ச்சியை தங்கள் பகுதிகளில் ஏற்பாடு செய்ய விரும்புபவர்கள் எங்களை அணுகவும். இதற்கு கட்டணம் சிரத்தையாக ஒருமனதுடன் காயத்ரி ஜபிப்பது மட்டுமே . இவண்: இந்துசமயமன்றம் அமைப்பாளர்கள் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள்.

இந்துசமயமன்றம் புதிய பத்து கிளைகள்

இந்துசமயமன்றம் புதிய பத்து கிளைகள் துவக்க விழா 25.03.2018 அன்று நந்திவரம் ஸ்ரீமஹாலக்ஷ்மி நகர் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சீதா கல்யாண வைபவத்தில் துவக்கிவைக்கப்பட்டது. ஸ்ரீகாஞ்சி மாமுனிவரின் அத்யந்த சிஷ்யர் ஸ்ரீகாமாக்ஷி தாச ஸ்வாமிகள் அருள் முன்னிலையில் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீபாரதீமுரளீதர ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீபூமாத்தம்மன் சித்தர் பீடம் ஸ்ரீவடபாதி சித்தர் ஸ்வாமிகள் மற்றும் எழிச்சூர் ஸ்ரீகிருஷ்ணகுமார் தலைமையில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் இந்துசமயமன்றம் அமைப்பாளர் நந்திவரம் புலவர் ஆத்ரேய சுந்தரராமன் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கிளை பேனர், உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கினார்.