மேலே உள்ளது சென்னை கிரோம்பேட்டை குமரன்குன்றத்தில் நமது சகோதர அமைப்பான திருக்கோவில் வழிபாட்டுக்குழு சார்பில் நடந்த ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி. ஸ்ரீகண்ணன்ஜி முன்னிலையில் நடைபெற்றது.
சவுதியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு நடந்த ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி.
ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் நங்கநல்லூர்
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் நேற்று (11.03.2018) ஞாயிறு அன்று நடந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளுக்கு ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் நங்கநல்லூர் ஸ்ரீரமணி ஹாலில் நடைபெற்றது. ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாசஸ்வாமிகள், ஸ்ரீ ஜே.கே.சிவன் ( கிரஷ்ணார்ப்பணம் சேவா சங்கம்) , ஸ்ரீசாணுபுத்திரன், அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் ஸ்ரீகணேசன்ஜி, ஸ்ரீராம்ஜி, ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி, ஊரப்பாக்கம் மன்ற மகளிர் அமைப்பாளர் ஸ்ரீமதி. பார்வதி மோகன், ஸ்ரீமதி சுதாகண்ணன், ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் குழுவினர், ஸ்ரீயோக சந்தோஷபீடம் ஸ்ரீமதி.வாசுகி அமுதபூரணி, திருவாசகம் முற்றோதுதல் குழு ஸ்ரீமதி புஷ்பாதுரை, ஸ்ரீமணிவண்ணன், சிவாய நம ஸ்ரீலக்ஷ்மிநாராயணன், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஸ்ரீஸ்ரீராம்ஜி, மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் இந்துசமயமன்றம் ராம்ராம் சுந்தரராமன் மற்றும் சாயிராம் குழுவினர், ஸ்ரீரமணி ஹால் அனுஷம் ஸ்ரீமகேஷ், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீசர்மாஜி , நங்கநல்லூர் சீதாராம சேவா சமாஜம் ஸ்ரீநாராயணசாமி மற்றும் ஸ்ரீஸ்வாமிநாதன் மற்றும் பல அன்பர்கள் மற்றும் ஸ்ரீமடத்தின் பக்தர்கள் கலந்துகொண்டனர். தேவார வழிபாடு, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், சத்சங்கம், நங்கநல்லூர் பால சத்சங்கம் குழுவினர் திவ்யநாம பஜனையுடன் ஸ்ரத்தாஞ்சலி சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்றம் அமைப்பாளர் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் அனைவரையும் வரவேற்க, நந்திவரம் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஸ்ரீபெரியவா ப்ரசாதத்துடன் விழா பக்திபூர்வமாக நடந்தேறியது. ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!
Shradhanjali in Abudhabi
“சிவாய நம! ஸ்ரீபாலப்பெரியவா ஆக்ஞையையேற்று , எங்களின் வேண்டுகோளுக்கு அன்புடன் இசைந்து பாரதத்திலும் கடல்கடந்தும் வாழும் அன்பர்கள், ஸ்ரீபுதுப்பெரியவாளுக்கு ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தியும் ப்ரார்த்தனைக்கூட்டம் நடத்தியும் ஸ்ரீகுருகைங்கர்யத்தில் ஈடுபட்ட அனைத்து மண்டலிகள், சபாக்கள் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள், சேவார்த்திகள், ஸ்ரீகாஞ்சி மடத்து பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீஆசார்யாள் அருள் பரிபூரணமாக இருக்க ஸ்ரீசரணர்களின் கமலமலரடிகளில் ப்ரார்த்திக்கிறோம். அமைப்பாளர்கள் – இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா.”
Shradhanjali in Abudhabi
“இன்று நூறு முறைக்கு மேல் (சுமார் 50 + பேர்கள் , 2 ஆவர்த்திகள்) விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் , பின்பு
அறுபடை முருகன் திருப்புகழ் , பெரியவாளின் அனுக்ரஹத்துடன்
சிறப்பாக நடந்தேறியது.
நாளையும், நாளை மறுதினமும் இது போன்று ஏற்பாடு ஆகி இருப்பது அதனினும் சிறப்பு.”
அண்மையில் நாம் இழந்த ஒரு மஹா புருஷர்- J.K. SIVAN
” அவாளுக்கு என்ன பேர்?”
”ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம்”
”என்ன பண்றா?”
பெரியவா காதில் skss பற்றிய சேதி விழுந்தது. குழந்தைகளுக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய நமது இலவச வெளியீடுகள் அவர் கைகளில் தவழ்ந்தது. விசாரித்தார். சந்தோஷப்பட்டார். அவரது 81வது ஜெயந்தி விழா வெகு சிறப்பாக சென்னை கிருஷ்ண காண சபாவில் தி.நகரில் 3.10.2015 அன்று நடந்தது. ஒவ்வொரு ஜெயந்தியின் போதும் தனது ஜெயந்தியோடு ஒட்டி மக்கள் சேவை, மகேசன் சேவையில் மிகச்சிறப்பாக , ஈடுபடுபவர்களை ஊக்குவித்து பாராட்டுவது வழக்கம்.
ஆச்சர்யமாக, இந்த வைபவத்தில், கிருஷ்ண கான சபாவில் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கத்தின் ஆன்மீக இலவச நூல்கள் இளைய தலைமுறையை அடைய இரவு பகல் சேவை செய்து உழைக்கும் அடியேனை பாராட்டி ”பகவத் சேவா ரத்நா ” விருதை வழங்கினார் புதுப்பெரியவா. ஒருநாளைக்கு ஒரு லக்ஷத்துக்கும் அதிகமான இந்துக்கள், உலக அளவில் அன்றாடம் படித்து மகிழ பலபல ஆன்மீக செய்திகளை, மின்னஞ்சல், முகநூல், வாட்சாப் தொலைபேசி கருவி மூலம், சென்றடையும் சேவையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் எனது வாழ்வில் இந்த எண்பது வருஷங்களில் அடையாத பெரும் பாக்யம் இந்த பெரியவாவின் விருது என்று கருதுகிறேன்.
சில மகான்களை நாம் அவர்கள் வாழ்நாளில் சரியாக புரிந்து கொள்வதில்லை. சில துறவிகள் தங்கள் கடமையை ஆற்றும்போது தமது சக்தியை காட்டிக்கொள்ளமாட்டார்கள். சேஷாத்திரி ஸ்வாமிகள், தபோவனம் ஞானந்தர், எண்ணற்ற யோகிகள் போல். உலகம் பின்னால் அதை உணர்ந்து பேசும்போது அவர்கள் இருக்க மாட்டார்கள்.” நான் தான் கடவுள் என்னை வணங்கு என்று அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து ரூபாய் ஆயிரத்துக்கு ஒரு மாதிரி, ஐந்தாயிரத்துக்கு வேறு மாதிரி விசேஷமான தரிசனம், அருள்வாக்கு கொடுக்கும் வியாபாரிகள் அல்ல அவர்கள்.
”நான் இச்சா சக்தி என்றால் ஜெயேந்த்ரர் க்ரியா சக்தி ” என்று மகா பெரியவா பரமாச்சாரியார் சொல்லியிருக்கிறார். மஹா பெரியவா இருந்த இடத்திலேயே உலகில் ஆன்மீக சக்தியை பரப்பினாலும் சங்கர மடத்தின் சமூக, மக்கள், பக்தி, ஆன்மீக சக்தியை, சேவையை, உலகளாவ மெச்ச வைத்த ஒரு காவியுடை துறவி புதுப் பெரியவா. காஞ்சி மடத்தின் பெயர் ஒவ்வொரு ஹிந்துவுக்கு உலகளவில் புரிய, தெரியவைத்தவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி.
நீ எழுது என்று சொன்னதும் குருவின் வாக்கை நிறைவேற்ற ”ப்ரம்ம சூத்ர பாஷ்யத்தை ”குரு ப்ரியா’ என வழங்கியவர். ஒவ்வொரு ஆன்மீகம் தேடும் மாணவனும் எளிதில் புரிந்து கொள்ள சுருக்கமாக எழுதப்பட்ட நூல்.
பூஜைகள், தியானம், அருளாசி, தரிசனம், குருவந்தனம் தவிர, நாடெங்கும் வேத பாடசாலைகள் நிறுவி பாரம்பரியம் காத்தவர். ஆலயங்கள் எத்தனையோ கேட்பாரின்றி, வழிபாடின்றி நமது தமிழ் நாட்டிலேயே பல இடங்களில் இடிந்து, இடிக்கப்பட்டு, மறைந்து, அழிக்கப்பட்டு, சிதிலமான மற்றும் முழு பழைய காலஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான வருஷங்களாக பூஜிக்கப்பட்ட விக்கிரஹங்கள் வழிபாடின்றி வெய்யிலிலும் மழையிலும் வெளியே, வயலில், எங்கோ மூலையில் இருப்பதை எல்லாம் ஒரு பூரண தீவிர சக்தியோடு வெளிக்கொணர்ந்து அவற்றை புனருத்தாரணம் செயது மீண்டும் வழிபாட்டுக்கு உகந்ததாக செய்யும் திருப்பணி தான் ஆலயவழிபாட்டுக் குழு. அதில் நானும் ஒரு அங்கத்தினன் என்ற பெருமை என் பாபங்களை தொலைக்கும். பல இடங்கள் இவ்வாறு சென்ற ஆங்காங்கு உள்ளூர் மக்களை வழிபாட்டு முறைகள் அறிய செய்திருக்கிறோம். இது தவிர தீவிரமாக ஹிந்து மதத்தினரை மதம் மாற்றும் முயற்சிகளை தக்க சமயம் தடுத்து, குறைத்து, நமது மதத்தின் பெருமையை ஒவ்வொருமூலையிலும் தெரியச் செய்தவர் புதுப்பெரியவா. அகில இந்திய அளவில்,பிற மதத்தினரும் போற்ற,மரியாதை பெற்றவர் அவர்.
எத்தனை ஹிந்து மருத்துவ சிகிச்சை மனைகள், குழந்தைகளுக்கு விசேஷ மருத்துவ மனை, கண் வியாதி நீக்கும் சங்கர கண்ணொளி மருத்துவ மனைகள் ஏழைகளுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள், கல்லூரிகள், பள்ளிகள் , கல்விச்சாலைகள், வேத பாடசாலைகள் அடாடா, நாடெங்கும் இந்துமதத்தின் பழம்பெருமைகளை மீண்டும் ” புது” ப்பித்து தந்த அந்த துறவிக்கு என்ன பொருத்தமான பெயர் ஆஹா. ”புதுப்பெரியவா”. அதற்கு என்ன பரிசு. ஏளனம். அபகரிக்கும் கும்பலின் ஆக்கிரமிப்பு. அடாவடி குற்றச்சாட்டுகள். தண்டனை. அவமரியாதை. எதையும் தாங்கும் அந்த இதயத்திற்கு எப்பவோ வலித்திருக்கும்.
அவர் யார்? நடமாடும் கடவுளாக நாம் பூஜிக்கும் மஹா பெரியவாள், நாடு முழுதும் தேடி, நன்றாக யோசித்து ஆற அமர அலசி, தேர்ந்தெடுத்த ஒரு 19வயது சிறந்த சரியான வாரிசு என்ற சுப்பிரமணியன். சொந்த ஊரே ”இருள் நீக்கி”. அஞ்ஞான இருள்,அதர்ம இருள், அக்கிரம இருள், ஆன்மீகத்தில் சிறந்த இந்த பழம்பெரும் பாரத நாட்டை சூழ்ந்து பூதாகாரமாக வளர்கிறதே இதை நீக்க ஒரு ஞான ஒளி வேண்டுமே என்று மஹா பெரியவா தீர்க்க தரிசனமாக கண்டெடுத்து 69வது பீடாதிபதியாக தனக்கு அடுத்த வாரிசாக நியமித்தனர். அவரே புதுப்பெரியவா. ஜன ஆகர்ஷணமும், தன ஆகர்ஷணமும் இவரை அன்றி எந்த மடாதிபதிக்கும் இந்த அளவு கிட்டவில்லை. போற்றுதல் தூற்றுகள் எல்லாவற்றுக்கும் பிரதிபலிப்பு களங்கமற்ற குழந்தையின் புன்சிரிப்பே.
யாரோ கேட்டதற்கு அவர் சொன்ன ஒரு முத்தான வார்த்தை :
”இந்த ஐம்பது வருஷமா மடத்தில் ஜகதகுரு என்று நான் இருந்து என்ன பயன். நான் என்ன செய்தேன்?. அது எப்படி ப்ரயோஜனமா மக்களுக்கு போய் சேர்ந்தது?. அப்படிப்பட்ட செயல் செயதிருந்தா, அது தானே பேசும். நாம் தம்பட்டம் அடிக்கவேண்டாம் ” .
இது 2003 பீடாரோஹண ஜெயந்தி மஹோத்சவத்தில் ஓப்பனா அடக்கமாக அவர் சொன்ன இதயத்திலிருந்து எழும்பின வார்த்தை.
புதுப்பெரியவா எப்போதும் ” மானவ சேவா தான் மஹேஸ்வர சேவா” என்று சொல்லிண்டே இருப்பார். அதே ஜபம் என்கிறார் இளைய பால பெரியவர், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி .
பட்டி தொட்டியில் எல்லாம் ஆன்மீக வகுப்புகள் , குழந்தைகளுக்கு தேவாரம், திருப்புகழ், போன்ற இனிய பாடல்கள் சொல்லித்தர ஏற்பாடு போட்டிகள் வைத்து பரிசு. கிராம மக்களின் பஜனை சபைகள், கூட்டு அமைப்புகளுக்கு வாத்தியங்கள், அவர்களை எல்லாம் அழைத்து பாராட்டு, இதை எல்லாம் அவர் செய்வதை நான் என் கண்ணால் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். பங்கேற்றிருக்கிறேன்.
இதுவரை கைலாசம், கேதார்நாத் சென்ற சங்கராச்சார்யர்கள் இருவரே. ஆதி சங்கரர், 69வது சங்கரரான ஜெயேந்திரர்.
இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் வெண்ணாத்தங்கரையில் உள்ள சாத்தனுர் கிராமம் இப்போது உருவத்தில் மட்டும் இல்லை பேரிலும் சிறிது மாறி தண்ணீர் குன்றம் சாத்தனூராகிவிட்டது. அந்தக்காலத்தில் இருந்த வடம பிராமண குடும்பத்தில் ஒருவர் தான் கேசவய்யர்.ரிக்வேதகாரரர். ஒளஸத்ய கோத்ரம். அந்த வம்சத்தில் பிறந்த ஒருவர் பஞ்சாபகேசய்யர் . அவர் மனைவி யோகாம்பாள். அவர்கள்மகன் மஹாதேவய்யர்.
மஹாதேவய்யர் இருள்நீக்கி எனும் ஊரை சேர்ந்த ராமாமிர்தம் அய்யர் மகள் சரஸ்வதியை மணந்தார். ரயில்வே உத்யோகம். அந்த ஊர் மன்னார்குடி யிலிருந்து 3 கி.மீ.
ஒருநாள் மஹாதேவய்யர் வீட்டுக்கு ஒரு சந்நியாசி வந்தார். தம்பதிகள் அவரை உபசரித்தனர். சில ப்ராயச்சித்தங்கள் செய். நல்ல பிள்ளைக்குழந்தை, சத் புத்திரனாக பிறப்பான் என்று ஆசிர்வதித்தார் அந்த யோகி.
நமது அஞ்ஞான இருள் நீக்கியாக அவதரித்தவர் தான் ஸரஸ்வதி பெற்றுத்தந்த செல்வம் ஜெயேந்திர சரஸ்வதி.
ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018)
இந்து சமய மன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீபாலப்பெரியவாளின் ஆக்ஞைப்படி நங்கநல்லூர் ஸ்ரீரமணி ஹாலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு (புதுப்பெரியவாளுக்கு) ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018) அன்று மாலை 4மணியளவில் நடைபெறவுள்ளது. மன்றக்குழுவினரின்திருமுறை பாராயணம், அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் சார்பில் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், நங்கநல்லூர் அனுஷம் வழிபாட்டுக்குழு ஸ்ரீமகேஷ் அவர்கள் தலைமையில் சத்சங்கம், ஸ்ரீபால சத்சங் குழுவினர், நங்கநல்லூர் சார்பில் நாமசங்கீர்த்தனம், ஸ்ரீஆசார்யாளுக்கு புஷ்பாஞ்சலி, ஹாரத்தி, ப்ரசாதம் என ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடன் நடைபெறவுள்ளது. திரளாக கலந்துகொண்டு ஆசார்யாள் அருள் பெற ப்ரார்த்திக்கிறோம்.
அமைப்பாளர்கள்: புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் , ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்
Shradhanjali for His Holiness Sri Jeyendra Saraswathi Swamigal
Organise a bhajan and Vishnusaharanama Parayana on 11th of march being the Aradhana for HH Shri Jayendra periva.
His Aradhna falls on 11th, 12th and 13th.
But HH Balaswamiji has advised to do the same on 11th in all possible places.
Please send us the photos if possible to hsm72.17@gmail.com
Request by Hindu Samaya Manram
ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் முக்தி அடைந்ததையொட்டி இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம், அகிலபாரத அனுமன்சேனா, தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோவில்களில் இன்று மாலை மோக்ஷதீபம் ஏற்றி வழிபடப்பட்டது.
ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!
இந்து சமய மன்றத்தின் வேண்டுகோள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபத்யத்தை அலங்கரித்தவரும், சனாதன இந்து தர்மத்திற்கு தன் ஜீவியகாலமனைத்தும் ஒப்பற்ற தொண்டாற்றியவரும், ஸ்ரீகாஞ்சி மாமுனிவரின் நேரடி சிஷ்யராக வேத வைதீக தர்ம பரிபாலனத்திற்கு அரும்பாடுபட்டவரும், எப்போதும் அருள்ததும்பும் புன்னகையுடன் கருணாமூர்த்தியாய் விளங்கி ஸ்ரீமடத்தை வழிநடத்தியவரும், பாரத தேசமெங்கும் திவ்ய யாத்திரை பலமுறை செய்து பல திருக்கோயில்களை புனருத்தாரணம் செய்து ஹிந்து மத எழுச்சிக்கு வித்திட்டவரும், ஏழை எளிய மக்களின் துயர்துடைக்க மருத்துவமனை, பள்ளிகள், சேவை மையங்கள் நிறுவி அளப்பரிய சேவை செய்தவரும், ஞான பாஸ்கரராய், பன்மொழி வித்தகராய் , திகழ்ந்தவரும், ஸ்ரீபாலப்பெரியவர் ஸ்ரீவிஜயேந்திர ஸரஸ்வதி சத்குருவை நமக்கு வழிகாட்ட அனுக்ரஹித்த ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் இன்று மஹாசமாதியடைந்துவிட்டார்கள். இந்து தர்மத்திற்கு நம்மாலான சேவையை செய்வதும், ஸ்ரீபாலப்பெரியவர்கள் அனுக்ரஹத்துடன் ஸ்ரீமடத்தின் கைங்கர்யத்தில் பங்குகொள்வதுமே ஸ்வாமிகளுக்கு நாம் செய்யும் பாதசேவையாகும். அனைத்து ஸ்ரீமடத்தின் பக்தர்களுடன், துயரத்தில் பங்குகொள்ளும், இந்துசமயமன்றத்தின் அமைப்பாளர்கள் மற்றும் மன்றக்கிளைகள்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம்.
இந்துசமயமன்றம் சார்பில் நோட்டுபுத்தகங்கள் எழுதுபொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீவரசித்தி வினாயகர் தேவஸ்தானம் சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவேண்டி சிறப்பு ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீமஹாஸரஸ்வதி பூஜை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் இன்று 20.02.2018 மாலை 5.30.மணியளவில் ஆரம்பித்து டிபன்ஸ்காலனி ஸ்ரீவரசித்தி வினாயகர் கோவிலில் நடைபெற்றது. பூஜை மற்றும் ப்ரார்த்தனை வழிபாட்டினை அடியேன் நடத்த திருவருளும் குருவருளும் கூட்டியது. தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆர்வமாக பல பெற்றோர் வந்திருந்தனர். ஸ்ரீஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீஸரஸ்வதிதேவி மஹிமைகளைப்பற்றி அடியேன் சிறிது நேரம் சொல்லி மாணவ மாணவியரிடம் வினாவிடை நடத்தினேன். பிறகு பூஜை நடந்தது. மிகவும் அதிகமான அளவில் மக்கள் மற்றும் மாணவ மாணவியர் வந்திருந்தனர். அனைவருக்கும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் அருளாசியுடன் ரக்ஷை கட்டி ஆசீர்வதித்தார். இந்துசமயமன்றம் சார்பில் நோட்டுபுத்தகங்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஸ்ரீகோவிந்தராஜன் அவர்கள் பேனா மற்றும் ஆலய பொருளாளர் ஸ்ரீலக்ஷ்மிபதி அவர்கள் பென்சில் ரப்பர் என எழுதுபொருட்கள் வழங்க பிரசாதத்துடன் பூஜை இனிதே நடந்தேறியது. ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கருணையால் நடந்த இந்நிகழ்ச்சி பல ஊர்களிலும் நடக்க இந்துசமயமன்றம் முயற்சிகள் செய்கிறது.