லக்ஷ காயத்ரி ஜப யக்ஞம்

சிவாய நம! உலக நன்மையை முன்னிட்டும் ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாகவும் நமது இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம், ஸ்ரீநந்தி சித்தர் பீடம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, தென்னக ஆன்மீக ஆராய்ச்சி மையம் சார்பில் லக்ஷ காயத்ரி ஜப யக்ஞம் வருகிற ஏப்ரல் 22 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணிவரை நந்திவரம் கூடுவாஞ்சேரி மஹாலக்ஷ்மிநகர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர்களின் அருளாசியுடன் ஸ்ரீமாருதிதாச ஸ்வாமிகள் அருள்முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற மாதங்களில் இந்துசமயமன்றம் கிளை மன்றங்களில் மாதத்திற்கு ஒரு கிளை சார்பில் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடன் நடைபெற உள்ளது.அடுத்த மாதம் பெருங்களத்தூர் இந்துசமயமன்றம் கிளை சார்பில் நடைபெறும். திரளாக கலந்துகொண்டு வேதமாதா ஸ்ரீகாயத்ரிதேவியின் அருளைப்பெறுவீர். இந்த நிகழ்ச்சியை தங்கள் பகுதிகளில் ஏற்பாடு செய்ய விரும்புபவர்கள் எங்களை அணுகவும். இதற்கு கட்டணம் சிரத்தையாக ஒருமனதுடன் காயத்ரி ஜபிப்பது மட்டுமே . இவண்: இந்துசமயமன்றம் அமைப்பாளர்கள் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள்.

இந்துசமயமன்றம் புதிய பத்து கிளைகள்

இந்துசமயமன்றம் புதிய பத்து கிளைகள் துவக்க விழா 25.03.2018 அன்று நந்திவரம் ஸ்ரீமஹாலக்ஷ்மி நகர் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சீதா கல்யாண வைபவத்தில் துவக்கிவைக்கப்பட்டது. ஸ்ரீகாஞ்சி மாமுனிவரின் அத்யந்த சிஷ்யர் ஸ்ரீகாமாக்ஷி தாச ஸ்வாமிகள் அருள் முன்னிலையில் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீபாரதீமுரளீதர ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீபூமாத்தம்மன் சித்தர் பீடம் ஸ்ரீவடபாதி சித்தர் ஸ்வாமிகள் மற்றும் எழிச்சூர் ஸ்ரீகிருஷ்ணகுமார் தலைமையில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் இந்துசமயமன்றம் அமைப்பாளர் நந்திவரம் புலவர் ஆத்ரேய சுந்தரராமன் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கிளை பேனர், உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கினார்.

 

நாளை ஸ்ரீராமநவமி

தர்மஸ்வரூபமானவனும் க்ஷத்ரிய குலத்தோன்றலும், ரகுவம்ச நாயகனும் ஸீதாராமனும் அனுமனின் ஆதர்ச தெய்வமும் ஆன ராகவனுக்கு மங்களம்!

அனைவருக்கும் ஸ்ரீராமனின் அவதார தினத்தில் வாழ்த்துக்களை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.

மாடம்பாக்கம் ஸ்ரீபொன்னப்ப ஸ்வாமி ஆலயத்திற்கு நேரில் சென்று தீப எண்ணெய் வழங்கப்பட்டது.

நேற்றைய முந்தின தினம் நந்திவரம் ஸ்ரீமஹாலக்ஷ்மி நகர் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நடைபெற்ற இந்துசமயமன்றத்தின் திருக்கோவில் தீபமேற்ற எண்ணெய் வழங்கும் திட்டத்தின் முதல் நிகழ்வாக பதினைந்து திருக்கோயில்களுக்கு எண்ணெய் வழங்கப்பட்டது. ஸ்ரீஜெயமாருதிதாசஸ்வாமிகள், ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீ பாரதீமுரளீதர ஸ்வாமிகள், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் இந்துசமயமன்றம் அமைப்பாளர் நந்திவரம் புலவர் ஆத்ரேய சுந்தரராமன் ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் ஸ்ரீகணேசன்ஜி மற்றும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளர் ஸ்ரீராம்ஜி அவர்கள் தலைமையில் திருக்கோவில் தீப எண்ணெய் வழங்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபாவின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைபெறுகிறது.

 

ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் (ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள்) ஆசார்யன் திருவடியடைந்தார்

காஞ்சிப்பெரியவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நம்மைவிட்டு பிரிந்த துயரம் நீங்காத நிலையில் இன்று ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் ( ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் ) ஆசார்யன் திருவடியடைந்தார் என்பது நமக்கு பெருந்துயரத்தையே தருகிறது. ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் சிறந்த வேத விற்பன்னர்கள் மட்டுமல்ல நம் தாய்மொழி தமிழில் நிகரில்லா புலமையுடையவர்கள். தமிழாசிரியராக பலருக்கும் அன்னை தமிழை போதித்தவர்கள். அனைவரிடமும் சிரிக்க சிரிக்க பேசி ஆன்மீக சிந்தனைகளைத்தூண்டியவர்கள். அவருக்கு முன்னிருந்த இரண்டு ஆசார்யர்களின் பேரன்பைப்பெற்றவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் இணையற்ற மஹான் இன்று வைகுண்ட வாசத்திற்கு பயணப்பட்டாலும் அவர் காட்டிய நெறிகள் அவர்தம் சீடர்களுக்கு மட்டுமல்ல சனாதன ஹிந்துக்களுக்கு ஒரு தீபமாக வழிகாட்டும் என்பது திண்ணம். இந்து சமய மன்றம் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் திருமலரடிகளுக்கு அஞ்சலி மலர்களை ஹ்ருதயபூர்வமாக சமர்ப்பித்து நமஸ்கரிக்கிறது.

சிவபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம்

இன்று இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீநந்தி சித்தர் பீடம் சார்பில் சிவபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம் கூடுவாஞ்சேரி அருள்மிகு ஸ்ரீமாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் சந்நிதியில் நடைபெற்றது. நமது குழுவினர் சார்பில் மேற்படி ஆலயத்தில் நடத்தப்பெற்ற முதல் நிகழ்ச்சி இது.