சிவாய நம!
நாளெல்லாம் திருவாசகம்
மூச்செல்லாம் நமசிவாயம்
பேச்செல்லாம்
பெரிய புராணம்
சித்தமெல்லாம்
சிவபெருமான்
இந்த திருவுருவாம்
எங்கள் தாய்
பழனிப்பாட்டியின்
பிறவித்திருநாளில்
அவர் திருவடிகளில்
இந்துசமயமன்றம்
பணிந்து வணங்குகிறது!
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும்
சமயமன்ற அன்பர்களும்
சிவநேச செல்வர்களும்.
Tag: Hindu Samaya Mandram
கல்லாலின் கீழிருந்தார் கருணையுருவே!
காலடியில் அவதரித்தார் புனிதவுருவே!
காஞ்சிமுனி கண்டெடுத்த
ஞானவுருவே!
நல்லார்கள் நடுவிருக்கும்
வேதவுருவே!
பல்லோரும் கொண்டாடும்
தூயவுருவே!
பவமதனை
நீக்கவந்த பக்தியுருவே!
சகமதனை காக்கவந்த
சக்திவுருவே
சங்கர விஜயேந்திர
சகத்குருவே!
புனித நின் பொற்பாதம் பணிகின்றோம்
காமாட்சி அருட்செல்வ!
காமகோடி பீடத்து
தூயவரே!
துறவரசே
போற்றி! போற்றி!
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்.
இந்துசமயமன்றம்.
மே மாதம் 29ம்நாள் 1983
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் 70வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் உலகமுய்ய பரமகருணையோடு சன்யாஸ தீக்ஷை ஏற்ற இப்புனிதநந்நாளில் (மே மாதம் 29ம்நாள் 1983) இந்துசமயமன்றம் பக்தியுடன் ஸ்ரீஸ்வாமிகள் அருட்கமலமலரடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.🙏
தேனம்பாக்கம் – 10/05/2020
பெரியவா அவர்கள் சன்யாஸ்ரம ஸ்வீகாரம் செய்த நாளன்று, குருவின் குருவான மஹா பெரியவாளுக்கு புஷ்பாஞ்சலி செய்வது ஒரு உன்னதமான காட்சி.
நூறாண்டு காலம் ஆன்மீக ஆட்சி.
அதற்கு முக்காலங்களும் இறைமாட்சி.
அதைப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள் காமாட்சி.
இந்திய முழுவதும் அவள் அருளாட்சி.
🙏ஓம் ஸ்ரீமாத்ரே நம!🙏
🙏நம் தாயை வணங்குவோம்!
🙏பசுத்தாயை வணங்குவோம்!
🙏பாரதத்தாயை வணங்குவோம்!
🙏தெய்வத்தாயை வணங்குவோம்!
இன்று அன்னையர் தினம்!
🙏இந்துசமயமன்றம் சார்பில் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 🙏
இந்துசமயமன்றம் சார்பில் நான்காம் தவணையாக உதவிப்பொருட்கள் வழங்குதல்
ஸ்ரீகுருப்யோ நம!
தூய்மைப்பணியாளர்கள் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் முன்னணி போர்வீரர்களாக களப்பணியாற்றி வருகிறார்கள். அவர்களை கௌரவப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிப்பொருட்களை இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் கிராமங்களில் வழங்கப்படுகிறது. நெல்லிக்குப்பம் பகுதியில் நமது சமயமன்ற திருக்கோவில்களில் தீபமேற்ற எண்ணெய் வழங்கும் திட்டப்பொறுப்பாளர் ஸ்ரீ. க.இராமச்சந்திரன் மற்றும் சமயமன்ற அன்பர்.திரு.தாமோதரன் (IOB) ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.
இந்துசமயமன்றம் சார்பில் சென்னை சூளைமேட்டில் நடந்த ஸ்ரீஅயுதஸஹஸ்ரமஹாகணபதி ஹோமம்.ஒரு மீள்பதிவு.
இந்து சமயமன்றத்தின் சார்பில் வழங்கப்பட்ட மூன்றாவது கட்ட உதவிப்பொருட்கள் இவை.
அன்பு சமயமன்ற அன்பர்களே!
அனைவருக்கும் வணக்கம்.
ஸ்ரீசங்கர ஜெயந்தி இன்று. வழக்கமாக மிகுந்த உற்சாகத்துடன் பக்தியுடன் கொண்டாடப்படும் இந்தத்திருநாளில் இப்படி இல்லத்தில் முடங்கவேண்டியதாயிற்றே என மனம் வருந்தியது. இன்று நமது சமயமன்றத்தின் குழுக்களில் ஸ்ரீசங்கர ஜெயந்திக்கு என்ன விசேஷம் பண்ணலாம் என எண்ணினேன்.
மதிப்பிற்குரிய புலவர் விசூர் மாணிக்கனார் ஆதிசங்கரரை தனக்கேயுரிய எளிய தமிழில் அழகாக கவிதையில் போற்றி வழங்கினார்.
என் அன்பு இளவல் கவிஞர் சாணுபுத்திரன் உயிரெழுத்து வரிசையில் ஆதிசங்கரரை கவிதையாக்கி வழங்கினார்.
குரு கீர்த்தனை மற்றும் ஸ்ரீசங்கரரின் படைப்புகளை பாடி கொண்டாடினார்கள் மதிப்பிற்குரிய காசிராம பாகவதரும், திருமதி.பார்வதிமோகன் அவர்களும். கூடவே செல்வன் குருவிட்டலும் சேர்ந்தான் குருசேவையில்.
மரியாதைக்குரிய ஸ்ரீ.J K சிவன் சார் டெல்லி ஸ்வாமிமலை முருகன் கோவில் வரலாற்றை ஸ்ரீமஹாபெரியவா அருளை சிறப்புக்கட்டுரையாக்கித்தந்தார்.
அருமை நண்பர் ஸ்ரீ.நடராஜன் ஷ்யாம்சுந்தர் அவர்கள்தமது ஸ்ரீசங்கர சரித்திரம் முகநூல் சொற்பொழிவை நமது சமயமன்றத்தின் குழுக்களில் பதிவிட்டு வழங்கினார்.
வழக்கம்போல நாயன்மார்கள் கதை ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் மற்றும் தித்திக்கும் தேவாரம் மரியாதைக்குரிய ஸ்ரீ.வெங்கடேஸ்வரன் அவர்கள் வழங்கினார்கள்.
அன்பு சகோதரி பாபநாசம் ஸ்ரீமதி.லலிதா வெங்கடேசன் அனுமத்ஜெயந்தி அன்று துவங்கி ஸ்ரீசங்கர ஜெயந்திக்கு சுந்தரகாண்டம் தொடரை ஒரு வேள்விபோல பாவித்து ஆடியோ பதிவாக வழங்கினார். ஸ்ரீசங்கர ஜெயந்திக்கு செய்தியும் அனுப்பினார்.
மதிப்பிற்குரிய புலவர் இராமமூர்த்தி அவர்கள் ஸ்ரீவிஜயேந்திரர் நூறு கவிதையில் ஸ்ரீசங்கரரின் அருட்கொடைகளை விளக்கினார்.
இவர்களோடு அடியேனும் ஒரு சிறு அணில்போல குழந்தைகளுக்காக இந்துசமய ஆன்மீக பயிற்சி முகாமிற்காக “ஜகத்குரு ஆதிசங்கரர்” மூன்று பகுதிகளில் ஆடியோ பதிவுகள் ஸ்ரீபெரியவா மலரடிகளில் சமர்ப்பித்துள்ளேன்.
நேற்றே நமது காஞ்சி ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுரை வெளியிடப்பட்டது.
ஆக, நமது சமயமன்ற குழுக்கள் அனைத்திலும் ஸ்ரீசங்கர ஜெயந்தி விழா ஒரு மானசீக பூஜையாக, ஜகத்குருவிற்கு நாம் செய்யும் பக்திப்புஷ்பாஞ்சலியாக அமைந்துவிட்டது.
இதற்காக அடியேனுடன் ஆசார்ய சேவையில் இணைந்த அத்துணை பெருமக்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை, வணக்கத்தை பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் திருவருள் அனைவருக்கும் எப்போதும் நிலைத்திருக்க அவர் திருவடிகளையே ப்ரார்த்திக்கிறோம்.
குரு சேவையில்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள்.
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.
இன்று ஸ்ரீசங்கர ஜெயந்தி!
“ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம்”
ஸ்ரீகுருப்யோ நம!
உலகம் முழுவதும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிற்கு பிறகு எந்த மஹானுபாவரை “ஜகத்குரு” என கொண்டாடுகிறார்களோ,
புண்ணிய பாரதத்தை மும்முறை வலம்வந்து,
சனாதன ஹிந்து தர்மத்தை புனருத்தாரணம் பண்ணி ஆறு உட்பிரிவுகளுடன் சீரமைத்து தனது முப்பத்திரண்டே வருஷ பூவுலக வாழ்வில் ஒரு மிகப்பெரிய ஹிந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட “சங்கரர்” எனும் திருநாமம் கொண்டு எழுந்தருளிய
அந்த ஆசார்யரின் அத்வைத சித்தாந்தம் இதுவரை ஸ்வர்ணமஹாமேருவின் மீது வைர பிந்துவைப்போல மஹோன்னதமான தத்வமாக
முன்னும் பின்னும் தோன்றிய சித்தாந்தங்களால் வெல்லமுடியாததாக ப்ரகாசிக்கிறதோ
அப்படிப்பட்ட அத்வைத தத்துவத்தையும் அதை ப்ரகாசப்படுத்திய சாக்ஷாத் பரமேச்வர அம்சமான ஸ்ரீஆதிசங்கர பகவத்பதாசார்யாளையும் அவர்வழி வந்த மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் இன்றைய ஆசார்யாள்வரை பக்தியுடன் மனம் மொழி மெய்யால் இந்துசமயமன்றம் வணங்கி போற்றுகிறது.
ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி!