“ஓம் சரவணபவ” தமிழ் மாத இதழ் பிப்ரவரி இதழில் நமது இந்துசமயமன்றம் சார்பில் நடந்த இருளர் பகுதி பொங்கல் விழா மற்றும் மகாபெரியவர் ரதம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.
Tag: Hindu Samaya Mandram
கூடுவாஞ்சேரி ஸ்ரீமாமரசுயம்பு சித்திவினாயகர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்த தருமபுர ஆதீனம்
16.02.2020 ஞாயிறு இரவு கூடுவாஞ்சேரி ஸ்ரீமாமரசுயம்பு சித்திவினாயகர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்த தருமபுர ஆதீனம் 27வது பட்டம் குருமஹாசந்நிதானம் ஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு இந்துசமயமன்றம் சார்பில் வரவேற்று நமது சமயமன்ற மலரான “சிவாலய துதிமலர்” புத்தகம் மற்றும் சமயமன்ற பிரசுரங்கள் வழங்கி நமது மன்றம் ஆற்றும் ஆன்மீக சேவைகளை மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் விளக்கினார். ஸ்ரீமஹாசந்நிதானம் மிக்க மகிழ்வுடன் அருளாசி வழங்கினார். அவ்வமயம் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீதர், சமயமன்ற கூடுவாஞ்சேரி அமைப்பாளர் திருமதி. தாரா தேவராஜ், திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் திருமதி. சரசு ஏழுமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Distributed certificates and prizes at Umayalpuram aided school
இந்துசமயமன்றம் பாபநாசம் கிளை சார்பாக அதன் அமைப்பாளர் திருமதி. லலிதா வெங்கடேசன் அவர்கள் (சுந்தரகாண்டம் தினமும் பதிவிடுபவர் மற்றும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர்)திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் உமையாள்புரம் அரசு உதவிபெறும் பள்ளியில் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள்.
திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் திருவிடைமருதூர் சங்கரா வித்யாலயா, சிவராமபுரம் சங்கரா வித்யாலயா, பெரணமல்லூர் பள்ளி ஆகியவற்றிலும் நடத்தப்பெற்று சான்றிதழ் மற்றும் புத்தகப்பரிசுகள் வழங்கப்பட்டது.
நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கிராமக்கோவில்கள் புனருத்தாரண திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வடகல் கிராமத்தில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.
இந்து சேவை மற்றும் ஆன்மீக கண்காட்சி
இந்து சேவை மற்றும் ஆன்மீக கண்காட்சி சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி வளாகத்தில் கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை 2020 வருடத்திய கண்காட்சி நடைபெற்றது. அதில் நமது இந்துசமயமன்றம் சார்பில் சேவை விளக்க அரங்கு இடம்பெற்றது. பல முக்கிய இந்து தலைவர்கள் மற்றும் ஆன்மீக குருமார்கள் வருகைபுரிந்தனர்.
இந்து ஆன்மீக கண்காட்சி
ஸ்ரீகுருப்யோ நம! பதினொன்றாவது இந்து ஆன்மீக கண்காட்சி சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று மாதாஸ்ரீ அமிர்தானந்தமயி அவர்களால் துவக்கப்பெற்று வருகிற பிப்ரவரி 3ந்தேதி வரை நடைபெறும். நமது இந்துசமயமன்றத்தின் அரங்கு கண்காட்சி வளாகத்தில் A2 பகுதியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குழுவில் அமைந்துள்ளது. காலை 10மணிக்கு ஆரம்பிக்கும் கண்காட்சி இரவு 8.30மணிவரை திறந்திருக்கும். இந்து கலாச்சார பண்பாட்டு சேவைகளை பிரதிபலிக்கும் பல்வேறு அரங்குகள் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா சேவைகளை விளக்கும் வண்ணம் பல பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அவசியம் குடும்ப சகிதம் வந்து பார்வையிட ப்ரார்த்திக்கிறோம்.
இவண்
இந்துசமயமன்றம்.
இந்துசமயமன்றம் “ஸ்ரீமஹாபெரியவருக்கு அனுஷ பூஜை”
ஸ்ரீகுருப்யோ நம!
20.01.2020 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் (மாநில அமைப்பாளர், இந்துசமயமன்றம் ) அவர்கள் இல்லத்தில் ஸ்ரீமஹாபெரியவருக்கு அனுஷ நக்ஷத்ர திருநாளில் விசேஷ பூஜை நடைபெற்றது. சிவனார்அகரம் ஸ்ரீமஹாபெரியவா பூஜைக்கு எழுந்தருளி அனுக்ரஹித்தார்.முதலில் ஸ்ரீகணேச, குரு த்யானமும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் ஸ்ரீகுருபாதுகைகளுக்கு அர்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பிறகு “பாகவத சேவா மணி” ஸ்ரீ. காசிராம பாகவதர் குழுவினரின் பஜனை நடைபெற்றது. மங்கள ஹாரத்தி மற்றும் ப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்துசமயமன்றத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவரான கல்பாக்கம் ஸ்ரீ.நாகராஜன், கவிஞர் சாணுபுத்திரன், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீகண்ணன்ஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீமதிகௌரி வெங்கட்ராமன் பூஜை ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.
மாட்டுப்பொங்கல் திருவிழா
ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் சிறுமாத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சித்தநாயகி சமேத சித்தபுரீச்வரஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம், கோபூஜை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் பூஜைக்கான ஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்திருந்தனர். இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் சொற்பொழிவு மற்றும் சமயமன்ற அன்பர் ப்ரம்மஸ்ரீ. ராமமூர்த்தி சர்மா ருத்ர பாராயணம் மற்றும் பூஜைகளை நடத்தினார்.திருக்கோவில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ஸ்ரீராம் அபிஷேகத்தை நடத்தியும் வெகு அழகாக அலங்காரம் செய்து வைத்தார். திரளாக ஊர்மக்கள் கலந்துகொண்டனர். வெகுவிரைவில் ஸ்ரீசித்தபுரீச்வரஸ்வாமிக்கு கும்பாபிஷேக வையவத்தை நடத்திட கூட்டுப்ரார்த்தனை செய்யப்பட்டது.
திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்
தென்னாடு அளித்த தெய்வப்புலவர், எந்நாட்டவர்க்கும் பொதுமறை தந்த புனிதர் மகான் திருவள்ளுவர் திருவடி போற்றி! போற்றி! அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்!

“மாட்டுப்பொங்கல் திருவிழா”
தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் சிறுமாத்தூர் கிராமத்தில் அருள்மிகு சித்தநாயகி சமேத சித்தபுரீச்வரஸ்வாமி திருக்கோவில் வளாகத்தில் வருகிற 16.01.2020 வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன், மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு கோபூஜை, மற்றும் ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம், உலகநலன் வேண்டி கூட்டுப்ரார்த்தனை நடைபெற உள்ளது. ஆயிரம் வருடங்கள் பழமையான இத்திருக்கோவிலில் நடைபெற உள்ள வைபவங்களில் கலந்துகொள்ள வருகைதருமாறு அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ருத்ரபாராயணம் ப்ரம்மஸ்ரீ.ராமமூர்த்தி சர்மா அவர்கள், மறைமலைநகர்.
இவண்,
க.ஸ்ரீராம், NHTF
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,HSM
ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்,HSM
மற்றும் கிராமப்பொதுமக்கள்.