ஸ்ரீவிஜயேந்திர
சரஸ்வதி
சுவாமிகள்
ஜெயந்திவிழா!காஞ்சிசங்கரமடம்
27.02.2022.
💐🙏🏻💐
*
ஆயிரத்துத்
தொளாயிரத்து
அறுபத்து
ஒன்பது..!
💐
மார்ச் பதின்
மூன்று தாங்க
இறைவன்
இவரைத்
தந்தது..!
💐
ஸ்ரீ சங்கர
விஜயேந்திரர்
புண்ணிய
பூமிக்கி
வந்தது..!
💐
காஞ்சிகாமாட்சி
அம்மன் தாங்க
நமக்குஇவரைத்
தந்தது..!
💐
திருவள்ளூரு
பக்கந்தாங்க.!
“தண்டலம்”
பொறந்த
ஊருங்க..!
💐
போளூர் பாட
சாலையிலே
இவர் படிச்சார்
பாருங்க.!
💐
வேதவிற்பன்னர்
தந்தையாகிய
கிருஷ்ணமூர்த்தி
சாஸ்திரி..!
💐
அவர்களுமே
அங்குதாங்க
வேலையும்
பார்த்தாருங்க.!
வேதங்களை
அவரிடமே
கற்றுத்
தேர்ந்தார்
பாருங்க..!
இவருக்கீடு
யாருங்க..?
💐
இறைவன்இட்ட
இயற் பெயரு
சங்கர
நாராயணன்..!
💐
அனைவருமே
இவர் பெயரைச்
செய்யும்
பாராயணன்.!
💐
ஆயிரத்துத்
தொளாயிரத்து
எண்பத்து
மூன்றுங்க..!
💐
மே
இருபத்து
ஒன்பது..!
பட்ட மேற்ற
சான்றுங்க..!
💐
காஞ்சிபுரம்
சங்கர மடம்
எழுபதாவது
பீடங்க..!
💐
நம்மை எல்லாம்
கரை யேற்ற
வந்த உயர்
ஓடங்க..!
💐
காஞ்சி மகாப்
பெரியவரும்..!
ஜெயேந்திரரும்
வாழ்ந்தது…!
💐
நமசிவாய
மந்திரத்தில்
தினமும் மூழ்கி
ஆழ்ந்தது..!
💐
பட்டம் ஏற்ற
உடனேயே
ஸ்ரீ சகத்குரு
சந்திர…!
💐
சேகர
சரஸ்வதி
சுவாமியைப்
பற்றிப்
பத்து
ஸ்லோகம்
அடங்கிய…!
💐
“தசகம்”ஒன்று
பாடினார்…!
மக்கள்மகிழ்ந்து
ஆடினார்..!
💐
பஞ்சாப்
இமாச்சலம்
அசாம் ஒரிசா
மேற்குவங்கம்..!
ஆகிய..!
💐
ஊர்களுக்குச்
சென்றாரு..!
ஐம்புலன்
ஆசையை
வென்றாரு..!
💐
ஸ்ரீ ஜெயேந்திர
சுவாமிகளோடு
நேப்பாளமும்
சென்றாரு..!
வாழ்க மக்கள்
என்றாரு..!
💐
ஸ்ரீ விஜயேந்திர
சரஸ்வதி
சுவாமிகள்
பதமலரைப்
பணிவமே..!
💐
அவர்திருவடித்
தாமரைகளை
நம்தலையில்
அணிவமே..!
💐
வாழ்க ! வாழ்க !
விஜயேந்திரர்
வாழ்க ! வாழ்க !
வாழ்கவே.!
💐
கயிலை வாழும்
கண்ணுதலான்
அருள் நலங்கள்
சூழ்கவே..!
💐🙏🏻💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
27.02.2022
தினம்ஒருகவிதை
எண்.1255.
ஸ்ரீ
விஜயேந்திர
சரஸ்வதிஸ்வாமிகள்
பதமலர்
போற்றி போற்றி
💐🙏🏻💐
Author: admin
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஜயந்தி சிறப்பு சொற்பொழிவு-ஸ்வாமிமலை.ஸ்ரீமதி.லலிதா வெங்கடேசன்
தண்டலம் வேதபாடசாலையில் சிறப்பு அலங்காரம்
களிவந்தப்பட்டு இருளர் காலனி பகுதியில் அன்னதானம்
பணிகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
ஸ்ரீகுருப்யோ நம!
23.02.2022 புதன்கிழமை
இந்துசமயமன்றத்தின் பணிகள் பற்றிய அறிக்கை ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளிடம் அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமனால் சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீபெரியவர்கள் சமயமன்ற பணிகள் பற்றிய விஷயங்களை பார்வையிட்டருளி ஆசி வழங்கினார்கள். வியாசர்பாடி கிளை சென்னபுரி இந்துசமயமன்ற கிளை சார்பில் உருவாக்கிய ஸ்ரீஆதிசங்கரர்(ஸ்ரீமத் அத்வைதம்), ஸ்ரீமஹாபெரியவர் (ஸ்ரீமத் சனாதனம்), ஸ்ரீபுதுப்பெரியவர்(ஸ்ரீமத் லோகஹிதம்) பஞ்சலோக விக்ரஹங்களை இந்துசமயமன்ற மிகமூத்த அமைப்பாளர் ஸ்ரீ.ஹரிஹரன்ஜி சமயமன்றக்குழுவினருடன் ஸ்ரீபெரியவர்களிடம் சமர்ப்பித்தார். ஸ்ரீஸ்வாமிகள் மகிழ்வுடன் ஆசிவழங்கியருளினார்கள்.
இந்துசமயமன்றம், இந்து இறைபணிமன்றம் சார்பில் மாசிமகத்தன்று ஸ்ரீசமுத்ரராஜனுக்கு மஹாஹாரத்தி
“வீடுதோறும் திருமுறை, வீதிதோறும் தமிழ்மறை”
சிவாய நம!
“வீடுதோறும் திருமுறை, வீதிதோறும் தமிழ்மறை”
14.02.2022 திங்கட்கிழமை மறைமலைநகர் அருகில் கடம்பூர் சிவபெருமான் திருக்கோவிலில் ப்ரதோஷத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணிவரை உலகநலன் வேண்டி “பலன்தரும் பாராயணப்பதிகங்கள்” திருமுறை ஓதும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அன்னதானமும் நடைபெறும்.
அனைவரும் வருக! அரனருள் பெறுக!
இந்துசமயமன்றம்
திருவாசக முற்றோதுதல் குழு
ஸ்ரீமஹாபெரியவா இல்லம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்தஜனசபா சார்பில் அன்புடன் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திருச்செந்துறை ஸ்ரீமானேந்தியவல்லி உடனுறை ஸ்ரீசந்திரசேகரஸ்வாமி திருக்கோவிலில் சேலம் ஸ்ரீமஹாபெரியவா இல்லம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்தஜனசபா சார்பில் அன்புடன் வழங்கப்பட்ட மஹாபெரியவா ப்ரசாதம் இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்
இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.
