ஸ்ரீசங்கர சம்ப்ரதாய பீடங்களில் த்வாரகா மற்றும் ஜோஷி மடத்தின் (த்வி)பீடாதீச்வரராக இருந்து அருளாட்சி நடத்திய ஜகத்குரு சங்கராசார்யார் பூஜ்ய ஸ்ரீ ஸ்வரூபானந்த ஸரஸ்வதி மஹராஜ் அவர்கள் மஹாஸமாதி அடைந்தார். நமது மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீஸ்வரர்களிடம் மிகுந்த அன்பும் அபிமானமும் கொண்டவர்கள். ஸ்ரீஸ்வாமிகளிடம் மறைவிற்கு இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம்.
சேவாபாரதி தமிழ்நாடு, தாம்பரம் சார்பில் கீர்த்திமஹான் அன்னதான யோஜனா திட்டத்தின் கீழ் 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கூடுவாஞ்சேரி அருகில் வல்லாஞ்சேரி இருளர் பகுதியில் அன்னதானம் (லட்டு, புளியோதரை, உளுந்து வடை, ஆவின் பால் பாக்கெட், மினரல் வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது. அவ்வமயம் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் இருளர் மக்களுக்கு நமது இந்து தர்மம் பற்றியும் கொரானோ தடுப்பூசி போடுவதின் அவசியம் பற்றியும் விளக்கினார். அனுஷ அமிர்தம் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், இந்துசமயமன்ற அன்பர் ஸ்ரீ.சாயிராம், ஊர் அன்பர் ஸ்ரீ.அருள் ஆகியோர் வந்திருந்தனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத பொதுச்செயலாளர் ஸ்ரீ.தத்தாத்ரேய ஹொசபளேஜீ அவர்களை சென்னை தாம்பரம் ஸ்வதந்திர தின விழாவில் சந்தித்தபோது புலவர் ஸ்ரீ.க.ஆத்ரேய சுந்தரராமனிடம் இந்துசமயமன்ற சேவைப்பணிகளைப்பற்றி மிக ஆர்வத்துடன் கேட்டறிந்தார். உடன் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபாஸ்ரீ.வெங்கட்ராமன் மற்றும் அனுஷ அமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரன், ஆடிட்டர்.ஸ்ரீகாந்த்ஜீ.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்புகளான இந்துசமயமன்றம், ஜனகல்யாண் மாடம்பாக்கம் சார்பில் இன்று 14.08.22 ஞாயிறன்று நடைபெற்ற ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்திவிழா மற்றும் இந்துசமயமன்ற பொன்விழா நிகழ்ச்சியாக 108 திருவிளக்கு பூஜை மிகச்சிறப்பாக கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.பல்வேறு ஆன்மீக அமைப்புகளின் அன்பர்களும் பங்கேற்றனர்.ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் ப்ரசாதம், திருவிளக்கு,பூஜைப்பொருட்கள், மங்கலப்பொருட்கள் பங்கேற்ற மகளிருக்கு வழங்கப்பட்டது.