இந்துசமயமன்றம் சார்பில் வழக்கம்போல தீபாவளி பண்டிகை புது வஸ்த்ரம், பக்ஷணங்கள் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டது. நல்ல உள்ளங்களின் பேராதரவுடன் நமது தொடர்பிலுள்ள மாதாமாதம் சுத்தமான நல்லெண்ணெய் வழங்கும் திருக்கோவில்கள், வேதபாடசாலைகள், பழங்குடியினர் பகுதிகள் என இந்த முறை நாம் கடந்த தடவையைவிட அதிக இடங்களில் கைங்கர்யம் செய்ய வாய்ப்பை ஸ்ரீகாஞ்சிப்பெரியவர்கள ஏற்படுத்திக்கொடுத்தார்கள். அவரது அளப்பரிய கருணையை மனதில் இருத்தி மேலும் பணி செய்வோம். உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் கருணாகடாக்ஷம் என்றென்றும் நிலைத்திருக்க ஸ்ரீசரணர்களை ப்ரார்த்திக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
இந்துசமயமன்றம்

HSM-USA-Launched

With Sri Periyava’s anugraham HSM USA’s first Navaratri Thiruvilakku Pujai in USA has been completed.

Eight cities organized the pujai – Austin, Boston, Connecticut, Minnesota, New Jersey, Sacramento, St Louis & Seattle

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரால் 1972 ல் தோற்றுவிக்கப்பெற்று ஜகத்குரு ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் இன்று நமக்கெல்லாம் அருளாசி வழங்கிவரும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி மஹாஸ்வாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்துடன் பொன்விழா கண்டு இயங்கிவரும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் தற்போது ஸ்ரீசரணர்களின் ஆக்ஞையின்பேரில் அமெரிக்காவிலும் துவக்கப்பட்டு இந்துசமயமன்றம் காஞ்சி USA என்ற பெயரில் முதல் நிகழ்ச்சியாக மங்களகரமாக திருவிளக்குபூஜை எட்டு நகரங்களில் பக்தி சிரத்தையுடன் சிறப்பாக நடத்தப்பெற்றது. அதன் காட்சிகள் சிலவற்றை காணலாம். மேலும் தமிழ் தோத்திர பாடல்கள் பயிற்றுவிக்கும் வகுப்புகளும் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெறவுள்ளது. இதற்காக பெருமுயற்சி செய்த அனைவருக்கும், எட்டு நகரங்களிலும் பூஜையை ஒருங்கிணைத்து நடத்தியவர்களுக்கும், நம்மோடு தொடர்ந்து தொடர்புகொண்டு முதல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய ஸ்ரீமதி.அர்ச்சனா சுனில் அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் முனைவர்.கலைராம. வெங்கடேசன்
அமைப்பாளர்கள்.

இந்துசமய மன்ற கன்யாபூஜை , சுவாசினி பூஜை பொருட்களை ஸ்ரீபெரியவர் ஆசீர்வதிக்கிறார்.

ப்ரசாதம் கொடுத்து ஆசீர்வதிக்கும் காட்சிகள்

நவராத்ரி விழாவிற்காக காஞ்சி ஸ்ரீமடத்திற்கு வருகைதந்த இந்துசமயமன்ற பாராயண குழுவிற்கு, ஸ்ரீசரணர்கள், ஒவ்வொருவரையும் அழைத்து ப்ரசாதம் கொடுத்து ஆசீர்வதிக்கும் காட்சிகள்.

கன்யா பூஜை

இந்துசமயமன்றத்தின் சார்பில் இன்று 08.10.24 செவ்வாய்கிழமை காஞ்சீபுரம் ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடந்த கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை மற்றும் ஸ்தோத்திர பாராயணங்கள். சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீபெரியவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் ஒவ்வொரு இந்துசமயமன்ற உறுப்பினரையும் அழைத்து ஆசி வழங்கினார்கள். ஸ்ரீசங்கரா கல்லூரி சார்பில் கல்லூரி முதல்வரும் இந்துசமயமன்ற அமைப்பாளருமான முனைவர்.கலைராம.வெங்கடேசன் அவர்கள் கலந்துகொண்டவர்களுக்கு தாம்பூலப்பை ப்ரசாதம் வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் இந்துசமயமன்ற மற்ற இரு மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமனும் கலந்துகொண்டார்கள்.

அனுஷ பூஜை

ஆதம்பாக்கத்தில் நமது இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அனுஷ பூஜை. நமது மறைமலைநகரில் வீற்றிருந்த பெரியவருக்கு பூஜை