அனைத்து அன்பர்களுக்கும் இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்!

புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் முனைவர்.கலை இராம.வெங்கடேசன் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மாநில அமைப்பாளர்கள், இந்துசமயமன்றம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு
அனுஷ அமிர்தம் சார்பில் மாதந்தோறும் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் அவதரித்த அனுஷத்திருநாளில் பழங்குடியினர், சாலையோர மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தமாதம் (13.03.23) மாசி திங்கட்கிழமை அனுஷ நக்ஷத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் (ஜாங்கிரி, வடை, இட்லி, வெண்பொங்கல், சட்னி, சாம்பாருடன், மினரல்வாட்டர் பாட்டில்) சிறப்பாக வழங்கப்பட்டது.
சனாதன ஹிந்து மதத்தின் ஒப்பற்ற மஹாஞானி, காஞ்சி காமகோடி பீடதின் 69வது பீடாதீச்வரர், பாரதம் முழுக்க பலமுறை வலம் வந்து அளப்பரிய தொண்டாற்றியவர், ஏழை மக்களுக்காக கல்விச்சேவை, மருத்துவச்சேவை என மக்கள்சேவையையே தன் குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டவர்.
வேதபாடசாலைகள் அவரால் பல இடங்களில் துவக்கப்பட்டது. பல பழந்திருக்கோவில்கள் அவரால் பாரதம் முழுக்க புனருத்தாரணம் செய்யப்பெற்றது. அனேகமாக அவர் திருப்பாதம் படாத இடமே பாரதத்தில் இல்லை எனலாம். ஆதிசங்கரருக்குப்பிறகு கைலாயம் சென்ற ஜகத்குரு இவரே.
காஞ்சி மஹாபெரியவர் மூல மூர்த்தி என்றால் ஸ்ரீபுதுப்பெரியவர் உத்ஸவ மூர்த்தி எனவே கொள்ளலாம். அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை தீர்க்க அவராற்றிய பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நமது இந்துசமயமன்றம் மஹாபெரியவரால் தோற்றுவிக்கப்பெற்று ஸ்ரீபுதுப்பெரியவரால் வளர்க்கப்பட்டது. எப்போதும் இன்முகத்துடன் குங்குமம் கைநிறைய கொடுத்து அருளாசி வழங்குபவர். ஸ்ரீமஹாபெரியவரே, ஸ்ரீபுதுப்பெரியவர் லக்ஷ்மீ கடாக்ஷம் நிறைந்தவர் என சொல்வதுண்டு.
ஹிந்து மதத்தின் பாதுகாவலராக, உயர்ந்த ஸ்ரீகாஞ்சி மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சார்யராக அருளாட்சி புரிந்தவர். ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை நமக்கு ஞானஒளி வழங்கிட அருளியவர்.
ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஐந்தாவது ஆராதனை புனிதநாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீஸ்வாமிகளின் பொற்பதங்களில் ஹ்ருதயபூர்வமான மலரஞ்சலிகளை செலுத்துகிறது.
ஹிந்துதர்மம் பாரெங்கும் செழிக்க ஸ்ரீஸ்வாமிகளின் அருளாசிகளை வேண்டி ப்ரார்த்திக்கிறோம்.
இவண்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலை இராம.வெங்கடேசன்,
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள், மற்றும் அன்பர்கள்.
இந்துசமயமன்றம்.
மறைமலைநகரில் இந்துசமயமன்றம் சார்பில் இன்று (18.02.23 சனிக்கிழமை) ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்தி மற்றும் மஹாசிவராத்திரியை யொட்டி விசேஷ பக்திபாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஸ்ருதிலயா இசைப்பள்ளியைச்சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆசிரியை ஸ்ரீமதி.மஹாலட்சுமி அவர்களுடன் கலந்துகொண்டு அற்புதமாக பாடினர். அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள், புத்தகங்கள் வழங்கப்பட்டது. இரவு ப்ரசாதம் (சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், அரிசி உப்புமா வழங்கப்பட்டது.
ஸ்ரீ குருப்யோ நம!
ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 பீடாதீச்வரராய் விளங்கும் ஞானகுருநாதர் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 55வது ஜயந்தி மஹோத்ஸவ புனித நந்நாளில் ஸ்ரீ ஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரால் 1972 ல் தோற்றுவிக்கப்பட்டு பொன்விழா கண்ட ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தின் சமய, கலாச்சார,பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீ ஸ்வாமிகளின் அருள்வழிகாட்டுதலில் மக்கள் சேவையாற்றிவருகிறது.
இவண்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
ஸ்ரீ மதி.கௌரி வெங்கட்ராமன்
மற்றும்
கிளை அமைப்பாளர்கள்,
சமயமன்ற அன்பர்கள்,
இந்துசமயமன்றம்.