ஸ்ரீபர்வத மலை – சில விவரங்கள்.

இப்புனித மலைக்கு செல்ல
போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்மாதிமங்கலத்திலிருந்து ஒரு வழியும் திருவண்ணாமலை – செங்கம் வழியில் கடலாடியிலிருந்து ஒருவழியும் மலைக்கு போகிறது. சுமார் 26 கிமீ மலை சுற்றளவு. ஸ்ரீமஹாபெரியவா சஞ்சாரம் அந்த பக்கம் செய்துகொண்டிருந்தபோது இந்த மலையையே சிவபெருமானாக தரிசனம் செய்து மார்கழி முதல்நாள் கிரிவலம் செய்தார்கள். அன்றிலிருந்து மக்கள் அந்த நாளில் கிரிவலம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இருந்து லக்ஷத்தில் கூடுகிறார்கள். ரொம்ப விசேஷம் பல சித்தர்கள் இங்கு வாசம் செய்வது. ஸ்ரீசைலம் போலவே ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி ப்ரமராம்பிகாதேவி மூலவர். நாமே மலை ஏறிப்போய் அபிஷேகம் செய்து பூஜை செய்யலாம். மலை ஏறுவது மிகக்கடினமான விஷயம். கடப்பாரைகளை சங்கிலியால் இணைத்து வழி இருக்கும். அதைப்பிடித்து போகவேண்டும். திருவண்ணாமலை அருகில் சுமார் இருபது கிமீ தொலைவில் உள்ளது.

இந்துசமயமன்றம் சார்பில் பாவைப்போட்டிகள்.

ஸ்ரீகுருப்யோ நம!
பன்னிரு ஆழ்வார்களில் திருவரங்கநாதனின் மனம்கவர்ந்த ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை மற்றும் ஆடல்வல்லானின் அடிக்கமலத்திலேயே ஐக்கியமான மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி – இவை இரண்டையும் மனனம் பண்ணி மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் அருகிலிருக்கும் திருக்கோவிலிலேயோ அல்லது வீதியுலாவாக குழுவாக பாடி வந்தோ பக்தி வளர்க்க அருள்வழி காட்டினார்கள் நம் காஞ்சி மஹாபெரியவர்கள். ஸ்ரீமஹாபெரியவர் அவர் ஸ்தாபித்த இந்துசமயமன்றம் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடத்தி பரிசளிக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.
ஸ்ரீமஹாபெரியவர் காட்டிய வழியில் நமது இந்துசமயமன்றம் சார்பில் வருடந்தோறும் மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடைபெறுகிறது. குழந்தைகளின் வகுப்பிற்கேற்ப பாடல்கள் மனனம் செய்து அவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்புவித்து கையெழுத்து வாங்கி அனுப்பினால் அவர்களுக்கு காஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் அழகான சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். திருப்பாவை திருவெம்பாவை இரண்டிலும் சம பங்கு பாடல்களை மனனம் செய்திருக்கவேண்டும்.ஒன்று மட்டும் கூடாது. பங்கு பெற்ற மாணவர் பெயர், வயது, வகுப்பு, பள்ளி யின் பெயர், வீட்டு விலாசம் அல்லது பள்ளி விலாசம் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பள்ளி அல்லது அமைப்பின் மூலமாக போட்டி நடத்தினால் அவர்கள் முதல் மூன்று நிலைகளை வென்றவர் பெயர்களை குறிப்பிட்டு தனியாக அனுப்பினால் அவர்களுக்கு பரிசும் வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னர் ஜனவரி 15 தேதிக்குள் விவரம் எங்களுக்கு வந்து சேர வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி:
மாநிலஅமைப்பாளர்,
இந்துசமயமன்றம்,

  1. வேல் நகர் மூன்றாவது தெரு,
    ஆதம்பாக்கம்,
    சென்னை – 88.

கைபேசி: 9789007401 ; 9080588620

இந்துசமயமன்றம் சார்பில் பர்வதமலை கிரிவல அன்னதானம்

ஸ்ரீகுருப்யோ நம!
“மாதங்களில் நான் மார்கழி” என்றான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா கீதையில். மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளில் மலையே சிவனாய் அருள்பாலிக்கும் திருவண்ணாமலை அருகில் உள்ள மேருகிரி என வழங்கப்படுவதும் தென்கயிலாயம் என வணங்கப்படுவதும் ஸ்ரீபிரமராம்பிகா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி அருள்பாலிக்கும் திருத்தலமும் சித்தர்களால் இன்றளவும் பூஜிக்கப்படும் க்ஷேத்ரமும் ஆன பர்வதமலையை நடமாடும் தெய்வம் என நாம் வணங்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆசார்ய ஸ்வாமிகள் ஜகத்குரு ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் தன் திருப்பாதம் தோய கிரிவலம் செய்து சுற்றுப்புறமக்களுக்கு அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீகாஞ்சி பெரியவரின் பாதையில் இன்றளவும் வருடந்தோறும் மார்கழித்திங்கள் முதல்நாள் பர்வதமலை கிரிவலம் பக்தர்களால் பக்தியுடன் நடத்தப்படுகிறது. டிசம்பர் 17ந்தேதி செவ்வாய் அன்று கிரிவலப்பாதையில் நமது ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்ற அன்பர்களால் அன்னதானம் கடந்த வருடம் போலவே நடைபெற உள்ளது.
பர்வதமலை ஈசன் அருள் பெற பக்தர்களை அழைக்கிறோம்.

அயுத ஸஹஸ்ர ஸ்ரீமஹாகணபதி ஹோமம்

இந்துசமயமன்றம் சார்பில் 30.11.2019 சனிக்கிழமை சென்னை சூளைமேடு ஸ்ரீஆனந்தவினாயகர் திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட அயுத ஸஹஸ்ர ஸ்ரீமஹாகணபதி ஹோமம் மிகச்சிறப்பாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடந்தேறியது. முன்தினம் இரவிலிருந்து மழை கொட்டியது.காலை கும்பகோணம் ஸ்ரீசந்த்ரசேகர பவனத்திலிருந்து ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் விக்ரகரூபியாய் யாகசாலையில் எழுந்தருள மழை நின்றது. கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ ப்ரபுசர்மா தலைமையில் வேதவிற்பன்னர்களின் வேத கோஷம், ஹோமவிதான பூஜைகள், எட்டு தம்பதியினர் ஸ்ரீகணபதி உபாசகர்களைக்கொண்டு மூலமந்த்ர ஜபம், ஸ்ரீருத்ரம் சமகம் மற்றும் வேத கோஷம், புதிதாக அச்சடித்து வழங்கப்பட்ட ஸ்ரீவைனாயக த்ரிசதி புஸ்தகம் மூலமாக பாராயணம் என அந்த பகுதியே மிகப்பெரிய ஆன்மீக அதிர்வுள்ள ப்ரதேசமாக மாறிப்போனது. ஆயிரமாயிரமாக மோதகம், வெள்ளெருக்கு சமித்து, கருப்பு கரும்புத்துண்டு, வாழைப்பழம், மற்றும் அப்பம்,பொறி,அவல் என அனைத்து திரவியங்களும் ஸ்ரீமஹாகணபதிக்கு ஹோமத்தில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. யாகசாலை மேடையில் ஸ்ரீஆனந்த கணபதி, ஸ்ரீகாஞ்சிப்பெரியவர், ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரர் என மும்மூர்த்திகள் எழுந்தருளியிருந்தனர்.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், கல்பாக்கம் இந்துசமயமன்றம் ப்ரம்மஸ்ரீ.நாகராஜன்ஜி, வியாசர்பாடி இந்துசமய மன்றம் ஸ்ரீஹரிஹரன்ஜி,வளசரவாக்கம் இந்துசமய மன்றம் ஸ்ரீரகுராமன்ஜி, திருவொற்றியூர் இந்துசமயமன்றம் ஸ்ரீ.விசுஜி,ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.S V அண்ணா,ஸ்ரீமதி.ப்ரபா ஸ்ரீனிவாசன், ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் ஸ்ரீமதி.கீதா ராமச்சந்திரன் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் காஞ்சி மாவட்ட தலைவர் ஸ்ரீ.ராமச்சந்திரன், கூடுவாஞ்சேரி நகரத்தலைவர் ஸ்ரீ.சாயிராம், நிர்வாகிகள் ஸ்ரீதர்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.ஜோதி டிவி நேரலையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த ஹோமம் மதியம் மஹாபூர்ணாஹூதியுடன் மஹா அபிஷேகத்துடன் பூர்த்தியாகி அனைவருக்கும் அன்னப்ரசாதம் அளிக்கப்பட்டது. உடன் மதியம் ஹோமப்ரசாதம் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளுக்கு சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் ஸ்ரீமடம் கேம்பில் அளித்து அனுக்ரஹம் பெறப்பட்டது.
இந்த மிகப்பெரிய புனிதநிகழ்ச்சி நன்கு நடைபெற தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட கவிஞர் ஸ்ரீ.சாணுபுத்திரனுக்கு ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் ஏலக்காய் மாலை அளித்து ஆசீர்வதித்தார்கள். இந்த ஹோமத்திற்காக அயராது பாடுபட்ட சூளைமேடு கிளை ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஸ்ரீமதி.ஜெயலலிதா தம்பதியருக்கும் அவர்தம் குழுவினருக்கும்,ஸ்ரீஆனந்தவினாயகர் திருக்கோவில் நிர்வாகம் ஸ்ரீ.சங்கரலிங்கம் குழுவினருக்கும் சமயமன்றம் சார்பில் நன்றிகள்.
அதிக சிரத்தையுடன் ஹோமத்தை நடத்திக்கொடுத்த கும்பகோணம் ஸ்ரீப்ரபுசர்மா குழுவினருக்கு மனமார்ந்த நமஸ்காரங்கள்.
இந்த ஹோமத்தை நடத்தவேண்டும் என அடியேன் நினைத்தபோது முழுமையாக செயலாற்றி இதை ஒரு ஆன்மீக விழாவாக சமயமன்ற மாநாடு போல நடத்திக்காட்டிய என் அன்பு இளவல் கவிஞர் சாணுபுத்திரனுக்கு அடியேன் சார்பிலும் சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஸ்ரீஆனந்த மஹாகணபதி அருள் அனைவருக்கும் கிடைக்க ப்ரார்த்திக்கிறேன்!

குறிப்பு: ஸ்ரீமஹாகணபதி ஹோமம் பூர்த்தியாகி அனைவருக்கும் அன்னம்பாலித்து ஸ்ரீகும்பகோணம் ஸ்ரீபெரியவா மற்றும் ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரர் யாகசாலை மண்டபத்தை விட்டு கிளம்பியவுடன் பழையபடி மழை மிக அதிகமாக பெய்ய ஆரம்பித்தது. ஸ்ரீவருண பகவான் ஹோமத்திற்கு மிகவும் ஸஹாயம் பண்ணியுள்ளார். அவர் மலரடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்கள்!

ஆனைமுகனுக்கு ஆயிர ஆகுதி வேள்வி!

 ஆனைமுகனுக்கு ஆயிர ஆகுதி வேள்வி! ஆயிரம் கொழுக்கட்டை, ஆயிரம் கருப்பு கரும்பு துண்டு,ஆயிரம் பழம்,ஆயிரம் வெள்ளெருக்கு சமித்து, ஆயிரம் அஷ்ட திரவியம் என ஆயிரமாயிரமாக ஆகுதி கொடுத்து மிக மிக விசேஷமாக ஸ்ரீகணபதி உபாசகர்களைக்கொண்டு வேதோக்தமாக செய்யபட உள்ள ஹோமம். அனைத்து பக்தர்களும் ஒன்றிணைந்து இந்து சமய மன்றமாக, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்ய ஸ்வாமிகளின் அருளாசியோடு நடத்தப்பட உள்ள மஹாயக்ஞம்.இது நம் எல்லோருக்கும் இனிய வாழ்வை, வளத்தை, குணத்தை கொடுக்கக்கூடிய ஹோமம். அனைவரும் வருக! ஐங்கரனின் அருள்பெறுக!. இடம்: அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில், சூளைமேடு. நாள் : 30.11.2019 காலை 6 மணியளவில் துவக்கம்.

இந்துசமயமன்றம் சார்பில் மிக விசேஷ ஸ்ரீமஹாகணபதி ஹோமம்.

ஸ்ரீகுருப்யோ நம!
அன்புடையீர்!
நமஸ்காரங்கள்.
வருகிற சனிக்கிழமை 30.11.2019 காலை சூளைமேடு பஜனைக்கோவில் முதல் தெரு ஆனந்த வினாயகர் திருக்கோவிலில் மிக விசேஷ ஸ்ரீமஹாகணபதி ஹோமம் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தின் விசேஷம்:

  1. கணபதி உபாசகர்கள் எட்டு தம்பதியர் (கணவன் மனைவி இருவருமே கணபதி உபாசகர்கள் ) இருந்து ஸ்ரீகணபதி மூலமந்த்ர பாராயணம் செய்ய உள்ளனர்.
    2.மிக பவித்ரமான ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த ஹோமத்தை நடத்த உள்ளனர்.
    கும்பகோணம் “ஸ்ரீவித்யா கலாநிதி” ப்ரம்மஸ்ரீ. தினகர சர்மா அவர்களின் வழிகாட்டுதலில் அவரது சிஷ்யர் ப்ரம்மஸ்ரீ. ப்ரபுசர்மா குழுவினர் இந்த விசேஷ ஹோமத்தினை நடத்தி வைக்க உள்ளனர்.
    3.ஸ்ரீமஹாகணபதி ஹோமம் நடைபெறும்போது ஸ்ரீவைனாயக த்ரிசதி என்னும் வினாயகருக்கு ப்ரத்யேகமாக உள்ள முன்னூறு நாமாக்களை ஸ்தோத்திர வடிவில் பக்தர்கள் அனைவரும் பாராயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ஸ்ரீவைனாயக த்ரிசதி புஸ்தகம் புதிதாக அச்சிடப்பட்டு பாராயணம் செய்பவர்களுக்கு தரப்பட உள்ளது.
    5.அவ்வைப்பாட்டி அருளிய வினாயகர் அகவல் பாராயணம் ஹோமகாலத்தில் நடைபெற உள்ளது.
    6.இந்த மிகப்பெரிய ஹோமத்தில் ஆயிரம் ஆயிரமாக எண்ணிக்கையில் மோதகம் (கொழுக்கட்டை), கருப்பு கரும்புத்துண்டு, வாழைப்பழம், வெள்ளெருக்கு சமித்து, கொப்பரைத்தேங்காய் என அனைத்தும் ஆகுதி செய்யப்பட்ட உள்ளது. இதைத்தவிர எள்ளுருண்டை, அப்பம், பொரி, வினாயகருக்கு விருப்பமான பழங்கள், இலைகள், காய்கறிகள், புஷ்பங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
    7.ஸ்ரீமஹாகணபதிக்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் கவைஸ்ய ஸ்ருங்கம் மற்றும் வலம்புரி சங்கினால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதை தரிசிப்பதே மஹாபுண்யமான விஷயம் ஆகும்.
    8.இந்த ஹோமம் நடைபெறும் தலத்திற்கு அன்றைய தினம் முழுவதும் ருத்ராக்ஷங்களாலேயே ஆன சிவலிங்கம் ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரர் (ஸ்ரீமஹாபெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து ஸ்ரீபெரியவா பூஜை பண்ணிக்கொடுத்த அற்புதமான மூர்த்தி, பல இடங்களில் சிவநாம ஜப வேள்வி கண்ட ஸ்வாமி ) எழுந்தருள்கிறார்.
    கும்பகோணம் ஸ்ரீசந்த்ரசேகர பவனத்திலிருந்து ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திவ்ய விக்கிரகம் (உம்மாச்சி தாத்தா ) இதற்கென இத்திருக்கோவிலுக்கு பட்டினப்ரவேசமாக எழுந்தருள்கிறார்.
    அவ்வமயம் பரமேச்வர லிங்க மூர்த்திக்கும் ப்ரத்யக்ஷ பரமேச்வரரான நம் மஹாபெரியவாளுக்கும் ஏகாதச ருத்ர ஜபம் நடைபெற உள்ளது. பக்தர்களும் சேர்ந்து பாராயணம் செய்யலாம்.
    9.இந்த ஹோமத்தில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் லக்ஷ ருத்ராக்ஷ சிவார்ச்சனை செய்த உத்தமமான பஞ்சமுக ருத்ராக்ஷ ப்ரசாதம் வழங்கப்பட உள்ளது.
    8.ஆனந்த விநாயகர் கோவில் நான்கு புறமும் நான்கு விநாயகர் திருக்கோவில்கள் உள்ளது. இந்த அமைப்பு மிக விசேஷமாகும்.

“வேழ முகத்து வினாயகனைத்தொழ வாழ்வு மிகுத்து வரும்” என்னும் மூதுரைக்கேற்ப
ஸ்ரீமஹாகணபதி ஹோமத்திற்கு வந்து தரிசித்து ஆனைமுகனின், ஐங்கரனின் அருளையும் ஆசார்யாளின் குருவருளையும் பெற்றுய்ய பக்தர்கள் அனைவரையும் ப்ரார்த்திக்கிறோம்.ஹோமப்பத்திரிகையும் அனுப்பி உள்ளோம்.

இவண்
கவிஞர். சாணுபுத்திரன்
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்

ஸ்ரீகணேசாய மங்களம்!

லக்ஷ ருத்ராக்ஷ சிவ ஸஹஸ்ரார்ச்சனை பூஜை

இந்துசமயமன்றம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் நேற்றைய தினம் 24.11.2019 ஞாயிறு காலை ஆதம்பாக்கம் அருள்மிகு ஆவுடைநாயகி உடனுறை ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற லக்ஷ ருத்ராக்ஷ சிவ ஸஹஸ்ரார்ச்சனை பூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது. கையிலாய வாத்திய இசையுடன் செல்வி சமன்விதா சீனிவாசனின் தேவாரம் முதலில் நடைபெற்றது. தித்திக்கும் திருவாசகத்தேனமுதை நாளெல்லாம் பாடிவரும் ஸ்ரீபழனிப்பாட்டி வருகைபுரிந்தார்கள். நந்திவரம் கூடுவாஞ்சேரி சமயமன்ற கிளை திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் திருவாசகம் பாடினர். பழனிப்பாட்டி மிக்க மகிழ்ச்சியுடன் அருளாசி வழங்கினார்கள்.அடுத்து சிவாய நம ஸ்ரீலட்சுமி நாராயணன் அவர்கள் குழுவினர் வேதபாராயணம் நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளுக்கு குருவந்தனம் தோடகாஷ்டகம் மற்றும் ஸ்வஸ்தி வசனம் புஷ்பம் சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீசுப்ரமண்யம் அவர்கள் மூலமாக ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் பரமகருணையுடன் அருட் ப்ரசாதம் விழாவிற்கு அனுப்பி அருளாசி வழங்கினார்கள். கயிலாய வாத்தியம், தேவார திருவாசகம் பாராயணம், வேதபாராயண கோஷ்டி ஸ்ரீருத்ர த்ரிசதி மற்றும் சிவஸஹஸ்ரநாமம், அடியார்களின் சிவ கோஷம் என சிவ ஸஹஸ்ரார்ச்சனை வழிபாடு நாலாபுறமும் சிவநாமம் ஒலித்துக்கொண்டிருக்க ஸ்ரீநந்தீஸ்வரரும் ருத்ராக்ஷ லிங்கேஸ்வரரும் மிக அழகாக பீடத்தில் வீற்றிருக்க, கொல்லிமலையில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்படவுள்ள ஸ்ரீருத்ராக்ஷ லிங்கத்திருமேனிக்கு பக்தர்கள் அனைவரும் அவரவர் கரங்களினாலே ருத்ராக்ஷத்தினால் அர்ச்சனை செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சிவனடியார்கள் வேலூர், ஆம்பூர், திருவள்ளூர் என தமிழகம் மட்டுமன்றி புதுவையிலிருந்தும் வந்து குழுமியிருந்தார்கள்.ஒன்றுபட்ட ப்ரார்த்தனை மிகவும் பயனுடையது.ஒரு லக்ஷம் ருத்ராக்ஷ பூஜை நமது சைவ சமய வரலாற்றில் ஒரு மைல்கல். பூஜை நிறைவடைந்தவுடன் இனிதே ஆரத்தி மற்றும் ப்ரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பாஜக தலைவர் ஸ்ரீ.இல.கணேசன் வந்திருந்து பூஜையில் கலந்துகொண்டார். கவிஞர் சாணுபுத்திரன்,புலவர் ஸ்ரீ ராமச்சந்திரன், திண்டிவனம் SS மெடிக்கல் சிவஸ்ரீ.மனோகரன், விழுப்புரம் சிவஸ்ரீ.பொன்முடி என பல சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.திண்டிவனம் ஸ்ரீநாகராஜன் விழாவிற்கு புஷ்பம் அனுப்பியும், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா பல கைங்கர்யங்களையும் , திண்டிவனம் கூட்டேரிப்பட்டு ஸ்ரீ.SS மனோகரன் ருத்ராக்ஷ லிங்கம் செய்து அளித்தும் உதவினர். ஸ்ரீநந்தீஸ்வரர் கோவில் ஸ்தானீகம் சிவஸ்ரீ.சீதாராம குருக்கள் விழாவிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இன்முகத்துடன் செய்து கொடுத்தார்.வரமுடியாத நிலையில் பல அன்பர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து அர்ச்சனை செய்த ருத்ராக்ஷ ப்ரசாதம் வேண்டியுள்ளனர். அனைவருக்கும் அனுப்ப உள்ளது.
இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற உதவிய அனைத்து அன்பர்களுக்கும் இந்துசமயமன்றம் மற்றும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகள்!
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
திருமதி. கௌரி வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
திரு.கே.ஸ்ரீராம்,
பொதுச்செயலாளர்,
திரு.கண்ணன்,PRO
தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு.

நேற்று 24.11.2019 ஞாயிறு அன்றுஆதம்பாக்கம் ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற லக்ஷருத்ராக்ஷ சிவ ஸஹஸ்ரார்ச்சனையில் பங்கு பெற்ற அன்பர்கள் சுமார் 1800க்கும் மேல்.
மாலை தரிசித்து ருத்ராக்ஷ ப்ரசாதம் பெற்றோர்கள் சுமார் 3000க்கும் மேல்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

திருக்காஞ்சி பீட குருவே போற்றி!

காஞ்சி டைம்ஸ் பத்திரிகையில் நமது இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற இலவச கண் கண்ணாடி வழங்கிய விழா, ஒரத்தூர் இருளர் பகுதியில் தீபாவளிக்கு இனிப்பு வழங்கிய நிகழ்ச்சி, இந்துசமயமன்றத்தின் நற்பணிகளை பாராட்டி அமைப்பாளர்களுக்கு ‘தர்மரத்னா ‘ விருது சுதேசி பத்திரிகை சார்பில் வழங்கிய விழா நிகழ்ச்சி என அனைத்தும் வெளிவந்துள்ளது. இது போன்ற நல்ல தவறாது் வெளியிடும் அருமை நண்பர் திரு.கருணாகரன் அவர்களுக்கு மிக்க நன்றி!

இந்து சமய மன்றம் சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீகுருப்யோ நம!
தீமையை அழித்து நன்மையை அளித்து உலகுக்கு கீதையை உபதேசம் பண்ணின ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை ஸத்யபாமையின் மனம் கவர்ந்த மணாளனை இந்த தீபாவளி நன்னாளில் வணங்குவோம்.!

ஜகத்குரு என்கிற உயர்ந்த அதிஉன்னத நிலை ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அடுத்து நமது ஆதிசங்கராச்சாரியாளுக்குமே உண்டு. அவர்வழிவந்த ஆசார்யாள் அத்துணை பேரின் கமலபாதங்களை அஞ்ஞானம் என்ற தீமை அகன்று மெய்ஞானம் பெற வணங்குவோம்!

பாரதீய கலாச்சாரத்தை அதன் பாரம்பரிய பண்பாட்டு பெருமைகளை உள்வாங்கி இந்த நல்லநாளில் சனாதன இந்து தர்மத்தை எந்நாளும் விட்டுக்கொடுக்காமல் உற்றசகோதரர்களாக வாழ உறுதி ஏற்போம்!

இந்து சமய மன்றம் சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அமைப்பாளர்கள்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்