இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை

இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை 28.01.2021 வியாழக்கிழமை தைப்பூசத்திருநாளில் பெருங்குடி ஸ்ரீநாகமணி அடிகளார் ஜீவசமாதி திருக்கோவில் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நூற்று ஐம்பது மகளிர் பங்கேற்ற திருவிளக்கு பூஜையினை இந்துசமயமன்ற அன்பர் திருமதி. சுஜாதா காமேஸ்வரன் அவர்கள் நடத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நமது இந்துசமயமன்றம் சார்பில் ஆடிட்டர் திரு. ஸ்ரீகாந்த்ஜி பங்கேற்று பசு பாதுகாப்பு மற்றும் கோமாதா சிறப்புகளை கூறி சொற்பொழிவு ஆற்றினார்கள். சித்தாந்தா பவுண்டேஷன் சார்பில் திருக்கோவில்களில் நூலகம் அமைக்கும் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்து முதல் முயற்சியாக இந்த கோவிலில் அதற்கான அறிமுக உரையாற்றி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திரு.கிருஷ்ணன் அவர்கள் மக்களுக்கு வழங்கினார் .திருக்கோவில் நிர்வாகி திருமதி. மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பூஜைக்காக சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். பகுதிவாழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வருகைபுரிந்தனர். இந்த திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இதேநாள் காலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திருக்கோவில் வளாகத்தில் ஆரம்பப்பள்ளி மற்றும் கோசாலை நடைபெற்று வருகிறது.
ஜெயஜெய சங்கர!
ஹரஹர சங்கர!

திருவிளக்கு பூஜை

நேற்று 22.01.21 தை வெள்ளிக்கிழமை வேளச்சேரி ஸ்ரீகணபதி சச்சிதானந்தா் ஹாலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் ஸ்ரீபெரியவா ஆக்ஞைப்படி இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் கலந்துகொண்டார். சாக்தஸ்ரீ காசி வாத்தியார் அவர்கள் மிகவும் க்ரமமாக பூஜையை நடத்தி வைத்தார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவா அனுஷ பூஜை சமிதி இந்த பூஜைக்கு மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

காளை விடும் போட்டி

மனமார்ந்த வாழ்த்துக்கள்! கடலாடி இந்துசமயமன்றம் காளை விடும் போட்டியிலும் கலக்குகிறது. சகோதரர் ஜெயவேலுவிற்கும் அவர்தம் மைந்தருக்கும் வாழ்த்துக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை அடிவாரம் கடலாடி இந்து சமய மன்றம் கிளை அமைப்பாளர் G.V.ஜெயவேல் மகன் ஜெ,பரத்குமார் கடலாடி காளை (இராவணன்) இந்து சமய மன்றம் சார்பாக இன்று காளை விடும் திருவிழாவில் கலந்து கொண்டபோது

இந்துசமயமன்றம் சார்பில் இருளர் பகுதியில் இனிய பொங்கல் விழா

ஸ்ரீகுருப்யோ நம!
11.01.2021 திங்கட்கிழமை ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் உள்ள ஒரத்தூர் ஊராட்சி இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்துசமயமன்றம் சார்பில் மூன்றாவது ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அந்த பகுதி வினாயகர் மற்றும் ஸ்ரீகன்னியம்மன் கோவிலில் புது வஸ்த்ரம் சாற்றி உலகநலன் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது.ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபாவின் ஆதரவில் செல்வி ராஜேஸ்வரி (US), அருமை சகோதரர் திரு.ராஜ்மோகன் அவர்களின் பங்களிப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமிகு.N.D.சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒரத்தூர் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில், இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் தலைமையில் ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிமன்றம் சிவஸ்ரீ.மணிவண்ணன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், சமயமன்ற அன்பர்கள் ஸ்ரீ.சந்திரநாத்மிஸ்ரா,ஸ்ரீ.சாயிராம், ஸ்ரீ.ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்றனர்.இருளர் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களுடன் புது போர்வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெற உதவிய சமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி.கௌரி வெங்கட்ராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை நேற்று பக்தியுடன் கொண்டாடப்பட்ட அடுத்தநாள் இந்த நல்ல நிகழ்ச்சி அதன் தொடர்ச்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஹரஹர சங்கர! ஜயஜய சங்கர!

தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை

தைப்பூசம் திருவிழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்தமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.

புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.

இந்த கடலாடி கிராமத்தில் இந்துசமயமன்றம் கிளை செயல்படுகிறது. வருடாவருடம் அன்னதானம் மார்கழி ஒன்றாம் தேதி சமயமன்றம் சார்பில் செய்யப்படுகிறது.

நேற்று மார்கழி ஒன்றாம்நாள் கடலாடி இந்துசமயமன்றம் அமைப்பாளர் திரு ஜெயவேலு அவர்கள் வழக்கம்போல் பர்வதமலை ஈசனின் பிரசாதப்பை சமயமன்றம் சார்பில் வழங்கினார். புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.

ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்

பழம்பெரும் சைவ ஆதீனங்களில் ஒன்றும், தொண்டைமண்டல சைவ ஞானபீடமுமாகிய தொண்டைமண்டல ஆதீனத்தின் 232வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள் முக்தி அடைந்தார்கள். தமிழிலும் சைவத்திலும் மிகுந்த புலமையும் ஞானமும் பெற்ற ஞானாசிரியராக விளங்கிய ஸ்ரீஸ்வாமிகளின் தொண்டு போற்றி வணங்குதற்குரியது. ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிமலர்களில் இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கிறோம். இவண், மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள். இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.

நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம்

நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம் இன்று 29.11.2020 ஏற்றப்பட்டது. இந்துசமயமன்றம் சார்பில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.இனிப்பு வழங்கப்பட்டது.

இந்துசமயமன்றம் சார்பில் இருளர் மக்களுடன் இனிய தீபாவளிப்பண்டிகை.

13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஒரத்தூர் கிராமத்தில் இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் சவுதி ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா உதவியுடன் தீபாவளிப்பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு இனிப்பு மற்றும் பொங்கலுக்கு புத்தாடையுடன் அறுசுவை உணவு கடந்த மூன்று வருடங்களாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்த பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட நிகழ்ச்சியில் ஒரத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் திருமதி.கற்பகம் சுந்தர், திரு.N.D.சுந்தர், திரு.சுபாஷ், மற்றும் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி, இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், சமயமன்ற அன்பர்கள் திரு. சாயிராம், திரு.சந்த்ரநாத் மிஸ்ரா, ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திரு.க.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.