ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயாவில் கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் வேதபாரதி சார்பில் நடைபெற்ற அதிருத்ர மஹா யக்ஞத்தில் சுமார் ஆயிரத்து முந்நூறு பேர் ஸ்ரீருத்ர பாராயணம், பதினோரு ஹோம குண்டங்களில் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற்றது. ஸ்ரீநெரூர் ஸ்வாமிகள், ஸ்ரீமுல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் வருகை புரிந்தனர். அச்சமயம் நமது இந்துசமயமன்றம் சார்பில் வேத பண்டிதர்கள் அனைவருக்கும் 1800 மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. கோபூஜைக்கு நமது பெருங்களத்தூர் இந்துசமயமன்ற அமைப்பாளர் திரு.ஷ்யாம் அவர்கள் கோசாலையிலிருந்து பூஜைக்கு ராஜஸ்தான் நாட்டுப்பசுமாடு அழைத்துவந்து பூஜை செய்யப்பட்டது. மற்றும் சுத்தமான பசும்பால் வழங்கப்பட்டது.
Category: News
அயோத்தி ஸ்ரீராமனுக்கு மங்களம்!
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்
ஜெய் ஸ்ரீராம்!
இன்று 21.01.24 ஞாயிறன்று மாலை அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மிக விமரிசையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு லோகக்ஷேமத்தை ப்ரார்த்தித்து ஸ்ரீஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனூமத் சமேத ஸ்ரீராமபிரானுக்கு விசேஷ பூஜைகள், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், நாமராமாயண பாராயணம், ஸ்ரீராம நாம ஜபம், புஷ்பாஞ்சலி ஆகியவை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக எமது இல்லத்தில் நடைபெற்றது. அவ்வமயம் அயோத்தி ராமர் ஆலயம் அமைய ஸ்ரீகாஞ்சி சங்கரமடம் ஆற்றிய பணிகள், ஸ்ரீஆசார்ய மும்மூர்த்திகளின் அருளாசிகள் ஆகியவை இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் அவர்களால் பக்தியுடன் எடுத்துக்கூறப்பட்டது. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளர் டாக்டர் ஸ்ரீராம், அனுஷ அமிர்தம் நிறுவனர் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், பேராசிரியர் டாக்டர்.சிவ சிதம்பரநாதன் மற்றும் பல அன்பர்கள் கலந்துகொண்டனர். இந்துசமயமன்றம், அனுஷ அமிர்தம், பகுதிவாழ் அன்பர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக சுவையான இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்துசமயமன்றம் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை மற்றும் பொங்கல் விழா
இந்துசமயமன்றம் சார்பில் பழங்குடி மக்களுக்கு ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருள் வழிகாட்டுதலில் அவர் அருளாலே அவர்திருத்தாள் வணங்கி, இந்த வருடமும் வழக்கம்போல பொங்கல் பொருட்கள் (பொன்னி பச்சரிசி, பாகு வெல்லம், பசுநெய், முழு முந்திரி, பாசிப்பருப்பு, ஏலக்காய், உலர்திராட்சை) பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் வழங்கப்பட்டது.
இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீமஹாபெரியவர் வீதியுலா, விசேஷ அனுஷ பூஜை
07.01.24 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆதம்பாக்கம் சாந்தி நகர் 11 வது தெரு ஸ்ரீமதி.பிருந்தா மாமி அவர்கள் இல்ல வளாகத்திலிருந்து பாண்டுரங்கன் ரகுமாயி திருக்கோவிலை பிரதக்ஷிணமாகச்சுற்றி மஹாபெரியவர் வீதியுலா ஹரஹர சங்கர ஜய கோஷத்துடன் நடைபெற்றது. பிறகு ஸ்ரீமஹாபெரியவர் பூஜா க்ரமப்படி வெகு விமரிசையாக அனுஷ பூஜை நடைபெற்றது. ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனை சமயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு மஹாபெரியவர் அருட்ப்ரசாதம் வழங்கப்பட்டது.
“மஹாபெரியவா சரணம்!”
இந்துசமயமன்றத்தின் 2024 ம் ஆண்டு இனிய பொங்கல் விழா
07.01.24 ஞாயிற்றுக்கிழமை காலை கலிவந்தப்பட்டு பழங்குடி மக்களோடு மூன்றாவது ஆண்டாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியோடு கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப்பணி வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா ஸ்ரீ.வெங்கட்ராமன், வஞ்சுவாஞ்சேரி ஸ்ரீகிருஷ்ணன் கோவில் டிரஸ்டி ஸ்ரீமதி.புவனேஸ்வரி, அனுஷ அமிர்தம் ஸ்ரீ.இராமச்சந்திரன், பேராசிரியர்.டாக்டர்.சிவசிதம்பரநாதன்,நந்திவரம் சிவஸ்ரீ.நடராஜ குருக்கள்,ஸ்ரீ.சிவகுமார் தம்பதிகள், ஸ்ரீ.ஷ்யாம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீ.சாய்ராம், கலிவந்தப்பட்டு முன்னாள் தலைவர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
பழங்குடி மக்களின் முன்னேற்றம் தேசத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர்களின் தொன்மையான வரலாறு மற்றும் கல்வி கற்கவேண்டிய அவசியத்தையும், பெண் கல்வி மற்றும் சுயதொழில் பயிலவேண்டிய அவசியத்தையும், இந்துசமயமன்றம் சார்பில் பழங்குடி மக்களுக்கு ஆற்றும் பணிகள் குறித்தும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் விளக்கினார். ஆர்வமுள்ள குழந்தைகளை கல்லூரிவரை சேர்த்து இந்துசமயமன்றம் சார்பில் படிக்கவைத்து வருவதை குறிப்பிட்டார்.உலக நலன் வேண்டி கூட்டுப்ரார்த்தனையுடன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துடன், புத்தாடைகள் வழங்கப்பட்டது. அருமையான சுவையான மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த வருட பொங்கல் விழா ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் ஆராதனை சமயத்தில் அவர் தோற்றுவித்த இந்துசமயமன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மஹாபெரியவரின் ஆராதனை புண்ய நன்னாளில்
ஸ்ரீகுருப்யோ நம!
காஞ்சியின் கருணை தெய்வம் மஹாபெரியவரின் ஆராதனை புண்ய நன்னாளில் உலகநலனை வேண்டி ஸ்ரீசரணர்களின் திருவடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்களுடன் ப்ரார்த்திக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு
(1972 ல் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரால் தோற்றுவிக்கப்பெற்ற சமயச்சேவை அமைப்பு)