அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்

அத்வைத ஞான மூர்த்தி ஆனந்த மோன மூர்த்தி இச் சகம் வாழ வாழும்
ஈடிலா எம் குரு மூர்த்தி
உத்திராடம் உதித்த மூர்த்தி

ஊழ்வினை அகற்றும் மூர்த்தி

எத்தகு பிழை செய்தாலும் ஏழையேமை ஏற்கும் மூர்த்தி
ஒப்பிலா உண்மை அன்பு
ஓங்கிட அருளும் மூர்த்தி
ஒள டதம் போலும் நின்று
அகிலத்தைக் காக்கும் மூர்த்தி
இஃது எம் தோத்திரப் பா
ஏற்றெமை ஆண்டருள்க!
பூஜ்ய ஶ்ரீ சுவாமிகளின் 53வது ஜெயந்தி நன்னாளில் அன்னாரின் திருப் பாத கமலங்களில் சமர்ப்பணம்.
வ.ச. ஶ்ரீகாந்த் – இந்து சமய மன்றம்

சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் அவர்களின் 53வது ஜயந்தி

ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70 பீடாதிபதிகள் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் அவர்களின் 53வது ஜயந்தி நன்னாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளின் திருவடிக்கமலங்களில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பணம் செய்கிறோம்.
இந்துசமயமன்றம்
அமைப்பாளர்கள் மற்றும் அன்பர்கள்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

கோபூஜை தண்டலம் 05.03.2021

இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஜயந்தி விழா – கோபூஜை
தண்டலம் (ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலம்)
05.03.2021 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலத்தில் கோபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ஊர்மக்கள் அவரவர் வீட்டு பசுமாடு கன்றுக்குட்டியுடன் அழைத்துவந்தனர். இருபத்தோரு பசுமாடுகளுக்கு தண்டலம் வேதபாடசாலை வளாகத்தில் பூஜை வேதவிற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி பசுக்களின் மஹிமைகள் பற்றிய விளக்கினார். ஸ்ரீ.ஸ்ரீதர்ஜி அவர்கள் ஆலோசனைகளுடனும், கிராமப்பொதுமக்களின் மிகச்சிறப்பான ஒத்துழைப்புடனும் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடனும் கோபூஜைை விசேஷமாக நடந்தேறியது.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீ.வெங்கட்ராமன் (ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா)ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை

இந்துசமயமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை 28.01.2021 வியாழக்கிழமை தைப்பூசத்திருநாளில் பெருங்குடி ஸ்ரீநாகமணி அடிகளார் ஜீவசமாதி திருக்கோவில் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நூற்று ஐம்பது மகளிர் பங்கேற்ற திருவிளக்கு பூஜையினை இந்துசமயமன்ற அன்பர் திருமதி. சுஜாதா காமேஸ்வரன் அவர்கள் நடத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நமது இந்துசமயமன்றம் சார்பில் ஆடிட்டர் திரு. ஸ்ரீகாந்த்ஜி பங்கேற்று பசு பாதுகாப்பு மற்றும் கோமாதா சிறப்புகளை கூறி சொற்பொழிவு ஆற்றினார்கள். சித்தாந்தா பவுண்டேஷன் சார்பில் திருக்கோவில்களில் நூலகம் அமைக்கும் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்து முதல் முயற்சியாக இந்த கோவிலில் அதற்கான அறிமுக உரையாற்றி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திரு.கிருஷ்ணன் அவர்கள் மக்களுக்கு வழங்கினார் .திருக்கோவில் நிர்வாகி திருமதி. மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பூஜைக்காக சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். பகுதிவாழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வருகைபுரிந்தனர். இந்த திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இதேநாள் காலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திருக்கோவில் வளாகத்தில் ஆரம்பப்பள்ளி மற்றும் கோசாலை நடைபெற்று வருகிறது.
ஜெயஜெய சங்கர!
ஹரஹர சங்கர!

திருவிளக்கு பூஜை

நேற்று 22.01.21 தை வெள்ளிக்கிழமை வேளச்சேரி ஸ்ரீகணபதி சச்சிதானந்தா் ஹாலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் ஸ்ரீபெரியவா ஆக்ஞைப்படி இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் கலந்துகொண்டார். சாக்தஸ்ரீ காசி வாத்தியார் அவர்கள் மிகவும் க்ரமமாக பூஜையை நடத்தி வைத்தார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவா அனுஷ பூஜை சமிதி இந்த பூஜைக்கு மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

காளை விடும் போட்டி

மனமார்ந்த வாழ்த்துக்கள்! கடலாடி இந்துசமயமன்றம் காளை விடும் போட்டியிலும் கலக்குகிறது. சகோதரர் ஜெயவேலுவிற்கும் அவர்தம் மைந்தருக்கும் வாழ்த்துக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை அடிவாரம் கடலாடி இந்து சமய மன்றம் கிளை அமைப்பாளர் G.V.ஜெயவேல் மகன் ஜெ,பரத்குமார் கடலாடி காளை (இராவணன்) இந்து சமய மன்றம் சார்பாக இன்று காளை விடும் திருவிழாவில் கலந்து கொண்டபோது