ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்

இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.

அவிட்டபூஜை

இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.

அனுஷ நக்ஷத்திரத்தன்று மாதந்தோறும் அன்னதானம்

செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் ஸ்ரீமஹாபெரியவர் அவதரித்த அனுஷ நக்ஷத்திரத்தன்று மாதந்தோறும் அன்னதானம் செய்ய அனுஷம் அமிர்தம் என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பெற்று இன்று 27.01.2022 வியாழக்கிழமை காலை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்றது.

மறைமலைநகர் இந்துசமயமன்ற கிளை சார்பில் நடைபெற்ற போட்டிகள் பரிசளிப்புவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் இந்துசமயமன்ற கிளை சார்பில் நடைபெற்ற மாணவ மாணவியர்க்கான திருப்பாவை-திருவெம்பாவை போட்டிகள் பரிசளிப்புவிழா 26.01.2022 புதன்கிழமை மறைமலைநகர் பூங்குன்றனார் தெரு திருமதி.பார்வதிரமணி அவர்கள் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. மறைமலைநகர் ஸ்ரீகிருஷ்ணபவனம் டிரஸ்ட் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்க போஷகர் ஸ்ரீ.ப்ரகாஷ் மற்றும் நிர்வாகிகள், இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், திருக்கோயில் எண்ணெய் வழங்கும் திட்ட பொறுப்பாளர் திரு.கே.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சமயமன்ற சான்றிதழ், நித்யபாராயண புத்தகம், ப்ரசாதம் மற்றும் பிராமணசங்கம் சார்பில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. சிற்றுண்டியுடன் விழா இனிதே நடந்தேறியது.

பொங்கல் விழா நிகழ்ச்சிகள்

ஸ்ரீகுருப்யோ நம!
இந்த வருடத்திற்கான பொங்கல் விழா நிகழ்ச்சிகள் கொரானோ ஊரடங்கு அரசின் விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து பங்கேற்க வேண்டுகிறோம்.
இந்த 2022 ஜனவரி மாதத்திலிருந்து காஞ்சி மஹாபெரியவர் அவதரித்த திருநக்ஷத்த்திரமான அனுஷ நக்ஷத்திரத்தில் அனுஷ அமிர்தம் சார்பில் களிவந்தப்பட்டு இருளர் பகுதி மற்றும் நலிவுற்றோருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

28வது வார்ஷிக ஆராதனை

இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீமஹாபெரியவர் அனுஷ பூஜை ஸ்வாமிகளின் 28வது வார்ஷிக ஆராதனை தினத்தையொட்டியும்,2022ம் வருடத்தில் லோகக்ஷேமத்திற்காக ப்ரார்த்தித்தும், பள்ளிக்கரணை மேப்பிள்டன் அப்பாசாமி அபார்ட்மெண்ட் பார்ட்டி ஹாலில் 31.12.2021 வெள்ளிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமஹாபெரியவருக்கு விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.சிரஞ்ஜீவி.ஆதித்யா,ரோஹித்,சூர்யா ஆகியோரின் ஸ்ரீபால ஸத்ஸங்கம் நாமஸங்கீர்த்தனம் வெகு சிறப்பாக இருந்தது. நன்மங்கலம்.ப்ரம்மஸ்ரீ.கணேச பாகவதர், வேளச்சேரி. ரகுநாத் லக்ஷ்மண் டிரஸ்ட் சாக்தஸ்ரீ.காசி ஸாஸ்த்ரிகள் விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். அனைவருக்கும் திருவாசகம் புஸ்தகம், ஸ்ரீகுருவாயூரப்பன் ப்ரசாதம், ஸ்ரீராமபட்டாபிஷேக படம் வழங்கப்பட்டது. மஹா ஆரத்தியுடன் அருட்ப்ரசாதம் மற்றும் இரவு சிறப்பான உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
ஜயஜய சங்கர!
ஹரஹர சங்கர!

இன்று காஞ்சிப்பெரியவரின் 28வது வருடாந்திர ஆராதனையை முன்னிட்டு இந்துசமயமன்றம் மற்றும் அனுஷ அமிர்தம் சார்பில் அன்னதானம் கூடுவாஞ்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

பர்வதமலையை கிரிவலம் வந்த மார்கழி ஒன்றாம்நாள்

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் தக்ஷிணகைலாயம் என வழங்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் பர்வதமலையை கிரிவலம் வந்த மார்கழி ஒன்றாம்நாள் அவரது அருளைப்போற்றும்வண்ணம் ஒவ்வொரு வருடமும் லக்ஷக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த வருடம் 16.12.2021 வியாழக்கிழமை இன்றைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் அன்னதானம், காபி மற்றும் ஆன்மீக புத்தகப்ரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கடலாடி இந்துசமயமன்ற அமைப்பாளர் திரு.ஜெயவேலு அவர்கள் மிகச் சிறப்பாக பல அன்பர்களுடன் செய்திருந்தார். திரு.ஜெயவேலு அவர்கள் பர்வதமலை கிரிவலம் வருபவர்களுக்கு சாதாரண நாட்களிலும் வழிகாட்டியாகவும் சேவை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்துசமயமன்றம் சார்பில் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!