ஆயிரம் பேருக்கு நீர்மோர்

07.07.2025 திங்கட்கிழமை தண்டலம் (ஸ்ரீபெரியவர்கள் அவதாரஸ்தலம்) ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீதரணீஸ்வரஸ்வாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேக வைபவத்தில் இந்துசமயமன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் இதைக்கண்டு மகிழ்ந்து ‘நல்ல கைங்கர்யம்’ என பாராட்டி ஆசி வழங்கினார்கள்.

மணிவிழா

காஞ்சி ஸ்ரீமடத்தின் ஏனாத்தூர் சங்கரா கல்லூரி முதல்வரும், இந்துசமயமன்ற அமைப்பாளரும் என் அன்பு சகோதரருமான முனைவர் கலைராம.வெங்கடேசன் – சௌ.கிருஷ்ணவேணி தம்பதியரின் மணிவிழா இன்று காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் வேதோக்தமாக சிறப்பாக நடந்தது. இந்துசமயமன்றம் சார்பில் வாழ்த்துக்களை மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் தெரிவித்ததோடு மணிவிழா வாழ்த்துக்கவிதையையும் அனுப்பினார்.
வாழ்க மணிவிழா தம்பதியினர்!

மணிவிழா வாழ்த்து மடல்

அன்பின் ஆளுமை!
பண்பின் செழுமை!
பழக இனிமை!
பதவியில் நேர்மை!
உதவியில் தாய்மை!
உள்ளத்தில் தூய்மை!
உயர்ந்தோர் கேண்மை!
பாவலர் வாய்மை!
அறிவின் வளமை!
அனுபவச்செம்மை!
உழைப்பில் இளமை!
உன்னதத் தலைமை!
தமிழில் புலமை!
சமயச்சீர்மை!
பார்வையில் எளிமை!
சங்கராகல்லூரி பெருமை!
அருமைச்சகோதரர் முனைவர்.கலைராம.வெங்கடேசன் தம்பதியர் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பூரண அருளாசியுடன் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ இந்துசமயமன்றம் சார்பில் மணிவிழா நல்வாழ்த்துக்கள்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
அமைப்பாளர், இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பு
தலைவர், ஸ்ரீநந்திசித்தர் பீடம், திருநந்திகேச்சுரம்.

மஹாபெரியவர் ஜயந்தி மஹோத்ஸவம்

இந்துசமயமன்றம் – ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஜயந்தி மஹோத்ஸவம் – வைகாசி அனுஷம் (10.06.25 செவ்வாய்) காலை ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீருத்ர ஜபத்துடன் ஸ்ரீமஹாபெரியவர் அபிஷேகம், பூஜைகள்,அன்னப்ரசாதம், மாலை நாம சங்கீர்த்தனத்துடன் மஹாதீபாராதனை, அருட் ப்ரசாதம்.

ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதிஇந்துசமயமன்றம்

அனைவருக்கும் நமஸ்காரங்கள்!
ஸ்ரீகுருவாயூரப்பா சரணம்!

வருடந்தோறும் நடைபெறும் ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ வைபவமானது இந்த வருடமும் மகோன்னதமாக ஸ்ரீகுருவாயூரப்பன் திருவருளாலும், குருவருளாலும் நடைபெற உள்ளது. அதன் பூர்வாங்கமாக வழக்கம்போல்,
இடரெலாம் களையும்
ஸ்ரீமஹாகணபதி ஹோமம்,
செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீஸூக்த மஹாலக்ஷ்மி ஹோமம்,
நோய் தீர்த்து நலம் நல்கும் ஸ்ரீஆரோக்யலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீமஹாதன்வந்த்ரீ ஹோமம்,
சௌபாக்யம் அருளும் ஸுவாஸினி பூஜை மிகவிமரிசையாக நடைபெற உள்ளது. அதிவிசேஷமாக அச்சமயம், மிகப்புராதனமானதும், அற்புதமான பலனளிக்கக்கூடியதான ஸ்ரீமந்நாராயணீய ஸஹஸ்ரநாம அர்ச்சனை ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு செய்விக்கப்பட உள்ளது.
வருகின்ற விஸுவாவஸு வருடம் வைகாசி மாதம் 16ந்தேதி (30.05.2025), வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 11 மணிவரை சென்னை அருகில் மறைமலைநகர் இணைவு 2, ஐயப்பன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஹோம பூஜைகளுக்கு உதவிகள் பணமாகவோ, பொருளாகவோ வரவேற்கப்படுகிறது.
Gpay no.9789007401
(raghavathreya)
அல்லது கீழ்க்கண்ட ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் வங்கிக்கணக்கு அல்லது QR CODEலும் செலுத்தலாம். தங்கள் கோத்ரம், நக்ஷத்ரம், பெயர் , மொபைல் நம்பர்விவரம் மற்றும் பணம் அனுப்பியதன் காப்பியோடு 9789007401 வாட்ஸ்ஆப் நம்பரில் அனுப்பிவிடவும்.
குறிப்பு: ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞம் 2025 இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Namaskaram to all!

Pls send the Donations to the bank account given below.

Donations are eligible u/s 80 G

SRI SANKARA SANATHANA SEVA SAMSTHANAM

KARUR VYSYA BANK CURRENT ACCOUNT NO. 1657115000005138
IFSC CODE: KVBL0001657
BRANCH. GUDUVANCHERI

ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ ஜயந்தி மஹோத்ஸவம்

இன்று 02.05.25 வெள்ளிக்கிழமை ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ ஜயந்தி மஹோத்ஸவம் வெகு விமரிசையாக மறைமலைநகர் அய்யப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் திரளான ஆஸ்தீக அன்பர்கள் கலந்துகொண்டனர். மஹாகணபதி பூஜை, ஸ்ரீமஹாலக்ஷ்மி பூஜை, ஸ்ரீஆசார்யர்களுக்கு பூஜை மற்றும் ஸ்தோத்ர பாராயணங்கள், குருவந்தனத்துடன் நிறைவுற்ற இந்நிகழ்ச்சியில் இரவு சிற்றுண்டி, ப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ஸ்ரீசங்கர ஜயந்தி!

பாரத தேசத்தை, சனாதன ஹிந்து தர்மத்தை புனருத்தாரணம் செய்து, வேதநெறி தழைத்தோங்க, அறுவகை சமயம் செழிக்கப்பண்ணியவர். எண்ணற்ற ஸ்லோகங்கள், வேத பாஷ்யம் என 32 வயதில் அவர் செய்தருளிய விஷயங்கள் பிரமிக்கத்தக்கது. சம்புவாகிய பரமேஸ்வரனே இந்த பூலோகத்தில் ஸ்ரீசங்கராச்சார்யராக அவதரித்தருளினார். அவருடைய ஜயந்தி தினத்தில் ஒப்பற்ற ஜகத்குருவாம் ஸ்ரீஆசார்ய சங்கரரை பணிவோம். அவரே அமர்ந்தருளியதும், வாழையடி வாழையாக வந்த குருமரபானதும், மூலாம்னாய ஸர்வக்ஞபீடமான ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்து ஆசார்யஸ்வாமிகளை போற்றி வணங்குவோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு.

ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம்அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!

ஸ்ரீகுருப்யோ நம!
ஆதிசங்கரரிலிருந்து இன்றுவரை இடையறாத ஞான ஸாகரமாய், ஸனாதன தர்மத்தின் ஆணிவேராய், ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வக்ஞ ஜகத்குரு பீடாதீச்வரராக யதி தர்மத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் நமது ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் 71வது ஆசார்ய ஸ்வாமிகளை நமக்களித்த ஸ்ரீபெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களை பக்தியோடு நமஸ்கரித்து பணிவோம். புதுப்பெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளை அனந்தகோடி நமஸ்காரங்களுடன் பணிந்து போற்றுவோம்.
குரு சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அக்ஷயதிருதியை

அனைவருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி அனுக்ரஹம், அக்ஷயதிருதியை சுபநாளில் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்.
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி,
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம் மற்றும்
இந்துசமயமன்றம்