அனுஷ அமிர்தம் சார்பில் அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த மாத அனுஷ நக்ஷத்திர நன்னாளான இன்று 24.05.24
வெள்ளிக்கிழமை நடைபாதை மக்கள் வசிக்கும் பகுதியில் அன்னதானம் (புளி சாதம் , வடை, மற்றும் தண்ணீர் பாட்டில்) வழங்கப்பட்டது.
வேதபாடசாலையில் அரிசி மூடையும் கோசாலையில் பசுக்களுக்கு மாட்டுத்தீவனமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 131வது ஜயந்தி ஹோமம்
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா இணைந்து ஆதம்பாக்கம் ஸ்ரீமதி. ப்ருந்தா மாமி இல்லத்தில் இன்று (24.05.24) வெள்ளிக்கிழமையன்று நடத்திய (மஹா அனுஷம்) ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 131வது ஜயந்தி ஹோமம், பூஜைகளின் சில காட்சிகள்.
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் இன்று (24.05.24) வெள்ளிக்கிழமை ஆவஹந்தீ ஹோமம் ஆதம்பாக்கத்தில் ஸ்ரீமதி.ப்ருந்தா அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. ப்ரும்மஸ்ரீ.செல்வகுமார் ஸாஸ்த்ரிகள், ப்ரம்மஸ்ரீ.கைலாச கனபாடிகள் வந்திருந்து நடத்திவைத்தனர்.
நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி
இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர் சங்கம் இணைந்து ஸ்ரீசங்கர ஜயந்தி நன்னாளான இன்று 12.05.24 ஞாயிற்றுக்கிழமை நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகரில் நடைபெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் கலந்துகொண்டார்.தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீஸாயிராம் மற்றும் பிராமணர்சங்க நிர்வாகிகள் ஸ்ரீப்ரகாஷ் அவர்கள் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்திருந்தனர்.
ஸ்ரீசங்கர ஜயந்தி!
“வந்தே சங்கரம் லோக சங்கரம்!
சனாதன ஹிந்து தர்மத்தின் ஆசார்ய புருஷர், ஞான பாஸ்கரர், மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஆதி ஆசார்யர் ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்களை மனம், மொழி, மெய்களால் அனவரதமும் வந்தனை செய்கிறோம்!
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு
மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்
ஸ்ரீமஹாகணபதி ஹோமம்
அக்ஷயதிருதியையை முன்னிட்டும் ஸ்ரீசங்கர ஜயந்தியையொட்டி ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீகனகதாரா ஸ்லோக பாராயணம், 5 ஸுவாஸினி பூஜை, குரு சமர்ப்பணம் ஆகிய வைபவங்கள் மிக மிக சிறப்பாக வேதோக்தமாக மறைமலைநகர் அருகாமையில் ரயில்நகரில் இன்று 10.05.24 வெள்ளிக்கிழமை இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சமஸ்தானம் சார்பில் மறைமலைநகர் பிராமணர் சங்கத்தலைவர் ஸ்ரீ.ப்ரகாஷ்அவர்கள் இல்ல வளாகத்தில் இன்று 10.05.24 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ப்ரம்மஸ்ரீ.ஸுப்ரமண்ய ஸாஸ்த்ரிகள் குழுவினர் வைபவங்களை நடத்திவைத்தனர். காலை சிற்றுண்டி, மதிய உணவு, இடையிடையே காபி, நீர்மோர் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதன் நிகழ்ச்சிப்படங்களை கண்டு மகிழுங்கள்.
சிவனாரகரம் ஏகாதச ருத்ராபிஷேக காட்சிகள் சில
ஏகாதச ருத்ராபிஷேக விழா சிவனாரகரம்
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சமஸ்தானத்தின் சார்பில் வழக்கம்போல இந்தாண்டும், நான்காவது ஆண்டாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியோடு கும்பகோணம் அருகில் சிவனாரகரம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஜலமுகளாம்பிகை சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமி தேவஸ்தானத்தில் ஏகாதச ருத்ராபிஷேக வைபவம் 24.04.24 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வருணன் பூஜித்த இந்த ஸ்தலத்து ஸ்வாமியை ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரும், ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளும் பூஜித்துள்ளனர். கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ.தினகர சர்மா அவர்களின் சிஷ்யர் ப்ரம்மஸ்ரீ.ப்ரபு சர்மா குழுவினர் தொடர்ந்து வைதீக முறைப்படி ஜப பாராயணங்களை மஹாச்ரத்தையாக நடத்தித்தருகின்றனர். தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் அகில பாரத பொதுச்செயலாளர் சிவஸ்ரீ.டாக்டர்.ஸ்ரீராம்ஜி குழுவினர் ஸ்வாமி அபிஷேகத்தினை நடத்தினர். நான்கு வருடங்களாக தொடர்ந்து இவர்களே வருகை தந்து நடத்தித்தருவது சிறப்பு.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்பாட்டில், வழிகாட்டுதலில் விழா சிறப்பாக நடந்தேறியது. விழாவில் ஆடிட்டர்.ஸ்ரீகாந்த்ஜி, சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைக்கழக பேராசிரியர்.டாக்டர் சிவசிதம்பரநாதன், இந்துசமயமன்ற வியாசர்பாடி அமைப்பாளர்.ஸ்ரீ.ஹரஹரன்ஜீ, ஸ்ரீ.ஸாய்ராம், ஸ்ரீ.நரசிம்மன், அகில இந்திய மக்கள் உரிமைப்பாதுகாப்புக்கழகத்தின் பிரமுகர் ஸ்ரீ.நாராயணன் அவர்களின் துணைவியார்.ஸ்ரீமதி.ரஞ்சனி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிவனாரகரம் ப்ரம்மஸ்ரீ.வெங்கட்ராமன் (புதுதில்லி) அவர்களின் சதாபிஷேக வைபவத்தினையொட்டி இந்த விழா வந்ததால் அவரின் முக்கிய பங்களிப்போடு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது. அக்ரஹாரப்பிரமுகர் ஸ்ரீ.ராஜகோபாலய்யர் தம்பதியினர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர். நடுக்காவேரி.ஸ்ரீ.நடராஜய்யரின் நளபாகம் வெகு சிறப்பு. உடையாளுர் பலராம பாகவதர் கோஷ்டியினரின் ராதா கல்யாண வைபவம் (25.04.24 மற்றும் 26.04.24) அந்த கிராமத்தில் பரம்மஸ்ரீ.வெங்கட்ராமய்யர் இல்லத்தில் சம்ப்ரதாய பஜனை முறைப்படி நடந்தேறியது.