மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீஸ்வாமிகளின் ஜயந்தி நன்னாளில் பக்தியுடன் நமஸ்கரிக்கிறது.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்

ஸ்ரீபூர்ணா புஷ்கலா சமேத தர்மஸாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம், ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்டின் ஆன்மீக அமைப்பான ஸ்ரீதர்மஸாஸ்தா சேவா சமிதி மற்றும் மறைமலைநகர் ஆஸ்தீக ஸமாஜம் இணைந்து கடந்த 01.05.2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி நன்னாளில், மறைமலைநகர் இணைவு 2ல் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீஅய்யப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ஸ்ரீபூர்ணா புஷ்கலா சமேத தர்மஸாஸ்தா திருக்கல்யாண மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஸ்ரீஅய்யப்ப ஸ்வாமிக்கு மஹா அபிஷேகம் மற்றும் பஜனை பத்ததியிலான திருக்கல்யாண உத்ஸவம் நடந்தது. ப்ரம்மஸ்ரீ.கே.வி.ஸுப்ரமண்ய ஸாஸ்த்ரிகள் ஹோமம் மற்றும் வைதீக கார்யக்ரமங்களை நடத்திட, நாகை ஸ்ரீ.சுந்தரராஜ பாகவதர் குழுவினர் திருக்கல்யாண த்தை பாகவத ஸம்ப்ரதாயப்படி நடத்தினார்கள். சுமார் ஐநூற் பேர்வரை கலந்துகொண்ட இவ்விழாவில் காலை சிறப்பான சிற்றுண்டி, மதியம் திருக்கல்யாண விருந்து, பக்ஷணங்களுடன் தாம்பூலப்பை அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் மறைமலைநகர் குழுவினரின் சேவை மகத்தானது. ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்,வேதபாரதி, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அனுஷ அமிர்தம் மற்றும் பல ஆன்மீக அமைப்புகளைச்சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.