நமஸ்காரம்!
ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் இந்த விஸுவாவஸு வருஷ தீபாவளிக்கு வேதபாடசாலைக்கு (பாடசாலை குழந்தைகள், வேத வாத்யார்கள், அவர்கள் மனைவிக்கு) வஸ்த்ரம் சமர்ப்பணம், திருக்கோவில்களுக்கு வஸ்த்ரம், மங்கல பொருட்கள் (ஸ்வாமிக்கு மற்றும் பூஜை பண்ணும் அர்ச்சகர் மற்றும் அவர் மனைவிக்கு), முதியோர் இல்லத்திற்கு திரவிய (அரிசி, வெல்லம், பருப்பு) சமர்ப்பணம் என நல்லபடியாக நல் உள்ளங்களின் ஒத்துழைப்புடன் நிறைவேறியது. இந்த சத்கைங்கர்யத்தில் பங்குகொண்ட அனைத்து பெருமக்களுக்கும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் ஆயுராரோக்ய ஸௌக்யத்தை அருள ப்ரார்த்திக்கிறோம்.
க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்