ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதியின் அக்ஷயதிருதியை ஹோமங்களோடு ஸ்ரீசங்கர ஜயந்தி அஷ்டோத்ர பூஜைகள், ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீகுபேரர், ஸ்ரீமஹாபெரியவர் அஷ்டோத்ர பூஜைகளும், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ர பாராயணம், ஸ்ரீமந்நாராயணீயம் நூறாவது தசக பாராயணமும் மிகுந்த பக்தியுடன் நடந்தேறியது. ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாஸன், ஸ்ரீமதி. சத்யபாமா கோபாலன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சைதாப்பேட்டை மண்டலி ஸ்ரீமதி.சாந்தி ராமசாமி, சரணாகதி மண்டலி ஸ்ரீமதி.மீனாக்ஷி மாமி, ஸ்ரீமதி.பார்வதிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேதபாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அனுஷ அமிர்தம், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், தர்ம ஸாஸ்தா சேவா சமிதி, ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீசரணாகதி, ஸ்ரீமஹாபெரியவர் சத்சங்கம், சூளைமேடு, ஆதம்பாக்கம் மண்டலி, ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா, மாடம்பாக்கம் ஜனகல்யாண் முக்கிய நிர்வாகிகள், அன்பர்கள் கலந்துகொண்டனர்.









