ஸ்ரீ தன்வந்த்ரி ஹோமம்

இந்துசமயமன்ற பொன்விழாவை முன்னிட்டு உலகநலன் கருதி ஸ்ரீ தன்வந்த்ரி ஹோமம் இன்று (24.11.22, வியாழக்கிழமை)வெகு சிறப்பாக மறைமலைநகரில் சித்தா டாக்டர் ஸ்ரீமதி அகிலா ராம்குமார் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.வழக்கம்போல் அனுஷ பூஜையும் நடைபெற்றது.

தித்திக்கும் தீபாவளி!

இன்று (23.10.22) ஞாயிற்றுக்கிழமை பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் தீபாவளிப்பண்டிகையையொட்டி ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்துசமயமன்றம் சார்பில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் மறைமலைநகர் அன்பர்கள் ஒத்துழைப்புடன் இனிப்புகள், காரவகைகள், காலை சிற்றுண்டி (ஸ்பெஷல் இட்லி, வடை, சாம்பார், சட்னி) வழங்கப்பட்டதுடன் நமது சமயமன்ற அன்பர்களும் அவர்களுடனே உணவருந்தி மகிழ்ந்தனர்.

50 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் மாடம்பாக்கம் ஜனகல்யாண் அமைப்பின் ஆதரவுடன் வழங்கப்பட்டது

இந்துசமயமன்றத்தின் பொன்விழா ஆண்டையொட்டி (1972 – 2022) தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் 50 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் மாடம்பாக்கம் ஜனகல்யாண் அமைப்பின் ஆதரவுடன் வழங்கப்பட்டது.பேராதரவு நல்கிய மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஸ்ரீ.ராம்ராம் சகோதரர்களுக்கும், புத்தாடைகள் வழங்கி உதவிய அனைத்து நல்இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.

திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் தேனூரில் நமது இந்துசமயமன்ற மூத்த அமைப்பாளர் கல்பாக்கம் ஸ்ரீ.நாகராஜன் அவர்களின் பெருமுயற்சியில் மஹாபெரியவர் அனுஷ நக்ஷத்திரத்தன்று (30.09.2022) திருவிளக்கு பூஜை, சுவாசினி பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. நவராத்திரியில் ஸ்ரீமஹா சம்பத் கௌரி எனும் திருநாமம் கொண்ட அம்பாளின் திருக்கோவிலில் இந்த வைபவம் நடந்தது மிக விசேஷம்.

திருவிளக்கு பூஜை

நவராத்திரி விழா!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் நவராத்திரி திருவிளக்கு பூஜை செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் 2.10.22 ஞாயிறன்று ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் பூஜையை நடத்தி வைத்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர்.இரா.அகிலா ராம்குமார் மற்றும் டாக்டர்.சிவ சிதம்பரநாதன், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஸ்ரீ.ஸாயிராம், அனுஷ அமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரன் ஆகியோர் வருகைபுரிந்தனர். திருவிளக்கு , அனைத்து பூஜை பொருட்கள் மற்றும் மங்கலப்பொருட்கள், அன்னப்ரசாதம் (கேசரி, பருப்பு வடை, புளியோதரை, மினரல் வாட்டர்) அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இருளர் பகுதி பெண்குழந்தைகளுக்கு கன்யா பூஜை

ஸ்ரீகுருப்யோ நம!
அனுஷ அமிர்தம் சார்பில் நவராத்திரியை முன்னிட்டு அனுஷ நக்ஷத்திர நன்னாளில் (30.09.22, வெள்ளிக்கிழமை) களிவந்தப்பட்டு இருளர் பகுதி பெண்குழந்தைகளுக்கு கன்யா பூஜை (புது வஸ்த்ரம், மங்கலப்பொருட்கள்) மற்றும் வழக்கம்போல அன்னதானம்(ஜாங்கிரி, உளுந்து வடை, சாம்பார் சாதம், மினரல் வாட்டர் பாட்டில்) ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது.