இந்துசமயமன்றத்தின் ஏழாம் ஆண்டு பொங்கல் திருவிழா!

நாள் 05.02.25 ஞாயிறு
இடம்: கலிவந்தப்பட்டு பழங்குடி மக்கள் பகுதி
செங்கல்பட்டு மாவட்டம்

ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசியுடன், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபட்டு வருகிறது. குறிப்பாக பெண்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி படிக்க உதவிவருகிறது. தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா அப்பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இந்த 2025 ஆண்டு ஏழாம் ஆண்டாக கடந்த 5.1.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கை மாவட்டம் கலிவந்தப்பட்டு பழங்குடி மக்கள் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கோலாகலமாக தெரு முழுக்க கோலங்களுடன் களைகட்டிய நிகழ்வில் மக்களுக்கு வழக்கம்போல் புத்தாடையுடன் பொங்கல் பரிசாக பச்சரிசி, பாகுவெல்லம்,பாசிப்பருப்பு, பசுநெய், திராட்சை,முந்திரி,ஏலக்காய் அடங்கிய பை வழங்கப்பட்டது. சமயமன்ற அன்பர்கள் உட்பட அனைவருக்கும் அருமையான மதிய உணவு (கேசரி,,வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், கத்தரிக்காய் பச்சடி) பரிமாறப்பட்டது. இதற்கு மனமுவந்து உதவிய ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள், இந்துசமயமன்ற அன்பர்கள்,மறைமலைநகர் ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்ட், அனுஷஅமிர்தம் அன்பர்கள், பிடிஅரிசிதிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம். அனைவருக்கும் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் அருளாசிகளை ப்ரார்த்திக்கிறோம்.
குருசேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.

ஹனுமத் ஜெயந்தி!

அஸாத்ய ஸாதக ஸ்வாமியான ஹனுமன் நமது அனைத்து நற்செயல்களிலும் துணை நிற்க ப்ரார்த்திப்போம்.
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அனுஷ ஆவஹந்தீ

இன்றைய (28.12.24, சனிக்கிழமை) அனுஷ ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீகாஞ்சிப்பெரியவருக்கு விசேஷ அபிஷேகம் சென்னை,சாலிக்கிராமத்தில் ஸ்ரீ.ரவிச்சந்திரன்- ஸ்ரீவித்யா தம்பதிகளின் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ப்ரம்மஸ்ரீ.கைலாஷ் கனபாடிகள் பூஜையை நடத்திவைத்தார்.

இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம் இணைந்து நடத்திய
ஸ்ரீமஹாபெரியவர் ஆராதனை (27.12.24, வெள்ளிக்கிழமை மாலை) – மறைமலைநகர் ஸ்ரீஐயப்பன் கோவிலில்
வேதபாராயணத்துடன் மஹா அபிஷேகம் மற்றும் ஸ்ரீஸௌந்தர்யலஹரி பாராயணம், வேதோக்த அஷ்டோத்ர பூஜை, தோடகாஷ்டக நமஸ்காரம், மஹா தீபஹாரத்தி, அருட்ப்ரசாதம் (சர்க்கரைப்பொங்கல், கேசரி வெண்பொங்கல், தேங்காய் சட்னி)

ஸ்ரீகுருப்யோ நம!
அபார கருணையுள்ளவரும், ஞானமே வடிவானவரும், சாந்த மூர்த்தியும், மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரருமான ஸ்ரீசந்த்ரசேகர ஜகத்குருவை ஸ்வாமிகளின் ஆராதனை தினத்தில் பணிந்து வணங்குகிறோம்!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

பர்வதமலை அன்னதானம்

இந்துசமயமன்றம் சார்பில் வருடந்தோறும்
பர்வதமலை அன்னதானம் (16.12.24)
இடம்.கடலாடி கிராமம் கிரிவலப்பாதை
2024 வருடம் குரோதி வருஷ மார்கழி ஒன்றாம் நாள்
ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் பர்வதமலையை கிரிவலம் செய்த நிகழ்வை போற்றும்வண்ணம் ஒவ்வொருவருஷமும் ஆயிரக்கணக்கான மக்கள் பர்வதமலையை பக்தியுடன், ச்ரத்தையுடன் கிரிவலம் வருகின்றனர். ஸ்ரீமடம் சார்பில் ஸ்ரீமஹாபெரியவர் உத்ஸவ விக்ரஹஸ்வரூபியாக கிரிவலத்தில் எழுந்தருளி கிரிவலம் நடக்கிறது. ஸ்ரீமடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் ஒவ்வொரு வருடமும் அன்னதானம் கிரிவலப்பாதையில் பர்வதமலை அடிவார கிராமமான கடலாடியில் சிறப்பாக நடக்கிறது. இந்த வருடம் கிரிவலப்பாதையெங்கும் இந்துசமயமன்றம் சார்பில் பக்தர்களை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சுமார் 2000 பேருக்கு ரவாகிச்சடி, பாசுமதி அரிசி பிரிஞ்சி சாதம், கத்தரிக்காய் பச்சடி வழங்கப்பட்டது.
இதற்கு பெருமளவில் உதவி செய்த மாடம்பாக்கம் ஜனகல்யாண் அமைப்பு, செம்பாக்கம் ஸ்ரீ.ராஜ்மோகன் (காரப்பட்டு) குடும்பத்தினர், கூடுவாஞ்சேரி மணிவண்ணன் குழுவினர், மறைமலைநகர் நாராயணீயம் குழு, ஸ்ரீமதி மஹாலக்ஷ்மிகண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்! கடலாடியில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்துதந்த கடலாடி இந்துசமயமன்ற கிளை அமைப்பாளர் திரு.ஜெயவேலு மற்றும் அவர் நண்பர்களுக்கு நமது பாராட்டுதல்களும், நன்றிகளும்!
அன்னதானநிகழ்விற்கு உதவிய ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா, மற்றும் அனுஷஅமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரனுக்கு நன்றிகள்!
அடுத்த வருடம் நமது இலக்கு ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய தங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் முயற்சிப்போம். குருவருள் துணை நிற்கட்டும்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
மாநில அமைப்பாளர், இந்துசமயமன்றம்.

பர்வதமலை கிரிவலம்

இந்துசமயமன்றம் சார்பில்
மார்கழி 1 (16.12.24) பர்வதமலை கிரிவல பக்தர்களுக்கு ஸ்ரீமஹாபெரியவர் பாதம்பட்ட கடலாடியில் அன்னதானம்.

சிவனடியார்களுக்கு, சாதுக்களுக்கு, கிரிவலம் செய்யும் அடியார் பெருமக்களுக்கு அமுது படைத்திடுவோம் வாருங்கள்!

உண்ணாமுலை உமையாளுடன் அண்ணாமலை அண்ணலை வணங்கி,
இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்!
சகல நலன்களும் அனைவருக்கும் உண்டாகட்டும்!
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு