ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்து ஆசாரியர்கள் பற்றிய சரித்திரம்

நமது ப்ராசீன தர்மத்தின் சரித்திரமாக அமைந்துள்ளது என்று சொன்னால் , அது மிகையாகாது . இன்று தாங்கள் ஆரம்பித்துள்ள கைங்கரியம் ஒரு மஹத்தானதும் முக்கியமானதுமான நற்காரியம் . நமது மடத்தில் நாளது வரை பகவான் ஆதி சங்கரரில் ஆரம்பித்து கலவை ஸ்வாமிகள்( பூஜ்ய ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ) வரையில் 67 பீடாதிபதிகள் இப்பீடத்தை அலங்கரித்திருக்கிறார்கள் .ஒவ்வொருவரும் நமது ப்ராசீன தர்மத்தை முன்னிட்டு அநேக நற்காரியங்களையும் செய்துவிட்டுத்தான் ஸித்தி பெற்றிருக்கிறார்கள் . 68-வது பீடாதிபதிகளான பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 1913 -ம் வருடத்திலிருந்தும் 69-வது பீடாதிபதிகளான பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், அதற்கடுத்து இப்பொழுதுள்ள 70-வது பீடாதிபதிகளான பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் தொடர்ச்சியாக நம்முடன் பல வருடங்கள் வாழ்ந்து வந்ததால் , அவர்கள் தற்சமயம் நம் ஞாபகத்தில் இருக்கிறார்கள் . இம்மூவரும் நமக்கு அருளிய பல நற்காரியங்களை இப்பொழுது பார்ப்போம் . அவைகளெல்லாம் இச்சரித்திரத்தில் இடம் பெறும் பொழுது இந்த பீடத்தின் மேன்மையும் தெரிய வரும் .


1 . ஸ்ரீ பெரியவா (இந்த சப்தம் 68-வது பீடாதிபதிகளான பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளையே குறிக்கும் )
1.இவர்கள் தற்சமயம் நலிந்து கிடக்கும் வேதத்தை உத்தாரணம் செய்ய , 1940-ம் வருடத்தில் வேத ரக்ஷண நிதி
யை அக்காலத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீமான்கள் அண்ணாதுரை ஐயங்கார் (வக்கீல்),பம்பாயிலிருந்த சுப்பராம ஐயர் (இன்கம் டாக்ஸ் ஆபீசர் ) மூலமும் ,அவர்களுக்குப்பின் டெல்லி ஸ்ரீனிவாச ஐயர் (பிரபல சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்) மூலமும் , நக்ஷத்ர காணிக்கையாக தலைக்கு வருடத்தில் ஒரு ரூபாய் என்னும் ரீதியில் வசூலித்து ,அதை வைத்து வேதபாடசாலைகளை நிறுவுவதற்கும் , நடவிலுள்ள வேத பாடசாலைகளை விருத்தி செய்வதற்கும் ,உபயோகம் செய்ய வைத்தார்கள் . இவர்கள் மூலம் வேதம் விருத்தி அடைய ஆரம்பித்தது .
2 . ஆஸ்பத்திரிகளில் நோய்வாய்ப்பட்டு படுத்துக்கிடக்கும் பலதரப்பட்ட நோயாளிகளுக்கு மன சாந்தி ஏற்பட , அவர்களுக்கு வாரம் தோறும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பிரசாதம் மடத்து சிஷ்யர்கள் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்தார்கள் .

  1. தினமும் ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்காமல் திண்டாடும் வறியவர்களுக்கு வேண்டிய அளவு பிரசாத சாப்பாடு கிடைக்க , பிடியரிசி திட்டம் மூலம் அரிசியை வீடு வீடாக சென்று , வீட்டுக்கு ஒரு கைப்பிடி அளவு அரிசி என சம்பாதித்து , அதை ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்து , பிரசாதமாக அவர்களுக்கு
    விதரணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள் .
    ஜெயில் கைதிகளும் மன நோயாளிகளும் தீபாவளியை சந்தோஷத்துடன் கொண்டாட அவர்களுக்கெல்லாம் அன்றைய தினங்களில் ,லட்டு முதலிய இனிப்பு பண்டங்களை விநியோகம் செய்ய ஏற்பாடும் செய்தார்கள்.
  2. வட தேசத்திலுள்ள ப்ரயாகில் திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வருபவர்களுக்காக ,ஸங்கமத்திலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவிலுள்ள இடத்தில் அக்பர் சாலை அருகில் , மூன்று தட்டுகளுடன் கூடிய பிரும்மாண்டமான ஆதி சங்கர விமான மண்டபம் அமைக்க ஏற்பாடு செய்தார்கள் . இந்த மண்டபத்தில்
    கீழ் தட்டில் ஸ்ரீ காமாக்ஷி அன்னையும் , அடுத்த இரண்டாம் மத்திய தட்டில் பாலாஜியும் , அடுத்த உச்சித்தட்டில்
    கோடி ருத்திராக்ஷ விதானத்துடன் கூடிய ஸஹஸ்ர லிங்கமும் வைக்க ஏற்பாடு செய்தார்கள் . த்ரிவேணியில் ஜலத்தில் மூழ்கி ஸ்நானம் செய்து இந்த விமானம் பக்கம் நோக்கி திரும்பி மேலே நோக்கின் , இந்த விமானத்தின் உச்சியை தரிசனம் செய்ய முடியும்.
    5 . குருக்ஷேத்ரத்தில் , யுத்த பூமி யில் கீதோபதேசம் நடந்ததாகக்கருதப்படும் இடத்தில் ,இப்பொழுது ஒரு சிறிய குளமும் ,அதன் கரையில் ஒரு ஆல மரமும் உள்ளது . அங்கு கீதா தியான மண்டபம் கட்டச்செய்து , அதில் அங்குவரும் யாத்ரீகர்கள் ஓரிரு தினங்கள் தங்கி சமையல் செய்து சாப்பிட வசதியாக , சமையல் பாத்திர ங்கள் சிலதும் ,அம்மி,அம்மிக்குழவி , ஆட்டுக்கல் ,ஸ்டவ் இவையும் வைக்க ஏற்பாடு செய்து , தியானத்திற்கு சௌகரியமாக தியான மண்டப சுவற்றில் , கீதையின் ஆறாம் அத்தியாயத்தில் வரும் இருஸ்லோகங்களை தியானம் செய்பவர்கள் கண் பார்வையில் படுமாறு எழுதச் செய்து , தியானம் செய்ய சௌகரியத்தையும் ஏற்படுத்தினார்கள் . அந்த இரு ஸ்லோகங்கள் வருமாறு :
    1 , சனை: சனை: உபரமேத் , ஸ்ரத்தயா , த்ருதி கிருஹீதயா
    ஆத்ம ஸம்ஸ்தம் மன: க்ருத்வா , ந கிஞ்சிதபி சிந்தயேத் .
    2 . யதோ யதோ நிஸ்சலதி மன : சஞ்சலம் அஸ்திரம்
    ததோ ததோ நியம்யேதத் ஆத்மனியேவ வசம் ந யெத்
    இவற்றின் அர்த்தம் :
    மெல்ல மெல்ல த்யானத்தில் சிரத்தையுடனும் , (தன்) மனத்தில் கிரகித்துக்கொண்டும் புகவேண்டும் ,ஆத்மாவை மனத்திலேயே நிலைபெறச்செய்து , வேறு ஒன்றையும் ( பற்றி) சிந்திக்க வேண்டாம் .
    எப்பொழுதெல்லாம் மனது கட்டுக்குள் அடங்காமல் கிளம்புகிறதோ அப்பொழுதெல்லாம் அதை (மறுபடி)கட்டுக்குள் கொணர்ந்து , (அதை) தனது ஆத்மாவிலேயே வசப்படுத்தி விட வேண்டும் .
    6 . நூற்றுக்கணக்கான தனி நபர்களின் சோகத்தை தன் கருணையினால் போக்கியிருக்கிறார்கள் , பலருக்கு நிரந்தரமான வாழ்வும் தந்திருக்கிறார்கள் .
    7 . தன் சிஷ்யர் பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதியை தனது ஆணையின் மூலம் பல நற்காரியங்களை செய்ய வைத்திதிருக்கிறார்கள்
    8 . 1964-ம் வருடம் அக்டோபர் 24 -ம் தேதி ஐக்கிய நாடுகள் தினத்தன்று , ஐக்கிய நாடு சபையில் இருந்த எல்லாதேச பிரதிநிதிகளுக்குமாக ஸ்ரீ பெரியவா பிரபல பாடகியான டாக்டர் எம் . எஸ் . சுப்பு லட்சுமி மூலம்
    “மைத்ரீம்பஜத” என்று ஐந்து ஸ்லோகங்களில் ஆரம்பிக்கும்சுருக்கமானசெய்திமூலம்அன்று
    அங்கு கூடியிருந்தவர்களுக்குமாக அவர்களுக்கு உலக சமாதானத்தின் அவசியத்தை உணர வைத்தார் . மேலும் அந்த செய்தியின் முடிவில் அவர்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கவும் செய்தார் .
    9 . ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கரையில் புதிய சங்கரமடம் நிறுவி அங்கு வரும் வடதேசத்து யாத்ரீகர்கள் பலருக்கு வேண்டிய உபகாரம் செய்ய ஏற்பாடு செய்தார்கள் .
    10 . இன்று உலகத்து மக்கள் எல்லோரும் அவரை , ” நடமாடும் தெய்வம் ” என்று வணங்கினால் அது மிகவும் பொருத்தமே .
    பூஜ்ய ஸ்ரீ புது பெரியவர்களான , ஜயேந்திர சரஸ்வதி அவர்கள்
    இவர்கள் ஸ்ரீ காமகோடி பீடத்தின் 69-வது பீடாதிபதியாக 1954 முதல் 2018 பிப்ரவரி வரை 63 வருடம் 2 மாதங்கள் இப்பீடத்தை அலங்கரித்தார்கள் . இக்காலத்தில் இவர்கள் செய்த தர்ம காரியங்கள் பலப்பல .
    1 . தமது குருவின் ஆக்யைப்படி செய்த பல நற்காரியங்கள் போக தானாகவே பல நற்காரியங்களையும் செய்தார் .
    நம் நாட்டை உலுக்கிய ராம ஜென்ம பூமி வியவஹாரத்தில் இவர்கள் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக செய்த பணி உலக அளவில் போற்றப்படுகிறது .2 . பதரி நாத் யாத்திரையின் போது வழியிலிருந்த ‘பஞ்ச ப்ரயாக் ‘ என்று அறியப்பட்ட ஐந்து க்ஷேத்ரங்கள் ஒவ்வொன்றிலும் , அந்த பிரதேச ஜனங்கள் வணங்குவதற்காக , அந்த பிரயாகங்களில் ஆதி சங்கர பகவத் பாதர் களின் ப்ரதிமைகளை வைத்து நிறுவினார்கள் . ஏற்கனவே துவங்கப்பட்ட வேதபாடசாலைகளில் என்ன மாதிரியான சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதை கவனித்து விவரம் சொல்ல அங்கெல்லாம் தமது சிஷ்யரை அனுப்பி அந்த சிரமங்களையெல்லாம் நிவர்த்தி செய்ய பல ஏற்பாடுகளை செய்தார்கள் .
    3 .அஸ்ஸாமிலும் ,ஒடிஷாவிலும் , ஏழை பொதுஜனங்களுக்காக ஆஸ்பத்திரிகளை நிறுவ ஏற்பாடு செய்தார்கள் .அஸ்ஸாமில் கௌஹாத்தியின் அருகில் பெட் குச்சி என்னுமிடத்தில் , ” பூர்வ திருப்பதி பாலாஜி மந்திரும் ,” லால் மட்டி என்னுமிடத்தில் மகா கணபதி கோயிலும் கட்ட ஏற்பாடு செய்தார்கள் .
  3. கிறிஸ்தவ மதமாற்றம் நம் நாட்டின் பல பிரதேசங்களில் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களினுடைய நேரடி ஈடுபாட்டுடனும் பெருவாரியாக நடைபெறுகையில் , அவற்றைத்தடுக்க சங் பரிவாரின் முயற்சிகள் தற்சமயம் போதாமையாய் இருக்கும் நிலையில் நமது புது பெரியவர்கள் தம்மால் இயன்றதை செய்து வந்தார்கள் .
    இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . கார்டினல் க்ரேஸியாஸ் என்னும் கிறிஸ்தவ மதத்தின் உன்னத நிலையில் இருக்கும் பாதிரி ஒரு நாள் நவீ மும்பையிலிருக்கும் நமது ஸ்வாமிகளைப் தனியாக (வேறொருவரும் கூட இல்லாமல் ) பார்க்க வந்து அவர்களிடம் தனது கோரிக்கையை வைத்தார் . அது ‘ புது சர்ச்சுகளை கட்டுவதற்கு இந்துக்கள் தடை செய்யக்கூடாது . அதற்கு ஸ்வாமிகளின் ஒத்துழைப்பு வேண்டும் ‘ என்பது . அப்பொழுது நம் ஸ்வாமிகள் அவரைக்கேட்ட ஒரே கேள்வி ,” நீங்கள் உங்களது மதமாற்றக்கொள்கையை உடன் நிறுத்திக்கொள்வீர்களா .அதற்கு உங்களால் உத்திரவாதம் தர முடியுமா ? ” என்பதே . அதை கார்டினல் மறுக்க , நம் ஸ்வாமிகள் ,” இனிமேல் உங்களுடன் பேச எனக்கு ஏதுமில்லை . நீங்கள் போகலாம் ” என அந்தப்பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார்கள் .
    5 . நமது நாட்டில் மிஜோராம் என்னும் ஸ்டேட்டில் முக்காலே மூன்று வீசம் பேர் ஏற்கனவே கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர் . எஞ்சியுள்ளவர்கள் சுமார் 33,000 நேபாளி ஹிந்துக்கள் . அவர்களில் ஒருவர் எனது நண்பரான தசரத் ஸாஹி என்ற பெயருள்ள டிரான்ஸ்போர்ட் கண்ட்ராக்டர் .(. என் நண்பர் . அஸ்ஸாமில் நான் வேலை செய்யும்போது அவர் எனக்கு நண்பரானார் . அவர் இப்பொழுது இல்லை). இந்த 33,000 பேரில் அவர் ஒரு முக்கியமான புள்ளியாக இருந்தார் .அவர் ஒரு நாள் என்னுடன் பேசும்போது , ” நாங்கள் 33,000 பேர்கள் ஹிந்துக்கள் இங்கு பலகாலமாக வாழ்கின்றோம் .எங்களுக்கென்று இங்கு ஒரு கோயிலும் இல்லை . தாங்கள் மனது வைத்து ஒரு நந்தியும் ,ஒரு சிவ லிங்கமும் எங்கள் தொழுகைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா ? ” என்று என்னைக் கேட்டார் . அதற்கு நான் பெரியவர்களை கேட்டு சொல்கிறேன் என பதிலிறுத்தேன் . இது விஷயமாக நான் பூஜ்ய ஸ்ரீ புது பெரியவர்களைக்கேட்ட பொழுது ,அவர்கள் க்ஷணம் தாமதியாமல் , ” நீ உடனே பாணாம்பேட்டை (விழுப்புரத்தில் அருகில் உள்ளது) சென்று அங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது . அதன் பிராகாரத்தில் கணபதி , நந்தி , சிவலிங்கம் மூன்றும் உள்ளன .அவற்றை நான் சொன்னதாக சொல்லி எடுத்து, உடனேயே உன் நண்பருக்கு அனுப்பி விடு ” என்றார்கள் .பூஜ்ய ஸ்ரீ புது பெரியவர்களிடம் எந்த விஷயத்திலும் தாமதமே காண முடியாது. இதைக்கேட்டவுடன் நான் ஸ்ரீ சாஹியை போனில் அணுகி , “இன்னும் ஒரு வாரத்தில்
    ஸ்ரீ கணபதி, சிவலிங்கம் , நந்தி , இவை மூன்றும் உன்பெயருக்கு ரயில்வே பார்சலாக கௌஹாத்திக்கு அனுப்ப ப்படும் . அங்கு டிமரேஜ் இல்லாமல் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு ,என்று போன் மெஸேஜ்
    அனுப்பிவிட்டேன் . ஒரு லாரியில் அவற்றை முதலில் மடத்துக்கு கொண்டு வந்து ,அங்கிருந்து என் வீட்டுக்கு கொண்டுவந்து அதன் பின் கௌஹாத்திக்கு அனுப்பி வைத்தேன் . மிஜோராமிலுள்ள எல்லா ஹிந்து மக்களுக்கும் ஒரே சந்தோஷம் .
    மற்றோரு சமயம் பூரி சங்கராச்சார்ய ஸ்வாமி அவர்கள் , நமது பூஜ்ய ஸ்ரீ புது பெரியவர்கள் எழுதிய ” குரு ப்ரியா”
    வின் ஒரு பிரதி தனக்கு கிடைக்குமா ? அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா ? என்று என்னைக்கேட்டார்கள் . நான் அதற்கு எங்கள் குருவிடம் சொல்கிறேன் என பதிலிறுத்தேன் .இதை பூஜ்ய ஸ்ரீ புது பெரியவர்களிடம் நான் சொன்னதும், அவர்கள் கொஞ்சமும் தாமதியாமல் இரண்டு நிமிஷத்தில் ஒரு பிரதியை என் கையில் கொடுத்து .
    ” இதை உடன் ரிஜிஸ்டர் தபாலில் அவர்களுக்கு அனுப்பு என்று சொல்லி தந்தார்கள் . ” குரு ப்ரியா ” என்பது வியாசர் எழுதிய “பிரும்ம சூத்திரத்திற்கு “ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதினார் .அதற்கு டீகாவாக ” குரு பிரியா” என்னும் தலைப்பில் நமது பூஜ்ய ஸ்ரீ புது பெரியவர்கள் ஒரு விருத்தியுரையை எழுதினார்கள் . அந்த நூல் பண்டிதர்களால் வெகுவாக போற்றப்படுகிறது .
    இவர் கௌஹாத்தியிலுள்ள ‘ காமாக்யா ‘ அம்மனுக்கு கும்குமப்பூவால் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து , ஒரு தங்க அட்டிகையும் சமர்ப்பித்து , ஒரு பட்டுப்புடவையும் சாற்றின பெருமகனார் . பதரிநாத் திலுள்ள பதரி நாராயணருக்கு தங்கத்தால் ஒரு ஏகார்த்தி சமர்பித்தவர் .
    திபெத்திலுள்ள மானஸ சரோவரின் கரையில் ஸ்ரீ காம கோடி பீடத்தின் ஆதி குருவான ஆதி சங்கரரின் பிரதிமையை ஸ்தாபித்து அங்கு அதற்கு தன் கைகளால் பூஜையும் செய்தார்கள் . அது ஒரு சங்கர ஜயந்தி யன்று நடந்தது .
    அடுத்து , பூஜ்ய ஸ்ரீ பால பெரியவர்கள் (தற்பொழுது 70-வது பீடாதிபதியாக உள்ளவர்கள் ) .1983-ம் வருடம் மே மாதம் 29-ம் தேதி. தனது 14-ம் வயதில் பட்டத்திற்கு வந்தவர்கள் , அவர் தம் குருவின் காலத்துக்குப்பின் , பெரியவர்களென அழைக்கப்படுகிறார்கள் . இவருக்கு அசாத்திய ஞாபக சக்தி உண்டு .
    1 . இவர்கள் தான் பால பெரியவாளாக இருக்கும்போதே வட தேசத்தில் ருத்ரப்ரயாகை இலிருந்து பத்ரிநாத் போகும் வழியில் சுமார் 7 கல் தூரத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி கோயிலை ஒட்டி ,திடீரென்று நோய்வாய்ப்படும் யாத்ரீகர்களுக்கு ஒரு முதலுதவி கேந்திரம் அமைத்து அந்த யாத்ரீகர்களுக்கு இலவசமாக முதலுதவி கிடைக்குமாறு ஏற்பாடு செய்தார்கள். 2 . த்ரிபுராவில் மாதாபாரி என்னும் இடத்திலுள்ள த்ரிபுரேஸ்வரி கோயிலில் இருக்கும் ஏழு அடி உயரமும் , 18 கைகளும் கொண்ட த்ரிபுரேஸ்வரி அம்மனுக்கு , ஒரு சிஷ்யர் மூலம் ஒரு கிலோ குங்குமப்பூவால் அர்ச்சனை செய்வித்து , ஒரு கிலோ சுத்த மலைத்தேனை நைவேத்தியமும் செய்வித்து வழிபட்டார்கள் . 3 .நாடெங்கும் சுமார் நூற்றுக்கும் மேலான இடங்களில் உள்ள ஜனங்களின் க்ஷேமத்திற்காக , விஸ்வ சாந்தி ஹோமங்களை தனது சிஷ்யர்கள் மூலம் நடத்துவித்தார்கள் . 4 , தமிழ் நாட்டில் , வட ஆற்காடு ஜில்லாவில் சுமார் நூற்றுக்கும் மேலான பாழடைந்த கோயில்களில் விளக்கேற்றிவைத்து , சிஷ்யர்கள் மூலம் தெய்வ ஸ்தோத்திரங்களை அக்கோயில்களில் படிக்க செய்தார்கள் . செய்யாறு ( ஆண் பனை பெண் பனை யான க்ஷேத்ரம் ) என்னுமிடத்தில் ,ஓர் அதிசயம் நடந்தது. இச்சிஷ்யர்கள் கோயிலில் ப்ரதக்ஷிணமாக வலம் வரும் பொழுது அவர்களுக்கு சில ஆதி தூரத்தில் திடீரென்று ஒரு முற்றின பணம் பழம் விழுந்தது .
    இவையெல்லாம் இன்று என் ஞாபகத்தில் இருக்கிறது .அதனால் அவற்றை என்னால் இங்கு எழுத முடிந்தது .
    ச. சிதம்பரேச ஐயர்
    வயது 94
    21 ஆக 2022