புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.

இந்த கடலாடி கிராமத்தில் இந்துசமயமன்றம் கிளை செயல்படுகிறது. வருடாவருடம் அன்னதானம் மார்கழி ஒன்றாம் தேதி சமயமன்றம் சார்பில் செய்யப்படுகிறது.

நேற்று மார்கழி ஒன்றாம்நாள் கடலாடி இந்துசமயமன்றம் அமைப்பாளர் திரு ஜெயவேலு அவர்கள் வழக்கம்போல் பர்வதமலை ஈசனின் பிரசாதப்பை சமயமன்றம் சார்பில் வழங்கினார். புதுவை ஸ்ரீசங்கரானந்த ஸ்வாமிகள் கடலாடி வருகை.

Dhanur Maasam – மார்கழி 1

டிசம்பர் 15ஆம் தேதி, 1944 (மார்கழி 1ஆம் தேதி):

திருவண்ணாமலைக்கு வடமேற்கே சுமார் 17 மைல் தூரத்திலுள்ள கடலாடி என்னும் ஊரில் “பர்வத மலை” என்று ஒரு மலை உள்ளது. அதற்கடுத்து, மிகவும் உயர்ந்து கம்பீரமாக விளங்கும் கற்பாறை ஒன்று காட்சி அளிக்கிறது. அந்த
பாறையின் உச்சியில் ஒரு சிவாலயம் உள்ளது. அதில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் என்பது பெயர். ஸ்ரீ சைலத்தின் ஸ்வாமி பெயர் அங்கு அமைந்திருப்பதுடன், அங்கு ஒரு பாதாள கங்கையும் காணப்படுகிறது. மலையின் மீதுள்ள வில்வ மரங்களில்,9 தளங்கள் உள்ள மஹாவில்வ மரமும் காணப்படுகிறது. அரிதாகக் காணப்படும் மகாவில்வம் பரமசிவனின் பூஜைக்கு மிகவும் ஏற்றது.

பர்வத மலையைப் பிரதக்ஷிணம் செய்ய ஸ்வாமிகள், 1944 டிசம்பர், 15ஆம் தேதி [மார்கழி 1, கிருஷ்ண பக்ஷ அமாவாசை], மாலை 3 மணிக்கு கால்நடையாகச் சில சிஷ்யர்களுடனும், அவ்வூர் கிராம அதிகாரிகளுடனும் புறப்பட்டார்கள். மனித சஞ்சாரமே இல்லாத கரடு முரடான, முள் செடிகள், முள் மரங்கள் நிறைந்த அந்தப் பாதையை வெகு சிரமத்துடன் கடந்து, மாலை 6 மணிக்குச் செய்யாறும், மிருகண்டு நதியும் சேரும் இடத்தை அடைந்தார்கள். மாலை அனுஷ்டானங்களை அங்கே முடித்துக் கொண்டார்கள். அன்று அமாவாசை ஆதலால் தீவட்டிகள் முதலான வெளிச்சங்களுடன் கிரிப்பிரதக்ஷிணம் மேலே தொடங்கப் பெற்றது. குன்றுகளின் மீது ஏறியும், இறங்கியும் சுமார் 25 மைல் நடந்து, இரவு 10 மணிக்குக் கடலாடி விஷ்ணு ஆலயத்தில் அமைக்கப் பெற்றிருந்த முகாமை ஸ்வாமிகள் அடைந்தார்கள். அன்றிரவு வெள்ளிக்கிழமை பூஜையை ஸ்வாமிகள் அவ்வாலயத்திலேயே நடத்தினார்கள்.

  • ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்

Pradosha Shankara Pratyaksha Shankara!

ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்

பழம்பெரும் சைவ ஆதீனங்களில் ஒன்றும், தொண்டைமண்டல சைவ ஞானபீடமுமாகிய தொண்டைமண்டல ஆதீனத்தின் 232வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள் முக்தி அடைந்தார்கள். தமிழிலும் சைவத்திலும் மிகுந்த புலமையும் ஞானமும் பெற்ற ஞானாசிரியராக விளங்கிய ஸ்ரீஸ்வாமிகளின் தொண்டு போற்றி வணங்குதற்குரியது. ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிமலர்களில் இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கிறோம். இவண், மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள். இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.

நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம்

நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம் இன்று 29.11.2020 ஏற்றப்பட்டது. இந்துசமயமன்றம் சார்பில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.இனிப்பு வழங்கப்பட்டது.

இந்துசமயமன்றம் சார்பில் இருளர் மக்களுடன் இனிய தீபாவளிப்பண்டிகை.

13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஒரத்தூர் கிராமத்தில் இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் சவுதி ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா உதவியுடன் தீபாவளிப்பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு இனிப்பு மற்றும் பொங்கலுக்கு புத்தாடையுடன் அறுசுவை உணவு கடந்த மூன்று வருடங்களாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்த பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட நிகழ்ச்சியில் ஒரத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் திருமதி.கற்பகம் சுந்தர், திரு.N.D.சுந்தர், திரு.சுபாஷ், மற்றும் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி, இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், சமயமன்ற அன்பர்கள் திரு. சாயிராம், திரு.சந்த்ரநாத் மிஸ்ரா, ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திரு.க.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.