பர்வதமலை கிரிவலம்

சித்தர்கள் இன்றளவும் வாசம் புரியும் தலமும், தென்கயிலாயம் என வழங்கப்படுவதுமான திருவண்ணாமலை மாவட்டம், பர்வதமலையை ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் சாக்ஷாத் சிவஸ்வரூபமாகவே கண்டு வணங்கி மார்கழி முதல்நாள் கிரிவலம் வந்தார். அவர் திருவடியையொற்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடந்தோறும் மார்கழி முதல்நாள் பர்வதமலை கிரிவலம் வருகின்றனர். ஸ்ரீமஹாபெரியவர் விக்ரஹஸ்வரூபமாக வருடந்தோறும் கிரிவலம் வருகிறார். அவ்வாறு வலம் வரும் சிவனடியார்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் அன்னதானம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் சார்பில் மலையடிவார கிராமமான கடலாடியில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடமும் மிகச்சிறப்பாக அன்னதானம் மற்றும் ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனை தினமும் இதேநாளில் அமைந்ததால், இனிப்பும் அடியார் பெருமக்களுக்கு வழங்கப்பட்டது. உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
இவண்
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்.

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை தினம்

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை தினத்தில் ஸ்வாமிகள் பொன்மலரடிகளை இந்துசமயமன்றம் வணங்கி போற்றுகிறது.
குருவருட் சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்

ஸ்ரீஜலமுகுளநாயகி அம்பாள் சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு மஹா கும்பாபிஷேகம்

ையிற் புனிதமான காவேரியின் கிளைநதியான கீர்த்திமான் ஆற்றின் கரையில் உள்ள புண்ய பூமியும்,
உலகப்புகழ்பெற்ற நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம் (தேவாரப்பெயர் – திருநல்லம்) அருகாமையில்
வருணன் பூஜித்த திவ்ய க்ஷேத்ரமும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர், புதுப்பெரியவர் பூஜித்த புனித தலமுமான, கோவில் நகரமான திருக்குடந்தைக்கு அருகிலுள்ள சிவனார் அகரம் ஸ்ரீஜலமுகுளநாயகி அம்பாள் சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக சைவ ஆகம விதிப்படி நடைபெற்றது. சிங்கம் பிள்ளையார் கோவில், கிராமத்து அய்யனார் கோவில் மற்றும் சிவபெருமான் – அம்பாள், பெருமாள் தாயார் என நான்கு கோவில்களுக்கு நடந்த இந்த கும்பாபிஷேக சமயத்தில் நான்கு கருடன்கள் வானில் வலம் வந்தது மெய்சிலிர்க்கவைத்தது.ஸ்ரீபெரியவர்கள் வழங்கிய ஸ்ரீமடத்து ப்ரசாதம், சமயமன்ற சால்வை சர்வசாதகம் சிவாச்சார்யாருக்கும், ஊர் முக்யஸ்தர் ஸ்ரீ.ராஜகோபால் அவர்களுக்கும் வழங்கினோம். இந்துசமயமன்றம் சார்பில் கடந்த நான்கு வருடங்களாக காஞ்சி தற்போதைய பெரியவர்கள் அருளாணைப்படி ஏகாதச ருத்ராபிஷேகம் இங்கே நடைபெறுகிறது. கும்பாபிஷேக வைபவத்தை திறம்பட நடத்திய சிவனாரகரம் ப்ரம்மஸ்ரீ.ராஜகோபால் தம்பதியருக்கும், ஊர் மக்களுக்கும், உதவிசெய்த அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்.

தொண்டைநாட்டு பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான திருஇடைச்சுரம்

சிவாய நம!
கார்த்திகை ஸோமவார நன்னாளில் (01.12.25) தொண்டைநாட்டு பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) அருள்மிகு இமயமடக்கொடியம்மை (ஸ்ரீகோவர்த்தனாம்பிகை) உடனுறை திருஇடைச்சுரநாதர் (ஸ்ரீஞானபுரீச்வரர்) திருக்கோவில் சங்காபிஷேக வைபவத்தின்போது நமது ஸ்ரீநந்திசித்தர்பீடம் திருவாசக முற்றோதல் குழு மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் அன்பர்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பெற்ற ஸ்ரீகோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு ஸ்வர்ண திருமாங்கல்யம் சார்த்தப்பெற்றது. அவ்வமயம் உலகநலன் வேண்டி,
அம்மையப்பனை மனமார ப்ரார்த்தித்தோம்.

திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை தீபத்திருவிழா திருக்குடைகள் சமர்ப்பித்தல் யாத்திரை நான்காம் ஆண்டு – தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு
தாம்பரம், மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் பகுதிகளில் மறைமலைநகர் பிராமணர் சங்கம் மற்றும் இந்துசமயமன்றம் மற்றும் பல இந்து ஆன்மீக அமைப்புகள் சார்பில் வரவேற்ற நிகழ்வுகள். நாள். 22.11.25 சனிக்கிழமை

மதுரையில் ஹிந்து சமய மன்ற விழா மிக சிறப்பாக நடைபெற்றது

மதுரையில் ஹிந்து சமய மன்ற விழா மிக சிறப்பாக நடைபெற்றது
திரு சோ சோ மீனாட்சி சுந்தரம்
திரு ராதாகிருஷ்ணன் மாது
திரு சங்கர சீத்தாராமன்
ஆகியோர் திருவிளையாடல் புராணத்தின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்

முனைவர்.கலைராம.வெங்கடேசன் (முதல்வர், ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சீபுரம்) ஹிந்து சமய மன்றத்தின் பணிகள் குறித்து விளக்கி உரை நிகழ்த்தினார்.

ஸ்ரீ மடம் சார்பில் அனைவருக்கும் மரியாதை வழங்கப்பட்டது

அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது

🙏🙏🙏


ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ ப்ரசாதம் வழங்கப்பட்டது

நமது இந்துசமயமன்ற புரவலரும், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளருமான ஸ்ரீ.ஜெயராம ரெட்டியார் அவர்களுக்கு ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ ப்ரசாதம் வழங்கப்பட்டது. மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகமெங்கும் நடைபெறும் ஸ்கந்த சஷ்டி வேல்பூஜை புனித வேல் அலுவலகத்தில் கோமாதா பூஜையுடன் செய்யப்பெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய பொதுச்செயலாளர் டாக்டர்.க.ஸ்ரீராம், ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தான டிரஸ்டி ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகி ஸ்ரீ.கணேஷ்ஜி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஸ்ரீஸ்கந்த சஷ்டி

ஸ்ரீஸ்கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் ஜ(26.10.25, ஞாயிறு) அம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கடந்த ஐந்து நாட்களாக தமிழகமெங்கும் நடந்துவரும் வேல் வழிபாடு மறைமலைநகர் அகிலபாரத அய்யப்ப சேவா சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்துசமயமன்றம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அகில பாரத அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.