கேரள மாநிலம் எடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில், கேரள மாநிலம் எடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேரள மாநிலம், எடநீர் மடாதிபதியாக இருந்த கேசவானந்த பாரதி சுவாமிகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சித்தி அடைந்தார். இளமைக் காலத்திலிருந்தே அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

கேசவானந்த பாரதி சுவாமிகள் எடநீர் மடத்துக்கும், தேசிய அளவில் மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும், பங்களிப்புகளும் மகத்தானவை என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். கேசவானந்த பாரதி சுவாமிகள் தனது வாழ்நாளின்போதே ஜயராம மஞ்சத்தாயாவை வாரிசாக நியமிக்க விரும்பியதையும், அவருக்கு சந்நியாச ஆஸ்ரம உபதேசம் வழங்குவதற்கான நாளைத் தேர்ந்தெடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். தனது பக்தர்களிடமும், ஜயராம மஞ்சத்தாயாவிடமும் தனக்கு ஒருவேளை எதிர்பாராத சூழ்நிலை ஏற்படுமானால் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளை அணுகி, அவரது ஆசி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று, சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வைத்து, எடநீர் மடத்தின் வாரிசாக நியமிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, எடநீர் மடத்தின் நிர்வாகிகள், பக்தர்களுடன் ஜயராம மஞ்சத்தாயாவும் காஞ்சிபுரம் வந்து பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தனர். எடநீர் மடத்தின் வாரிசாகவும், ஜயராம மஞ்சத்தாயாவுக்கு சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வேண்டும் என்ற விருப்பக் கடிதங்களை வழங்கினர்.

காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நல்லாசிகளுடன் ஓரிக்கையில் பதவியேற்றார்

ஸ்வர்ணஹள்ளி ஸ்வாமிகளுக்கு ஸந்யாசம் ஆஸ்ரம ஸ்வீகாரம்

ஸ்வர்ணஹள்ளி ஸ்வாமிகளுக்கு ஸந்யாசம் ஆஸ்ரம ஸ்வீகாரம். ஸ்ரீ பெரியவாள் மந்த்ரோபதேசம் செய்தபோது எடுத்த படம்.
எந்த ஒரு பாரம்பரிய மடங்களுக்கும் குருசிஷ்ய பரம்பரை விச்சின்னம் ஏற்பட்டால் புனருத்தாரணம் செய்து வைப்பது ஸ்ரீ ஆதிசங்கரரின் சிம்ஹாஸனமான காமகோடி பீடம் ஸ்ரீ பெரியவாள் தான். இவர்கள் ஆதிசங்கரரின் நேர் பரம்பரை பரம்பரையாக வருபவர்கள். அனைவருக்கும் குருபீடம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர

அன்பார்ந்த இந்துசமயமன்றம் அன்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

பெண்களை சக்தி தெய்வமாக வழிபடுவது, அவர்களை உயர்வாக மதிப்பதுதான் இந்து கலாச்சாரம். அதன் வெளிப்பாடுதான் கல்விக்கு சரஸ்வதிதேவி, செல்வத்திற்கு மஹாலக்ஷ்மி, வீரத்திற்கு துர்காதேவி என ஆதிபராசக்திதேவியை உருவகப்படுத்தி நவராத்திரியில் பூஜிக்க இந்து சம்ப்ரதாயம் வழிப்படுத்தியுள்ளது. பெண்களே ஒரு இல்லத்தின் ஆக்கசக்தி. அதனாலேயே கன்யா பூஜை, சுமங்கலி பூஜை என பெண்களை பூஜிக்கிறோம். பெண்கள் கண்ணில் கண்ணீர் வழியாமல் காக்கவேண்டும் என மனுஸ்மிருதி கூறுகிறது. எனவே இந்த சரஸ்வதி பூஜை புனிதநாளில் மகளிரை மதிப்போம். மஹாசக்தியே மகளிர் என போற்றுவோம்!

வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன்ஜி

வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன்ஜி அவர்கள் இந்துதர்மத்திற்காகவும் நமது இந்து கலாச்சார பண்பாட்டிற்காகவும் பெரிதும் பாடுபட்ட உன்னத மனிதர். அவர் மறைவு இந்து சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். இந்துசமுதாயத்தின் போர்வாளாகத்திகழ்ந்த அன்னாரை நாம் நன்றியுடன் என்றும் நினைவுகூரவேண்டும்.
ஸ்ரீராமகோபாலன்ஜி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளை இந்துசமயமன்றம் காணிக்கை ஆக்குகிறது. அன்னாரை இழந்து வாடும் இந்துமுன்னணியினருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பாரத தேசத்தின் பெருமைமிகு பிரதம மந்திரியும், தூய தேசபக்தரும், இம்மண்ணின் தவப்புதல்வருமான ஸ்ரீநரேந்திர தாமோதர்தாஸ் மோதிஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இந்துசமயமன்றம்.

அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீவிநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி!

‘ஸ்ரீக்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ‘

பகவான் ஸ்ரீமன்நாராயணனின் பூர்ணாவதாரம் ஸ்ரீகிருஷ்ணன். தன் ஸங்கல்பமான தர்ம ஸ்தாபனத்திற்காக மஹாபாரதப்போரை நடத்தினார். கீதையை உபதேசித்த மஹாகுரு அவர். அதர்மத்தை வேரோடு அழித்தார். அதே சமயத்தில் தன்னை நேசித்த கள்ளங்கபடமற்ற பக்தர்களை, கோபிகைகளை ஆனந்தம் கொள்ளுமாறு பல லீலாவினோதங்களைச்செய்தார். மதுராதிபதே மதுரம் என பாடுவதுபோல மதுரமுரளியாக வலம் வந்தார். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த அவன் பால லீலைகள் எப்போதும் நம்மை மகிழ்விக்கிறது. கண்ணன் அவதரித்த
திருநாளில் அவரை போற்றி கொண்டாடுவோம். தர்மத்தின்படி நடப்போம். சனாதன இந்து தர்மத்தை காப்போம்!
அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்!
இவண்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

ஸ்ரீகுமார குரவே நம!

இன்று சங்கடஹர சதுர்த்தி (07.08.2020) ஆடி வெள்ளிக்கிழமை டிபன்ஸ்காலனி அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் பாராயணம் நமது இந்துசமயமன்ற அன்பர்கள் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்றது. 108 ஆவிருத்தி பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீவள்ளி தேவயானை அம்பிகைகளுடன் ஸ்ரீசிவசுப்ரமணியஸ்வாமி உற்சவ மூர்த்திக்கு ஆறு முறை ஆறுவிதமான நைவேத்தியம் சமர்ப்பித்து உலக நலனை வேண்டி, கொடுந்தொற்றுநோய் ஒழிய வேண்டி ப்ரார்த்தித்து வேதோக்தமாக புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

ஸ்ரீராமஜன்மபூமி பூமிபூஜை

ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி திருக்கோயில் கர்பக்ருஹத்தின் முக்யமான இடத்தை நிர்ணயித்துச் செய்யப்படும் சங்கு ஸ்தாபனத்திற்கு ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானத்தின் அருட்கொடை…
காஞ்சி ஸ்ரீசங்குபாணி வினாயகர் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கருங்காலி மரத்தினாலான சங்கு எனப்படும் ஸ்தூபியைப் போன்ற அமைப்பு, யந்த்ரம், பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்களால் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமத்ராமாயண வரிகள் பொறிக்கப்பட்ட வெள்ளித் தகடு ஆகியன பலவும் அயோத்தியில் பூஜா ஸ்தலத்தில் தற்போது தயாராக வைக்கப்பட்டிருக்கும் காட்சி….

ஜெய் ஸ்ரீராம்

அயோத்தியில் ஸ்ரீராமபிரான் ஆலயம் எழுப்ப பெருமுயற்சி எடுத்த ஸ்ரீகாஞ்சி புதுப்பெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்தி திருநாளில் அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா!
போற்றி ஜகத்குருவின் திருவடிகள்!
போற்றி ஸ்ரீராமன் திருப்பாதம்!
இவண்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு