காஞ்சிப்பெரியவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நம்மைவிட்டு பிரிந்த துயரம் நீங்காத நிலையில் இன்று ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் ( ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் ) ஆசார்யன் திருவடியடைந்தார் என்பது நமக்கு பெருந்துயரத்தையே தருகிறது. ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் சிறந்த வேத விற்பன்னர்கள் மட்டுமல்ல நம் தாய்மொழி தமிழில் நிகரில்லா புலமையுடையவர்கள். தமிழாசிரியராக பலருக்கும் அன்னை தமிழை போதித்தவர்கள். அனைவரிடமும் சிரிக்க சிரிக்க பேசி ஆன்மீக சிந்தனைகளைத்தூண்டியவர்கள். அவருக்கு முன்னிருந்த இரண்டு ஆசார்யர்களின் பேரன்பைப்பெற்றவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் இணையற்ற மஹான் இன்று வைகுண்ட வாசத்திற்கு பயணப்பட்டாலும் அவர் காட்டிய நெறிகள் அவர்தம் சீடர்களுக்கு மட்டுமல்ல சனாதன ஹிந்துக்களுக்கு ஒரு தீபமாக வழிகாட்டும் என்பது திண்ணம். இந்து சமய மன்றம் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் திருமலரடிகளுக்கு அஞ்சலி மலர்களை ஹ்ருதயபூர்வமாக சமர்ப்பித்து நமஸ்கரிக்கிறது.
நேற்று ஸ்ரீமடத்தில் ஸ்ரீஆசார்யாள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் நடத்திய பூஜை
ஸ்ரீபுதுப்பெரியவா அதிஷ்டானம் மற்றும் திருவுருவம்
சிவபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம்
இன்று இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீநந்தி சித்தர் பீடம் சார்பில் சிவபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம் கூடுவாஞ்சேரி அருள்மிகு ஸ்ரீமாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் சந்நிதியில் நடைபெற்றது. நமது குழுவினர் சார்பில் மேற்படி ஆலயத்தில் நடத்தப்பெற்ற முதல் நிகழ்ச்சி இது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு நடந்த ஸ்ரத்தாஞ்சலி – நாள் 17.3.18
Balaperiyava’s birthday
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபத்யத்தை அலங்கரிக்கும், “ஸ்ரீபாலப்பெரியவா” என்று பக்தர்களால் அன்புடன் பக்தியுடன் அழைக்கப்பெறும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு ஸ்வாமிகளின் அவதாரத்திருநாளில் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஹ்ருதயபூர்வமான நமஸ்காரங்களை ஸ்வாமிகளின் பொன்னார் திருவடிகளில் சமர்ப்பிக்கிறது.
































